என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாரிஸ்"
- இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
- நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதினார்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், எகிப்து நாட்டு வாள்வீச்சு [Fencing] வீராங்கனை நாடா ஹபீஸ் [Nada Hafez] 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை" என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தனிநபர் பெண்கள் வாள்வீச்சு போட்டிகளில் முதலில் அமெரிக்க வீராங்கனை எலிஸபத் ட்ரக்கோவ்ஸ்க்கியுடன் விளையாடி வெற்றி பெற்ற நாடா ஹபேஸ் சுற்று 16 க்கு முன்னேறினார்.
நேற்று முன்தினம் ஜூலை 29 சுற்று 16 போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் [Jeon Hayoung] உடன் மோதிய நாடா ஹபேஸ் 15-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
- கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட்ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியிருந்தார்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார். டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரான்ஸ் வீராங்கனை பிரித்திகா பவாடேவை எதிரிகொண்ட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, 4-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு [pre-quarterfinals] முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஆடிய மறக்கமுடியாத ஆட்டமாக நேற்று நடந்த ஆட்டம் மாறியுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதி பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
- பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடங்கினர்.
- தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக அன்றைய தினம் காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைந்தது. பின்னர் பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று பிரான்ஸ் நாடு நெடுகிலும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு [டெலிகாம்] கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி பேசுகையில், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான நகரமாக மார்சில் [Marseille] உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்றுதெரிவித்துள்ளார். இதனால் நடந்துவரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நாடுகளிடையே எழுந்துள்ளது.
- ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது
- 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். விளையாட்டு என்பதையும் தாண்டி தங்களது நாடுகளின் கவுரவம் சார்ந்த மிகப்பெரிய பொறுப்பு தங்களை நம்பி கொடுக்கப்பட்டுள்ளதாக வீரர்கள் கருதுவதால் வெற்றியும் தோல்வியும் அவர்களை உணர்ச்சிவசப் பட வைத்துவிடுகிறது.
அந்த வகையில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியில் தோல்வியடைந்த ஜப்பான் வீராங்கனை யுதா அபே [Uta Abe] மனமுடைந்து அழுத்த காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது. நேற்று 52 கிலோவுக்கு உட்பட பெண்கள் ஜூடோ போட்டியில் உலகின் முதன்மை ஜுடோ வீராங்கனையாக விளங்கும் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை தியோரா கெல்டியோரோவா [Diyora Keldiyorova] உடன் ஜப்பானின் யுதா அபே விளையாடினார்.
4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற யுதா அபே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியும் இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார். இதனால் ஜூடோ மேட்டை விட்டு கதறி அழுதபடி சென்ற அபேவை அவரது பயிற்சியாளராலும் தேற்ற முடியவில்லை. 3 வருடங்களுக்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்சில் அபே தங்க மெடல் வாங்கி ஜப்பானுக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
- அவரை நோட்டமிட்டு வந்த 5 பேர் மர்ம நபர்களிடம் அதிகாலை 5 மணியளவில் பெண் தனியாக ஒரு இடத்தில் சிக்கியுள்ளார்.
- பெண்ணை துரத்தி வந்த அந்த ஐவருள் ஒருவன் கபாப் உணவகத்தில் நுழைந்து பெண்ணின் பின்னால் தட்டிவிட்டு உணவு ஆர்டர் செய்துளான்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் -இல் நாளை மறுநாள் [ஜூலை 26] முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பாரிஸ் நகரில் 25 வயதான ஆஸ்திரேலியப் பெண் 5 நபர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண் ஐவரிடம் இருந்து தப்பித்து உணவகம் ஒன்றில் நுழைந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்கும் அதிர்ச்சி வீடியோவும் வெளியாகியுள்ளது.
