search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "militants killed"

    சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.#SomaliaMilitants
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.
     
    உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த பயங்கரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர்.



    இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகேயுள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது நேற்று சோமாலியா அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகனில் இருந்து வெளியாகும்  செய்திகள் தெரிவிக்கின்றன. #SomaliaMilitants
    ரஷியா நாட்டின் வடக்கு கவுகாசஸ் பகுதியில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருவரை தேடுதல் வேட்டையின்போது சிறப்புப்படை போலீசார் சுட்டுக் கொன்றனர். #TwoIslamicstatemilitants #Russiacounterterrorism
    மாஸ்கோ:

    சிரியா மற்றும் ஈராக் நாட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரை உலகின் சில நாடுகளில் உள்ள அனுதாபிகள் ரகசியமாக ஆதரிப்பதுடன் அவ்வியக்கத்தின் கைக்கூலிகளாக மாறி உள்நாட்டில் வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

    அவ்வகையில், பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் சில ஐ.எஸ். பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

    இதன்தொடர்ச்சியாக, ரஷியாவின் கஸ்வியூர்ட் பகுதிக்கு உட்பட்ட மசூதி மீது கடந்த ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருக்கும் கிராமங்களை சேர்ந்த ஒரு இமாம் மற்றும் இன்னொருவரை படிகொலை செய்துள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இரு போலீஸ் அதிகாரிகளையும் இவர்கள் கொன்றனர். 

    இந்த படுகொலைகளுக்கு காரணமான இரு பயங்கரவாதிகள் ரஷியாவின் வடக்கு கவுகாசஸ் பகுதிக்கு உட்பட்ட என்டிரேய் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத சிறப்பு படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, அந்த கிராமத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்துக்குரிய வீட்டை முற்றுகையிட்டனர். அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் அருகாமையில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    போலீசார் சுற்றிவளைத்து விட்டதை தெரிந்துகொண்ட பயங்கரவாதிகள் உள்ளே இருந்தபடி அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் மூன்றுபேர் காயமடைந்தனர்.

    போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் அந்த வீட்டினுள் பதுங்கி இருந்த இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதன்மூலம் அப்பகுதியில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அனைவரும் தீர்த்துக்கட்டப்பட்டதாகவும் ரஷிய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #TwoIslamicstatemilitants #Russiacounterterrorism
    காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #HandwaraEncounter
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் தெற்கில் அமைந்துள்ள ஹந்த்வாராவில் சத்கண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.



    அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    விசாரணையில், அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பி ஹெச் டி பட்டம் முடித்ததும் தெரிய வந்தது.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து. அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #HandwaraEncounter
    எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.#Egypt #MilitantsKilled
    கெய்ரோ:

    எகிப்து நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வன்முறைக் களமாக மாறியுள்ளது. குறிப்பாக, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இந்த பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
     
    எதிர்பாரா வகையில் வாகனங்களில் கும்பலாக வரும் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த வன்முறையாட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், இப்பகுதியில் பதுங்கியுள்ள அதிபயங்கர தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் எகிப்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 26 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆய்தங்க்ள் பறிமுதல் செய்யப்பட்டன என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #Egypt #MilitantsKilled
    அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் சோமாலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 18 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர்.
    வாஷிங்டன்:

    சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.

    இந்நிலையில், சோமாலியா நாட்டின் கிஸ்மயோ நகரின் லோயர் ஜுபா பகுதியில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா இன்று வான்வெளி தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் சுமார் 18 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Tamilnews
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பன்டிப்போரா மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோடு வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #LeTmilitants #LeTmilitantskilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,பன்டிப்போரா மாவட்டத்தில் உள்ள எல்லைகோட்டுப் பகுதியில் வழக்கம்போல் நேற்றிரவு இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இங்குள்ள வனப்பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.

    அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் நேற்றிரவு இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், ஏற்கனவே பன்டிப்போரா எல்லைகோட்டுப் பகுதி வழியாக நுழைந்து பிற இடங்களுக்கு தப்பிச் செல்ல முயன்ற மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #LeTmilitants #LeTmilitantskilled
    ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #Kulgam
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் சவுகாமில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    இரவு முழுவதும் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 5 பயங்கரவாதிகள் அந்த வீட்டிற்குள் இருக்கலாம் என தெரியவந்துள்ளதால் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.



    தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருவதால், பாரமுல்லா-காசிகந்த் பாதையில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் ஜம்மு பிராந்தியத்தில் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter #Kulgam

    ஜம்மு காஷ்மீரின் பன்டிப்போராவில் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் தனது இன்னுயிரை இழந்தார். #Bandiporaencounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர் ஷிவகுமார் தனது இன்னுயிரை இழந்து வீர மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Bandiporaencounter
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்போரா மாவட்டத்தில் இன்று 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #3militantskilledinBandipora #Bandiporaencounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அம்மாநிலத்தை சேர்ந்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, இன்று அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி அதிநவீன இயந்திர துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தொடர்ந்து அங்கு இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா இன்றிரவு தெரிவித்துள்ளார். #3militantskilledinBandipora  #Bandiporaencounter
    காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #KashmirAttack #Bandipora
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்கு சென்றனர். பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    பாதுகாப்பு படையினர் சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநில போலீசார் 3 தரப்பினரும் இந்த அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #KashmirAttack #Bandipora
    ஈராக்கில் முன்னாள் எம்.பி. வீட்டில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் சன்னி இனத்தை சேர்ந்த பழங்குடி போராளிகள் 6 பேர் உடல் சிதறி பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். #Iraq #SuicideAttack
    திக்ரித்:

    ஈராக் நாட்டில் சலாகுதீன் மாகாணத்தின் தலைநகரான திக்ரித்துக்கு வடக்கே சிர்கத் நகரம் உள்ளது. இதையொட்டிய ஆஸ்திரா என்ற கிராமத்தில், அந்த நாட்டின் முன்னாள் எம்.பி. அத்னன் அல் கானத் வீடு உள்ளது. நேற்று அதிகாலை நேரம், இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்திய ‘பெல்ட்’ அணிந்து வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், அங்கு சென்று குண்டுகளை வெடிக்க வைத்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

    இதில் அங்கு இருந்த சன்னி இனத்தை சேர்ந்த பழங்குடி போராளிகள் 6 பேர் உடல் சிதறி பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    இருந்தபோதிலும், சம்பவம் நடந்த பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருந்து வருவதால், அவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

    சிர்கத் பகுதி 2014-ம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு அதை அமெரிக்க படைகளின் ஆதரவுடனும், பழங்குடி போராளிகளின் உதவியுடனும் ஈராக் படையினர் மீட்டு விட்டனர். ஆனாலும் அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   #Iraq #SuicideAttack #tamilnews 
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக்கொன்றனர். #JammuAndKashmir #JKEncounter
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் கில்லோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

    நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். அவனது உடல் கைப்பற்றப்பட்டது. அவன் பயன்படுத்திய ஏகே-47 துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. கொல்லப்பட்டது லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த உமர் மாலிக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.



    இந்நிலையில், கில்லோரா கிராமத்தில் இன்று நடந்த தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே மீண்டும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில், 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #JammuAndKashmir #JKEncounter

    ×