search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எகிப்து"

    • தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
    • மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்.

    பொருளாதார அழுத்தம் மற்றும் மோதல்கள் மற்றும் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஆகியவை ஐரோப்பியக் கரைகளுக்கு அதிக குடியேற்றங்களைத் தள்ளக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் பணப் பற்றாக்குறை உள்ள எகிப்துக்கு 8 பில்லியன் டாலர் உதவிப் பொதியை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெனெ் மற்றும் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரியா, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கெய்ரோவில் உள்ள ஐரோப்பிய யூனியன் மிஷன் படி, "அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கான அடுத்த மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா, எகிப்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
    • எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா பாராளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார்.

    இதற்கிடையே, அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார்.

    இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் முஸ்தபா மாட்போலி உற்சாகமாக வரவேற்றார்.

    எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எகிப்து ஹெர்ஹெடா மாகாணத்தில் செங்கடல் பகுதி அமைந்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கெய்ரோ:

    எகிப்து ஹெர்ஹெடா மாகாணத்தில் செங்கடல் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஷஹெல் ஹெஷ்ரிப் கடற்கரை சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது.

    இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது உண்டு. நேற்று விடுமுறையை கழிக்க பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக கடலில் இறங்கி குளித்தனர். சிலர் படகில் சென்று இயற்கை அழகை ரசித்தனர்.

    அப்போது கடலில் குளித்துக்கொண்டு இருந்தவர்களை சுறா திடீரென தாக்கியது. இதில் 2 பெண்கள் கடலுக்குள்ளே இறந்தனர். இதனால் அந்த பகுதி கடல் தண்ணீர் ரத்தமாக காட்சிஅளித்தது. மேலும் சிலர் சுறா தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் பயத்தால் அலறினார்கள். அவர்கள் அவசர, அவசரமாக நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை சுற்றி உள்ள கடற்கரைகளை 3 நாட்கள் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பங்குச்சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தி சுமார் 494 மில்லியன் எகிப்து பவுண்ட் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாராக்கின் 2 மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #Egypt
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் அதிபர், பிரதமர் உள்பட பல முக்கிய பதவிகளில் இருந்த ஹோஸ்னி முபாரக் தற்போது வயோதிகம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், அவரின் இரண்டு மகன்களாக அலா, கமால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த 2012-ம் ஆண்டு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எகிப்து பங்குச்சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தி சுமார் 494 மில்லியன் பவுண்ட் வரை இருவரும் மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    எகிப்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 5 பேர் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கெய்ரோ :

    எகிப்தில் இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சியை சேர்ந்த முகமது முர்சியின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற பெரும் திரளான மக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்த 2013-ம் ஆண்டு அவர் அதிபர் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டு முதல் அந்நாட்டில் ஹஸ்ம்
    எனும் கிளர்ச்சி குழு வேர் விடத்தொடங்கியுள்ளது.

    முந்தய ஆளும் கட்சியான இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சியுடன் தொடர்புடைய  ஹஸ்ம் கிளர்ச்சி குழு, எகிப்தின் அரசியல் ஸ்திரத்தனமையை குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக எகிப்து அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சி மறுப்பு தெரிவித்து வருகிறது.

    அவ்வப்போது எகிப்து பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் ஹஸ்ம் கிளர்ச்சி குழு தனக்கும் இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், தலைநகர் கெய்ரோவின் வடக்கு பகுதியில் உள்ள கல்யூபியா மாகாணத்தில் எகிப்து பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் , கொல்லப்பட்ட 5 பேரும்  ஹஸ்ம் கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்கள் என்றும் எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், கெய்ரோவிற்கு அருகில் உள்ள எல் மார்க் எனும் இடத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 5 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    எகிப்தில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 97 சதவிகித வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்ற அப்தேல் அல்சிசி இன்று அதிபராக பதவியேற்றுக் கொண்டார். #AlSisi #Egypt
    கெய்ரோ:

    எகிப்து அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதிபராக இருந்த அப்தேல் ஃபாட்டா அல்சிசி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர் சிறையில் உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இதனால், அல்சிசியை எதிர்த்து முக்கிய பிரமுகர்கள் யாரும் போட்டியிடவில்லை.

    இதனால், 97 சதவிகித வாக்குகள் பெற்று அல்சிசி அபார வெற்றி பெற்றார். இந்நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக அல்சிசி இன்று பதவியேற்றார். பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எம்.பி.க்கள் மற்றும் தனது குடும்பத்தினர் முன்னிலையில் அல்சிசி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். 
    ×