search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobile Phone"

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 106 ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் போன் அந்நிறுவனம் 2013ல் அறிமுகம் செய்திருந்த நோக்கியா 106 மாடலின் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆகும். புதிய நோக்கியா 106 (2018) மாடலில் 1.6 இன்ச் 160×128 பிக்சல் TFT டிஸ்ப்ளே, 4-வழி நேவிகேஷன் பட்டன் மற்றும் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பாலிகார்போனேட் பாடி, கான்டொர்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா மொபைலில் அந்நிறுவனத்தின் பாரம்பரிய ஸ்னேக் கேம், முற்றிலும் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் நைட்ரோ ரேசிங், டேன்ஜர் டேஷ், டெட்ரிஸ் மற்றும் பல்வேறு இதர கேம்கள் பிரீ-லோடு செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 106 (2018) அம்சங்கள்:

    - 1.8-இன்ச் QQVGA (160×128 பிக்சல் ) கலர் TFT டிஸ்ப்ளே
    - மீடியாடெக் 6261D பிராசஸர்
    - 4 எம்.பி. ரேம்
    - டூயல் பேன்ட், EGSM 900/1800
    - எஃப்.எம். ரேடியோ
    - கேம்கள்
    - ஃபிளாஷ்லைட்
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 3.5 எம்.எம். ஏ.வி. கனெக்டர்
    - 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய நோக்கியா 106 (2018) டார்க் கிரே நிறத்தில் கிடைக்கிறது. முதற்கட்டமாக ரஷ்யாவில் விற்பனைக்கு வரும் புதிய நோக்கியா போன் விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இதன் விலை 1590 ரூபில்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.1,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    யு.டி.எஸ். சேவை மூலம் இந்தியா முழுவதும் பயணிகள், எக்ஸ்பிரஸ் என எல்லாவித ரெயில்களிலும் முன்பதிவில்லா டிக்கெட்டை தங்களது செல்போனிலேயே பயணிகள் உடனடியாக எடுக்கலாம். #SouthernRailway #OnlineTicket
    சென்னை:

    செல்போன் மூலம் காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதி, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இந்த வசதி செயல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் சென்னை முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் இந்தியா முழுவதும் இந்த யு.டி.எஸ். சேவை இன்று (வியாழக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் காகிதமில்லா டிக்கெட் சேவையை பயன்படுத்த குறிப்பிட்ட ரெயில் நிலையம் 5 கி.மீ.க்குள் அமைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்தியா முழுவதும் பயணிகள், எக்ஸ்பிரஸ் என எல்லாவித ரெயில்களிலும் முன்பதிவில்லா டிக்கெட்டை தங்களது செல்போனிலேயே பயணிகள் உடனடியாக எடுக்கலாம்.

    இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #SouthernRailway #OnlineTicket 
    திருப்பூரில் வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கருவம்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 22). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி மதியம் ஆலங்காடு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென்று அருண்குமாரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.

    இதுகுறித்து அருண்குமார் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆலங்காடு பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் செல்போனை பறித்துச்சென்ற ஆசாமிகளின் உருவம் சிக்கியது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நடராஜா தியேட்டர் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அருண்குமாரிடம் செல்போன் பறித்து சென்றவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களை மத்திய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சாமுண்டிபுரத்தை சேர்ந்த நாகராஜன்(19), 15 வேலம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்குமார்(19), மடத்துக்குளம் ருத்ராபாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(20) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 8110 4ஜி மொபைல் போனினை அறிமுகம் செய்தது. #Nokia8110



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8110 4ஜி ஃபீச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    முன்னதாக இந்த மொபைல் போன் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நோக்கியா மொபைலில் 2.4 இன்ச் QVGA வளைந்த டிஸ்ப்ளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் ஸ்லைடரை பயன்படுத்தலாம்.

    நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 8110 4ஜி சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் 320x24 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் 2015 பிராசஸர்
    - அட்ரினோ 304 GPU
    - 512 எம்.பி. ரேம்
    - 4 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கை ஓ.எஸ். சார்ந்த ஸ்மார்ட் அம்சம்
    - 2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - ட்ரிப் பாதுகாப்பு (IP52)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 2.0
    - 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 8110 4ஜி மொபைல் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய நோக்கியா மொபைல் விலை ரூ.5,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 24-ம் தேதி முதல் ஆஃப்லைன் விற்பனை மையம் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில் நடைபெற இருக்கிறது.
    இந்தியாவில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ஜியோபோன் 2 அடுத்த விற்பனை அக்டோபர் 4-இல் நடைபெற இருக்கிறது. #jiophone2



    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்றது.

    ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை அக்டோபர் 4-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலைககளில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.

    முன்னதாக கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,500 செலுத்தி ஜியோபோன் வாங்கியதும் மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கியதும் முன்பணத்தை திரும்ப பெறலாம். புதிய ஜியோபோன் 2 வாங்குவோருக்கு இதுவரை இதுபோன்ற சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.



    ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச்,320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - டூயல் கோர் பிராசஸர்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 2 எம்பி பிரைமரி கேமரா
    - 0.3 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    சமீபத்தில் ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் செயலி பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றவற்றையும் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone2 #reliancejio
    டீடெல் நிறுவனத்தின் மூன்று புதிய மொபைல் போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #mobilephones



    டீடெல் நிறுவனம் மூன்று புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டி1 வைப், டி1 பல்ஸ் மற்றும் டி1 ஷைன் என அழைக்கப்படும் புதிய ஃபீச்சர்போன்களில் வயர்லெஸ் எஃப்.எம். மற்றும் லைவ் எஃப்.எம். அலாரம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    டீடெல் வைப் வைட்/புளு, வைட்/கிரீன், பிளாக்/கிரீன், பிளாக்/பிரவுன் போன்ற நிறங்களிலும், டீடெல் பல்ஸ் மொபைல்போன் பிளாக்/புளு, பிளாக்/கிரீன், பிளாக்/கிரெ, பிளாக்/ரெட் மற்றும் பிளாக்/எல்லோ போன்ற நிறங்களிலும், டீடெல் ஷைன் காஃபி மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    மூன்று ஃபீச்சர் போன்களும் ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. இவற்றை பயனர்கள் டீடெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.

    புதிய ஃபீச்சர் போன்களில் 1.77 இன்ச் டிஸ்ப்ளே ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க டிஜிட்டல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், டீடெல் வைப் மாடலில் மட்டும் எல்.இ.டி. ஃபிளாஷ்லைட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று மொபைல்களிலும் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 1050 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    இத்துடன் மேம்படுத்தப்பட்ட பேட்டரி செயல்திறன் வழங்க ஏகுவாக புதிய மொபைலில் பவர் சேவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆக்டிவேட் செய்ய 0 பட்டனை அழுத்திப்பிடிக்க வேண்டும். இந்த மொபைல்களில் பல்வேறு  மொழிகளில் இயக்க முடியும் என்பதால், பயனர்கள் தங்களது சொந்த மொழியில் டைப் செய்ய வேண்டும்.

    வயர்லெஸ் எஃப்.எம். அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க முடியும். இத்துடன் லைவ் எஃப்.எம். வசதி வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் ரேடியோ நிகழ்ச்சிகளை தவற விட வேண்டிய அவசியம் இருக்காது. இத்துடன் ஷெட்யூல்டு ரெக்கார்டிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய டீடெல் போன்களில் அதிகபட்சம் 800 கான்டாக்ட்களை பதிவு செய்து கொள்ளவும், 100 குறுந்தகவல்களை பதிவு செய்ய முடியும். கூடுதல் அம்சங்களாக ஆட்டோ கால் ரெக்கார்டிங், வீடியோ ரெக்கார்டிங், சவுன்டு ரெக்கார்டிங், டார்ச், ஆடியோ, வீடியோ பிளேயர், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்கள், எஸ்.எம்.எஸ். மற்றும் புளூடூத் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மூன்று மாடல்களிலும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு பிரச்சாரத்தின் அங்கமாக புதிய மொபைல் போன்களில் பேனிக் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தினால் அவசர காலத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணிற்கு தகவல் வழங்கப்படும்.

