என் மலர்
செய்திகள்

பணம் கேட்டு டீ மாஸ்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திருச்சியில் பணம் கேட்டு டீ மாஸ்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி உய்யகொண்டான் திருமலை கொடாப்புபகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 47), டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் நடராஜனிடம் கத்தியை காட்டி பணம் தருமாறு மிரட்டினார். பணம் தரவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்து காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் பிடிப்பட்டவர் பாலக்கரை மணல்வாரி ரோடு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் (48) என்பதும், இவர் மீது காந்தி மார்க்கெட், பாலக்கரை, பொன்மலை உள்ளிட்ட திருச்சி மாநகர காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ரமேசை கைது செய்தனர்.
Next Story






