search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murali Vijay"

    இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் முரளி விஜய், கருண் நாயர் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #INDA
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இதில் ரகானே, முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தற்போது இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடி வருகிறது. நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் மூன்று பேரும் இடம்பிடித்துள்ளனர்.

    நேற்று அணி அறிவிக்கப்படும் முன்பே முரளி விஜய் மற்றும் ரகானே ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கு முன்னோட்டாக இந்த போட்டியில் கலந்து கொண்டனர். கருண் நாயர் ஏற்கனவே இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடி வருகிறார்.

    கடந்த 16-ந்தேதி இந்த போட்டி தொடங்கியது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் 423 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ‘ஏ’ அணி 197 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 62 ரன்களும், ரகானே 49 ரன்களும், ரிஷப் பந்த் 58 ரன்கள் சேர்த்தனர். ஆனால் முரளி விஜய் 8 ரன்களிலும், கருண் நாயர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் இங்கிலாந்து லயன்ஸ் 2-வது இன்னிங்சில் 194 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    421 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த பிரித்வி ஷா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அதேபோல் முரளி விஜய் 5 பந்துகள் சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கருண் நாயர் 13 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளனர். லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறக்கப்படாவிடில் முரளி விஜய் தொடக்க வீரராக களம் இறங்குவார். இந்த நிலையில் மோசமான ஆட்டம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    கருண் நாயருக்கு ஆடும் லெவன் அணியில் இடம்கிடைப்பது சந்தேகமே. முதல் இன்னிங்சில் 49 ரன்னில் ஆட்டமிழந்த ரகனே, 2-வது இன்னிங்சில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்கள். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் உடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் எசக்ஸ் அணிக்கெதிராக ஜூலை 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இரண்டு பேரும் தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறாததால் அவர்கள் இங்கிலாந்து செல்லவில்லை. அதேவேளையில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றி வாகை சூடியது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒன்றில் டிரா, ஒன்றில் வெற்றி கண்டுள்ளது. நாளை இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்தது விளையாடுகிறது.

    இந்தியா ‘ஏ’ அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் முன் தேர்வாளர்கள் டிராவிட்டிடம் ஆலோசனை கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட முடிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம்பிடிக்க எளிதாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளனர்.

    இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது முரளி விஜய், ரகானே ஆகியோர் சதம் அடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    தவான், விஜய் சதத்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்துள்ளது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகிய மூன்று தொடக்க வீரர்களும் இடம்பிடித்தனர்.

    தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் முதல்நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே சதம் அடித்து அசத்தினார்.

    தவான் சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 27 ஓவரில் 158 ரன்கள் குவித்திருந்தது. தவான் 104 ரன்னுடனும், முரளி விஜய் 41 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், தவான் 107 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு தவான்- முரளி விஜய் ஜோடி 28.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது.

    2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதன்பின் விஜய் தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். முரளி விஜய் சத்ததை நெருங்கிய நேரத்தில் மழை குறுக்கீட்டது. இதனால் இந்தியா 45.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்கள் எடுத்திருந்தார்.



    மழை நீடித்ததால் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் 99 ரன் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் முரளி விஜய் 143 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் இந்தியாவின் ஸ்கோர் 105 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். 280 ரன்னில் இந்த ஜோடி பிரிந்தது.



    அதன்பின் வந்த புஜாரா 35 ரன்னிலும், ரகானே 10 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். சுமார் 8 வருடத்திற்குப் பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஹர்திக் பாண்டியா 10 ரன்னுடனும், அஸ்வின் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



    ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 2 விக்கெட்டும், வாஃபாதர், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. 1 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 64 பந்தில் 50 ரன்னைத் தொடடது. தவான் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 19.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    தொடக்க வீரர் தவான் 87 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். இவரது சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 27 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் குவித்தது. தவான் 104 ரன்களுடனும், முரளி விஜய் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தவான் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை யாமின் அஹ்மத்சாய் வீசினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய என்ற வீரர் பெருமையை பெற்றார்.



    அடுத்து முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் சதத்தை நெருங்கிய வேளையில் மழை குறுக்கீட்டது.

    இதனால் இந்தியா 45.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் தேனீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்களும், லோகேஷ் ராகுல் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.
    இங்கிலாந்து நாட்டில் அந்நாட்டுக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க உடல் மட்டுமின்றி மனதளவிலும் பலமாக இருப்பது அவசியம் என இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். #INDvENG #MuraliVijay #ENGvIND


    இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அப்போது அந்நாட்டு அணியுடன் 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் பிரகாசிக்க உடல் மட்டுமின்றி மனதளவிலும் பலமாக இருப்பது அவசியம் என இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், வெளியே சென்று நம்மை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அளிக்கிறது. அது நிச்சயமாக ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக இருக்கும், அதைத்தொடர்ந்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து தொடருக்கான உத்திகள் தொடங்கும். ஆப்கானிஸ்தான் ஒரு தரமான அணி, டெஸ்ட் போட்டி எந்த ஒரு வீரருக்கும் சவாலாக இருக்கும். 

    சிறந்த வீரர்களும் இங்கிலாந்து மைதானங்களில் விளையாட கஷ்டப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலைகளில் ரன்கள் எடுப்பது ஒரு மனநிலை சம்பந்தப்பட்ட விளையாட்டு மற்றும் நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். உங்கள் நேரத்தை செலவழிப்பது முக்கியம், உங்களை நம்புங்கள், ரன்கள் தானாக வரும். என் வாழ்க்கை முழுவதும் நான் அதை தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

    தனிப்பட்ட விளையாட்டை விட போட்டியை வெல்வதே முக்கியம் என அனைவரிடமும் நான் கூறி வருகிறேன். நாம் நன்றாக விளையாடிய பின், இறுதியில் நமது அணி தோல்வியடைந்தால் அது மகிழ்ச்சியாக இருக்காது. இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்காக ஒரு சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது அட்டவணையை சார்ந்தது, எப்படி இருந்தாலும் சமாளித்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #INDvENG #MuraliVijay #ENGvIND
    ×