search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அதிக பேட்டரி பேக்கப் கொண்ட மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம்
    X

    அதிக பேட்டரி பேக்கப் கொண்ட மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம்

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 106 ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் போன் அந்நிறுவனம் 2013ல் அறிமுகம் செய்திருந்த நோக்கியா 106 மாடலின் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆகும். புதிய நோக்கியா 106 (2018) மாடலில் 1.6 இன்ச் 160×128 பிக்சல் TFT டிஸ்ப்ளே, 4-வழி நேவிகேஷன் பட்டன் மற்றும் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பாலிகார்போனேட் பாடி, கான்டொர்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா மொபைலில் அந்நிறுவனத்தின் பாரம்பரிய ஸ்னேக் கேம், முற்றிலும் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் நைட்ரோ ரேசிங், டேன்ஜர் டேஷ், டெட்ரிஸ் மற்றும் பல்வேறு இதர கேம்கள் பிரீ-லோடு செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 106 (2018) அம்சங்கள்:

    - 1.8-இன்ச் QQVGA (160×128 பிக்சல் ) கலர் TFT டிஸ்ப்ளே
    - மீடியாடெக் 6261D பிராசஸர்
    - 4 எம்.பி. ரேம்
    - டூயல் பேன்ட், EGSM 900/1800
    - எஃப்.எம். ரேடியோ
    - கேம்கள்
    - ஃபிளாஷ்லைட்
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 3.5 எம்.எம். ஏ.வி. கனெக்டர்
    - 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய நோக்கியா 106 (2018) டார்க் கிரே நிறத்தில் கிடைக்கிறது. முதற்கட்டமாக ரஷ்யாவில் விற்பனைக்கு வரும் புதிய நோக்கியா போன் விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இதன் விலை 1590 ரூபில்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.1,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×