காயங்களுடன் தனது உடையை தலைகீழாக அணிந்து அலங்கோலமாக அந்த பெண் உணவகத்தில் நுழைந்து அங்குள்ளவர்களிடம் தன்னை காப்பற்றும்படி மன்றாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 19 இரவு அந்த ஆஸ்திரேலிய பெண் பாரிஸ் நகரின் பிரபலமான பகுதியான மவுலின் ரோஜ் [Moulin Rouge] பகுதியில் உள்ள பார்கள் மற்றும் கிளப்களில் சுற்றித் திரிந்துள்ளார்.
அவரை நோட்டமிட்டு வந்த 5 பேர் மர்ம நபர்களிடம் அதிகாலை 5 மணியளவில் பெண் தனியாக ஒரு இடத்தில் சிக்கியுள்ளார். அங்கு வைத்து அவர்கள் ஐவரும் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் ஒருந்த கபாப் உணவகத்தில் தஞ்சமடைந்த அந்த பெண் தனது நிலைமையை அங்கிருந்த ஊழியர்களிடம் எடுத்துக்கூற முயன்றார்.
ஆனால் அப்பெண்ணை துரத்தி வந்த அந்த ஐவருள் ஒருவன் கபாப் உணவகத்தில் நுழைந்து பெண்ணின் பின்னால் தட்டிவிட்டு உணவு ஆர்டர் செய்துளான்.நிலவரத்தை அறிந்து கடை ஊழியர் அவனை நெருங்குவதற்கு முன் அவன் அங்கிருந்து வெளியேறியுள்ளான்.
இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் அந்த பெண் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வன்புணர்வால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் அந்த பெண் இன்னும் குழப்ப நிலையிலேயே இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த ஐவரும் ஆபிரகிரர்களைப் போல் இருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரத் தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஒலிம்பிக் போட்டி பாரீசில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
- 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலை நகர் பாரீசில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டியில் 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தொடக்க விழாவில் 45 ஆயிரம் பேர் வரை பாதுகாப்புக்கு அமர்த்தப்படுவார்கள்.
மேலும் 18 ஆயிரம் ராணுவ வீரர்களும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள்.
இதற்கிடையே ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பு பணிக்காக இந்திய மோப்ப நாய்கள் பாரீஸ் சென்று உள்ளன.
10 சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பு கமெண்டர்கள் சி.ஆர்.பி.எப்.பின் மோப்ப நாய்களுடன் அங்கு சென் றுள்ளனர். இந்த மோப்ப நாய்கள் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பல்வேறு மைதானத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மோப்ப நாய்கள் பெல்ஜியம் மாலினோஸ் இனத்தை சேர்ந்தவையாகும். சந்தேகத்துக்குரிய மனிதனின் இருப்பிடம், குண்டுகளை துல்லியமாக கண்டறிதல் போன்றவற்றில் இந்த வகை நாய்கள் மிகவும் சிறப்பாக செயல்படும்.
- ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.
- பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.
பாரிஸ்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.
இதில் ஜோகோவிச் 6-1, 5-7, 3-6 7-5 , 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), 7-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
5-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.
- டிமிட்ரோவ் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
- அல்காரஸ், சிட்சிபாஸ் ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் சினெர்-பிரான்சின் மவுடெட் மோதினர். இதில் சினெர் 2-6, 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் டிமிட்ரோவ் (பல்கேரியா-7-6 (7-5), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
அதே போல அல்காரஸ் (ஸ்பெயின்), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு ஸ்வியாடெக் (போலந்து)-வோன்ட்கோவா (செக்குடியரசு), கோகோ காப் (அமெரிக்கா)-ஜபீர் (துனிசியா) ஆகியோர் தகுதி பெற்றனர்.
- உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை எலான் மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.
- கணினி மற்றும் ரோபோக்கள் உங்களை விட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா?