    இந்தியாவில் டீடெல் டி1 வைப், டி1 பல்ஸ் மற்றும் டி1 ஷைன் மாடல்களின் விலை முறையே ரூ.820, ரூ.830 மற்றும் ரூ.810 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #smartphone



    இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்டெக்ஸ் இந்தியாவில் ஸ்டார்ஐ 11 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் இன்டெக்ஸ் இரண்டு செல்ஃபி கேமராக்களை வழங்கி இருக்கிறது. அதன்படி இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 மாடலில் 8 எம்.பி. மற்றும் 2 எம்.பி. செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 8 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமரா யூனிட்களிலும் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 சிறப்பம்சங்கள்

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. + 2 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ஸ்டார்ஐ 11 மாடலின் விலை ரூ.4,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 நான்காவது ஃபிளாஷ் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jiophone2



    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதுவரை மூன்று ஃபிளாஷ் விற்பனை நிறைவுற்று இருக்கிறது. அந்த வகையில் ஜியோபோன் 2 நான்காவது ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர் 12-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

    ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.



    ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச்,320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - டூயல் கோர் பிராசஸர்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 2 எம்பி பிரைமரி கேமரா
    - 0.3 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜியோ சார்பில் மான்சூன் ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டது. 

    முன்னதாக டெய்ரி மில்க் சாக்லேட் வாங்குவோருக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் டெய்ரி மில்க் சாக்லேட் கவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இலவசமாக 1 ஜிபி டேட்டா பெற முடியும். #jiophone2 #reliancejio
    ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #jiophone2



    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்றது.

    ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர் 6-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 



    இந்தியாவில் ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலைககளில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.

    முன்னதாக கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,500 செலுத்தி ஜியோபோன் வாங்கியதும் மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கியதும் முன்பணத்தை திரும்ப பெறலாம். புதிய ஜியோபோன் 2 வாங்குவோருக்கு இதுவரை இதுபோன்ற சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.



    ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச்,320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - டூயல் கோர் பிராசஸர்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 2 எம்பி பிரைமரி கேமரா
    - 0.3 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    சமீபத்தில் ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் செயலி பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றவற்றையும் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone2 #reliancejio
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 இரண்டாவது ஃபிளாஷ் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விற்பனை ஜியோ அதிகாரப்பூர்வ தளத்தில் நடைபெற்றது. #JioPhone2


    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் விற்பனை நேற்று (ஆகஸ்டு 16-ம் தேதி) நடைபெற்றது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டது.

    ஜியோபோன் 2 இரண்டாவது ஃபிளாஷ் விற்பனை ஆகஸ்டு 30-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. 

    இந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலைககளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

    முன்னதாக கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,500 செலுத்தி ஜியோபோன் வாங்கியதும் மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கியதும் முன்பணத்தை திரும்ப பெறலாம். புதிய ஜியோபோன் 2 வாங்குவோருக்கு இதுவரை இதுபோன்ற சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.



    ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச்,320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - டூயல் கோர் பிராசஸர்
    - 512 எம்பி ரேம்
    - 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 2 எம்பி பிரைமரி கேமரா
    - 0.3 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜியோ சார்பில் மான்சூன் ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டது. 

    சமீபத்தில் ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் செயலி பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றவற்றையும் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone2 #reliancejio
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 2018 இரண்டாவது காலாண்டில் சியோமி நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. #1SmartphoneBrand


    ஐ.டி.சி. இந்தியாவினஅ காலாண்டு மொபைல் போன் விற்பனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி 2018 இரண்டாவது காலாண்டில் மொத்தம் 3.35 கோடி ஸ்மார்ட்போன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய மொபைல் சந்தை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 20% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. பல்வேறு ஸ்மார்ட்போன்கள் ஆன்லைனில் மட்டும் விற்பனையானதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    2018 மொபைல் போன் சந்தையின் 79% பங்குகளை முதல் ஐந்து இடங்களை பிடித்த நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு முடிவுகளின் படி சாம்சங் நிறுவனம் சியோமியை முந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐடிசி முற்றிலும் முரணான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

    இந்திய சந்தையில் தொடர்ந்து முதலிடம் பிடித்திருக்கும் சியோமி, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளது. சியோமியின் மொத்த விற்பனையில் ஆன்லைன் மட்டும் 56% மற்றும் 33% ஆஃப்லைன் மூலமாகவும் கிடைத்திருக்கிறது.



