search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "man arrested"

    அமெரிக்காவில் சீக்கியர் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். #SikhMan #Murder
    நியூயார்க்:

    அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் எசெக்ஸ் நகரில் பெரிய அளவில் கடை வைத்து நடத்தி வந்தவர் சீக்கியரான டெர்லோக் சிங் (வயது 55). இவர் கடந்த 16-ந் தேதி தனது கடையில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், அங்கு வாழ்ந்து வருகிற சீக்கிய மக்கள் இடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக எசெக்ஸ் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளியை தேடி வந்தனர்.



    இந்த நிலையில் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா (55) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அந்தக் கடையில் சின்னச்சின்ன வேலைகள் செய்து வந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. அதன் முடிவில் அவர் டெர்லோக் சிங்கை கொலை செய்ததின் பின்னணி என்ன என்பது தெரிய வரும். 
    செய்யாறில் 3 பெண்களை திருமணம் செய்த வாலிபர் குறித்து இரண்டாவது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த திருமணி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த 2012-ம் ஆண்டில் செய்யாறு பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சுதா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    சுதாவுடன் ஒரு ஆண்டு குடும்பம் நடத்தி விட்டு 2013-ம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்து விட்டார். அதைத்தொடர்ந்து, திருமணி கிராமத்திலேயே வசிக்கும் தனது அத்தை மகள் அனிதா (22) என்ற இளம்பெண்ணை வற்புறுத்தி இனி ஒழுங்காக இருப்பதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு 2-வதாக திருமணம் செய்தார்.

    தட்சிணபிரியா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திருமணியில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்துவந்த சரிதா (20) என்ற இளம்பெண்ணை கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பார்த்தார். சரிதாவிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி காதலை சொன்னார். சரிதாவும் குமரேசனை காதலித்தார். இதையடுத்து, சரிதாவை 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    யாருக்கும் தெரியாமல் இருக்க சரிதாவை வேலூரில் குடித்தனம் வைத்தார். இந்த நிலையில், 2-வது மனைவி அனிதாவுக்கு விவகாரம் தெரியவந்தது. அவர் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து குமரேசனை கைது செய்தனர்.

    கர்நாடக முதல்வர் குமாரசாமியை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து மீம்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். #Kumaraswamy #TrollingKumaraswamy
    மங்களூர்:

    கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிராக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமான விமர்சனங்களும், மீம்ஸ்களும் வெளியாகின. இது காவல்துறையின் கவனத்திற்கு வந்ததும், மங்களூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

    இந்நிலையில், முதல்வர் குமாரசாமியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதாக, தக்சின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் புஜாரி (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் முதல்வரை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து புஜாரி மீம்ஸ் போட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Kumaraswamy #TrollingKumaraswamy

    திருச்சியில் பணம் கேட்டு டீ மாஸ்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி உய்யகொண்டான் திருமலை கொடாப்புபகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 47),  டீ  மாஸ்டராக  வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் நடராஜனிடம் கத்தியை காட்டி பணம் தருமாறு  மிரட்டினார். பணம் தரவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார். 

    இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்து காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தார். 

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் பிடிப்பட்டவர் பாலக்கரை மணல்வாரி ரோடு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் (48) என்பதும், இவர் மீது காந்தி மார்க்கெட், பாலக்கரை, பொன்மலை உள்ளிட்ட திருச்சி  மாநகர காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ரமேசை கைது செய்தனர்.
    சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். #bombthreat #USEmbassy
    சென்னை:

    சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தது மண்ணடியைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.  #bombthreat  #USEmbassy

    ×