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், X (ட்விட்டர்) இன் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமாகிய எலான் மஸ்க், தற்போது உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று (மே 23) பாரிஸில் நடந்த விவா டெக் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் வெப்கேம் மூலம் பேசிய மஸ்க், செயற்கை நுண்ணறிவின் காரணமாக வருங்காலங்களில் நம்மில் யாருக்கும் வேலை இருக்காது என்றும் ஏஐ தொழில்நுட்பமே தனது மிகப்பெரிய பயம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொழுதுபோக்குக்காக வேண்டுமானால் ஏதெனும் ஒரு வேலையை நாம் செய்யலாம். மற்றபடி உங்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் ஏஐ தொழில்நுட்பமே ரோபோக்கள் தயாரித்து வழங்கிவிடும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பற்றாக்குறை இருக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஏஐ தொழில்நுட்பத்தின் திறன்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.
கணினி மற்றும் ரோபோக்கள் உங்களை விட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா? என்று கேள்வியெழுப்பிய அவர், சமூக ஊடகங்கள், மனித மூளையில் சுரக்கும் டோபோமைனை AI மூலம் அதிகப்படுத்தும் யுக்தியை கையாளத் தொடங்கியுள்ளன என்றும் இதிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க அவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். கடந்த காலங்களிலும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து எலான் மஸ்க் அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு காரணங்களுக்காக எஸ்யூவி ரக கார்களையே மக்கள் விரும்புகின்றனர்
- நகரிலேயே வசிப்பவர்களுக்கான வாகன நிறுத்த கட்டணத்தில் மாற்றம் இல்லை
மேற்கத்திய நாடுகளில் பொது போக்குவரத்திற்கான அரசு வாகனங்கள் குறைவு. மக்களில் பெரும்பாலானோர், கார்களையே தங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
சமீப சில வருடங்களாக, உலகளவில் எஸ்யூவி (Sports Utility Vehicles) எனப்படும் கார்களின் உற்பத்தி அதிகமாகி விட்டது.
அவற்றில் அமரும் இட வசதி, பயணிப்பவர்களுக்கான எண்ணிக்கை, பொருட்களுக்கான இடம் உள்ளிட்டவை சிறிய கார்களை விட அதிகம். மேலும், இவை நீண்ட தூர பயணத்திற்கும், கரடுமுரடான சாலைகளிலும் செலுத்துவதற்கு தகுதி வாய்ந்தவை.
எனவே, பெரும்பாலான மக்கள் எஸ்யூவி ரக கார்களையே விரும்பி வாங்குகின்றனர்.
ஆனால், இவற்றை நிறுத்த அதிக இடம் தேவைப்படும்.
இந்நிலையில், பாரிஸ் நகரில் வாகன நிறுத்துமிடங்களில் இது சிக்கலை தோற்றுவித்ததால், இவற்றிற்கான வாகன நிறுத்த கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்த அரசு, இது குறித்து மக்களின் எண்ணத்தை அறிய பொதுஜன வாக்கெடுப்பு (referendum) நடத்தியது.
நேற்று நடைபெற்ற இந்த பொதுஜன வாக்கெடுப்பில், சுமார் 54.5 சதவீத மக்கள் கட்டண அதிகரிப்பிற்கு சம்மதித்துள்ளனர்.
இதன்படி, பாரிஸ் நகரத்திற்கு உள்ளே, 1.6 டன் மற்றும் கூடுதலான எடையுள்ள வாகனங்களுக்கு சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம், சுமார் ரூ.1600 (18 யூரோக்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண விகிதம், முன்பிருந்ததை காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது, தினந்தோறும் பல வெளியூர்களில் இருந்து பாரிஸ் நகருக்கு பல்வேறு பணிகளுக்காக வருபவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
பாரிஸ் நகரிலேயே வசிப்பவர்களுக்கான கட்டணம் மாற்றப்படாததால், அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.
பாரிஸ் நகர மேயர், ஆன் ஹிடால்கோ (Anne Hidalgo), இதுவரை தனது 10-வருட பதவிக்காலத்தில், நகரின் பல இடங்களை பாதசாரிகளுக்கு சாதகமாகவும், சைக்கிள் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மாற்றி அமைத்து வருகிறார்.
எஸ்யூவி ரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது உயிரிழப்புகள் அதிகமாவதாகவும், அவற்றின் பயன்பாட்டிற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதாகவும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்த கட்டண உயர்வு பலராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்