search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரை அருகே கோஷ்டி மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் பலி
    X

    மானாமதுரை அருகே கோஷ்டி மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் பலி

    மானாமதுரை அருகே நடந்த கோஷ்டி மோதலில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் கச்ச நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். சுகுமார், மலைச்சாமி, தனசேகரன், மகேசுவரன், சந்திரசேகர், தேவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் (வயது32) இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இன்னும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், வழக்கு விசாரணையை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என வலியுறுத்தி கச்சநத்தம் கிராமத்தினர் மற்றும் கட்சியினர் 3-வது நளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதட்டம் நிலவி வருகிறது. போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.#tamilnews
    Next Story
    ×