    ஆன்லைன் பிரிவில் ஹூவாய் ஹானர் பிரான்டு தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இதுவரை இல்லாத அளவு 8% வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. மற்ற நிறுவனங்களை பொருத்த வரை ஒன்பிளஸ் 6, ரியல்மி 1, அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ சீரிஸ் போன்றவை ஆன்லைனில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டன. இவை அனைத்தும் ஆன்லைன் சந்தையின் 44% வளர்ச்சிக்கு வித்திட்டது. இதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் வளர்ச்சி 36% ஆக அதிகரித்துள்ளது.

    ஆஃப்லைனை பொருத்த வரை விவோ அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. உயர் ரக ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விற்பனை இந்த காலாண்டில் முந்தைய ஆண்டை விட இருமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் 6 மாடல்கள் இருக்கின்றன.

    ஃபீச்சர்போன் விற்பனையை பொருத்த வரை 2018 இரண்டாவது காலாண்டில் 4.4 கோடி யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. 4ஜி ஃபீச்சர் போன் பிரிவில் ஜியோபோன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியதால், 2017-ஐ விட மொபைல் போன் விற்பனை 29% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #1SmartphoneBrand
    ஆப்பிள் உள்பட பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் புதிய உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #EuropeanUnion #Apple


    ஆப்பிள் நிறுவன ஐபோன்கள், பல்வேறு நிறுவனங்களின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு விதமான மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் கேபிள்கள் அந்தந்த நிறுவனத்தின் விருப்பப்படி அவர்களது சாதனங்களில் வழங்கி வருகின்றன.

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் விரைவில் சில மாற்றங்களை அமல்படுத்த இருக்கிறது. அந்த வகையில் சர்வதேச மொபைல் போன் சந்தையில் உற்பத்தியாகும் மொபைல்களுக்கு பொதுவான சார்ஜிங் போர்ட்டை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் மொபைல் போன் நிறுவனங்களை பொதுப்படையான மொபைல் சார்ஜிங் போர்ட்களை உற்பத்தி செய்ய பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த ஐரோப்பிய யூனியன், இம்முறை நிரந்தர தீர்வை எட்டும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் உலகில் 51,000 டன் மின்சாதன கழிவு தேங்குவதே ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மக்கள் புதிய சாதனங்களை பயன்படுத்த துவங்கும் போது பழைய மொபைல் போன் சார்ஜர்களை வீசிவிடுகின்றனர். மேலும் இது நுகர்வோருக்கு பாதகமாக இருப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.



    முன்னதாக ஆப்பிள், சாம்சங், நோக்கியா மற்றும் ஹூவாய் என மொத்தம் 12 பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பொதுப்படையான மொபைல் சார்ஜர்களை உற்பத்தி செய்ய 2009-ம் ஆண்டிலேயே ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டிருந்தது. எனினும் இதுவரை எந்த நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.

    மொபைல் போன் நிறுவனங்கள் இதற்கு முறையாக செவிசாய்க்காததால் ஐரோப்பிய யூனியன் இம்முறை கடின முடிவுகளை எடுக்க இருக்கிறது. முறையான அணுகுமுறைக்கு சரியான தீ்ர்வு கிடைக்காததால், யூனியன் விரைவில் வெவ்வேறு ஆப்ஷன்களை செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு கட்டணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட உள்ளது.

    தற்சமயம் மொபைல் போன்களில் மிகவும் பிரபலமாகவும், எதிர்காலத்திற்கும் சிறப்பானதாக தெரியும் மொபைல் சார்ஜிங் கேபிள் மற்றும் ஸ்லாட்டாக யு.எஸ்.பி. டைப்-சி இருக்கிறது. இதனால் ஐரோப்பிய யூனியன் யு.எஸ்.பி. டைப்-சி ரக சார்ஜர்களை பொதுப்படையாக அறிவித்து, ஐரோப்பிய யூனியனில் விற்பனையாகும் மொபைல்களில் யு.எஸ்.பி. டைப்-சி அவசியம் இருக்க வேண்டும் என உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.

    இதுபோன்ற சூழலில் ஆப்பிள் நிறுவனமும் தனது சாதனங்களில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். பின் ஐபோன்களில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்குவதை தவிர வேறு வழியிருக்காது. #EuropeanUnion #Apple
    ×