search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manamadurai"

    மானாமதுரை அருகே நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் பலியான நிலையில் இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்த 7 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் என்பவர் நேற்று இறந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    இதுகுறித்து பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தொடக்கத்திலேயே உரிய நடவடிக்கை எடுக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டதாக பழையனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், ஜானகிராமன் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 
    மானாமதுரை அருகே நடந்த கோஷ்டி மோதலில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் கச்ச நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். சுகுமார், மலைச்சாமி, தனசேகரன், மகேசுவரன், சந்திரசேகர், தேவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் (வயது32) இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இன்னும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், வழக்கு விசாரணையை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என வலியுறுத்தி கச்சநத்தம் கிராமத்தினர் மற்றும் கட்சியினர் 3-வது நளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதட்டம் நிலவி வருகிறது. போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.#tamilnews
    மானாமதுரை அருகே இரட்டைக்கொலை விவகாரத்தில் உடல்களை வாங்க மறுத்து விடிய விடிய உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர், கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் கச்ச நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். சுகுமார், மலைச்சாமி, தனசேகரன், மகேசுவரன், சந்திரசேகர், தேவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்

    அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் பலியான 2 பேரில் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனால் பலியான மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்களும் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலெக்டர் அலுவலக சாலையோரம் சென்ற அவர்கள், விடிய விடிய அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறி வருவதால் ஆஸ்பத்திரி சாலை பதட்டமாகவே உள்ளது.#tamilnews
    இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மதுரை கோர்ட்டில் 5 பேர் சரணடைந்தனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே ஆவரங்காட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

    இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் கொலை தொடர்பாக பழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய சுமன், அருண்குமார், அக்கினி, ராஜேஷ், அஜய் தேவன் ஆகிய 5 பேர் இன்று மதுரை மாவட்ட ஜே.எம்.(எண்.4) கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து நீதிபதி கவுதமன், 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். #tamilnews
    இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். 8 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது ஆவரங்காடு. அதை அடுத்துள்ள கிராமம் கச்சநத்தம். இந்த 2 கிராமங்களிலும் வெவ்வேறு பிரிவினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராம மக்களிடையே ஜாதிய ரீதியான மோதல்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இதனால் இரு கிராமத்தினரை அடிக்கடி போலீசார் சமரசம் செய்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதிலும் இரு கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஆவரங்காடு வழியாக வந்துள்ளனர்.

    அப்போது ஆவரங்காட்டைச் சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த வாலிபர்கள் ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்ததால் அங்குள்ள சிலர் ஆத்திரமடைந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கச்சநத்தம் கிராமத்துக்குள் புகுந்தனர். அங்கு கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக அந்த கும்பல் வெட்டியது. அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளையும் அந்த கும்பல் சேதப்படுத்தியது.

    இதில் ஆறுமுகம் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த சண்முகராஜனை (27) மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாகக உயிரிழந்தார். சண்முகராஜன் என்ஜினீயர் ஆவார்.

    மேலும் அரிவாளால் வெட்டப்பட்ட தனசேகரன் (52), அவரது மகன் சுகுமார் (22), மலைச்சாமி (55), சந்திரசேகர் (35), தெய்வேந்திரன் (48), மகேஸ்வரன் (18) உள்ளிட்ட 8 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர்.

    அவர்களை உடனடியாக மீட்டு மதுரை, சிவகங்கை, மானாமதுரை ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இரு கிராம மக்களிடையே மேலும் வன்முறை வெடிக்காத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 2 பேர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 20 பேரை தேடி வருகிறார்கள்.

    இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மானாமதுரை அருகே நடைபெற்ற வாகன சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேர் சிக்கினர்.

    சிவகங்கை:

    மானாமதுரை அருகே உள்ள மாங்குடி விலக்கில் சிப்காட் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்களை நிற்குமாறு போலீசார் சைகை காட்டினர்.

    ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாகச் சென்றனர். எனவே போலீசார் அவர்களை தங்கள் ஜீப்பில் விரட்டினர்.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளை மடக்கி 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரிய கோட்டையைச் சேர்ந்த பிரதாப் (வயது 29), வைரம் பட்டியைச் சேர்ந்த கனிராஜா (26), சிவகங் கையைச் சேர்ந்த சசிகுமார் (21) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளதும், ஜாமீனில் வெளி வந்த இவர்கள் அதன் பின்னர் தலைமறைவானதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ×