search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமியை இழிவுபடுத்தி தொடர்ந்து மீம்ஸ் வெளியிட்ட நபர் கைது
    X

    குமாரசாமியை இழிவுபடுத்தி தொடர்ந்து மீம்ஸ் வெளியிட்ட நபர் கைது

    கர்நாடக முதல்வர் குமாரசாமியை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து மீம்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். #Kumaraswamy #TrollingKumaraswamy
    மங்களூர்:

    கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிராக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமான விமர்சனங்களும், மீம்ஸ்களும் வெளியாகின. இது காவல்துறையின் கவனத்திற்கு வந்ததும், மங்களூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

    இந்நிலையில், முதல்வர் குமாரசாமியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதாக, தக்சின கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் புஜாரி (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் முதல்வரை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து புஜாரி மீம்ஸ் போட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Kumaraswamy #TrollingKumaraswamy

    Next Story
    ×