என் மலர்
செய்திகள்

காஷ்மீரின் பன்டிப்போரா மாவட்டத்தில் இன்று 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்போரா மாவட்டத்தில் இன்று 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #3militantskilledinBandipora #Bandiporaencounter
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அம்மாநிலத்தை சேர்ந்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து, இன்று அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி அதிநவீன இயந்திர துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தொடர்ந்து அங்கு இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா இன்றிரவு தெரிவித்துள்ளார். #3militantskilledinBandipora #Bandiporaencounter
Next Story






