search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்
    X

    இந்தியாவில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 8110 4ஜி மொபைல் போனினை அறிமுகம் செய்தது. #Nokia8110



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8110 4ஜி ஃபீச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    முன்னதாக இந்த மொபைல் போன் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நோக்கியா மொபைலில் 2.4 இன்ச் QVGA வளைந்த டிஸ்ப்ளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் ஸ்லைடரை பயன்படுத்தலாம்.

    நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 8110 4ஜி சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் 320x24 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் 2015 பிராசஸர்
    - அட்ரினோ 304 GPU
    - 512 எம்.பி. ரேம்
    - 4 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கை ஓ.எஸ். சார்ந்த ஸ்மார்ட் அம்சம்
    - 2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - ட்ரிப் பாதுகாப்பு (IP52)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 2.0
    - 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 8110 4ஜி மொபைல் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய நோக்கியா மொபைல் விலை ரூ.5,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 24-ம் தேதி முதல் ஆஃப்லைன் விற்பனை மையம் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில் நடைபெற இருக்கிறது.
    Next Story
    ×