search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Sabha polls"

    பாராளுநாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய லாலு பிரசாத்துக்கு அதிகாரம் அளித்து ராஷ்டிரீய ஜனதாதள கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #LaluPrasad #LokSabhaPolls
    பாட்னா:

    ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று நடந்தது. கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

    இறுதியில் தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வை இறுதி செய்ய கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு அதிகாரம் அளித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுக்கும் அவருக்கே அதிகாரம் வழங்கப்பட்டது.

    கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லாலு பிரசாத் யாதவ், தற்போது உடல்நல கோளாறுக்காக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMKApplications
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேசமயம், போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் அதிமுக சார்பில் 40 தொகுதிகளில் இருந்தும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதேபோல் தேமுதிகவும் 40 தொகுதிகளில் இருந்தும் விருப்ப மனுக்களை வழங்கலாம் என கூறியுள்ளது. நாளை முதல் மார்ச் 6-ம் தேதி வரை விருப்ப மனுக்களை கட்சி தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்காக 25-ம் தேதி விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது. 

    இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


    மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 25-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அண்ணா அறிவாலயத்தில் 1000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு, விண்ணப்ப கட்டணம் செலுத்தியிருந்தால், அது திருப்பி கொடுக்கப்படும்.

    இதேபோல் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரும் மார்ச் 1-ம் தேதி முதல் 7-ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #DMKApplications
    பாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவின் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #SPBSPAlliance #Mayawati #AkhileshYadav
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இப்போது பாஜகவை வீழ்த்துவதற்காக பாராளுமன்றத் தேர்தலில் கைகோர்த்துள்ளன. இது தொடர்பான சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தனர்.

    இந்நிலையில் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

    உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியில்லை என்றும் மாயாவதி கூறினார்.



    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வறுமை, வேலையின்மை மற்றும்  ஊழல்கள் பெருகியதால் அந்த கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை என்றும் மாயாவதி கூறினார். #SPBSPAlliance #Mayawati #AkhileshYadav
    பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. #SamajwadiParty #BahujanSamajParty #LokSabha
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 71 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான அப்ணா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா எதிர்க்கட்சிகளிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர முடிவு செய்துள்ளன. இதுபற்றி சமாஜ்வாடி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரஜேந்திர சவுத்ரி கூறியதாவது:-

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பல்வேறு கட்டமாக சந்தித்து பேசினர். வெள்ளிக்கிழமையும் டெல்லியில் அவர்கள் சந்தித்து பேசினர். இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணிக்கு முதல்கட்ட ஒப்புதலை கொடுத்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு இந்த மாதத்திலேயே வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதுதவிர ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட இதர சிறிய கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதா? என்பது குறித்து அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்வார்கள். முடிவு எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணி அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடாது. அங்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் போட்டியிட விட்டுக்கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த பொதுத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கட்சிகளின் கூட்டணி நெருக்கம் பற்றி பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஹீரோ பாஜ்பாய் கூறும்போது, “இது சந்தர்ப்பவாத கூட்டணி, முழுக்க மக்கள் விரோத கூட்டணி” என்றார். #SamajwadiParty #BahujanSamajParty #LokSabha 
    சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். #AssemblyPoll #LokSabhaPoll #RamVilasPaswan
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. அங்கு 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு அந்தந்த மாநிலங்களில் இருந்த ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருந்த எதிர்ப்பே காரணம் என பா.ஜனதாவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சி மீது மக்களுக்கு கோபம் இருந்த போதும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் பெற்றுள்ள வாக்கு சதவீதத்துக்கு சமமாக பா.ஜனதாவும் ஏறக்குறைய பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்று குறிப்பிட்டார்.

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறிய பஸ்வான், ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பு எப்போதும் வரவேற்கப்படும் என்றும் தெரிவித்தார்.  #AssemblyPoll #LokSabhaPoll #RamVilasPaswan
    தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்ட சுனில் அரோரா பாராளுமன்ற தேர்தலை நடத்த தயாராகி வருகிறோம் என்று கூறினார். #SunilArora #ParliamentElection
    புதுடெல்லி:

    இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஓ.பி.ராவத் பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) முடிவடைந்தது. இதையொட்டி தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான 62 வயது சுனில் அரோராவை தலைமை தேர்தல் கமிஷனராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நியமித்தார்.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்தில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இப்பதவியை வகிப்பார். இவர் நாட்டின் 23-வது தலைமை தேர்தல் கமிஷனர் ஆவார்.



    இவருடைய தலைமையில்தான் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் காஷ்மீர், ஒடிசா, மராட்டியம், ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது.

    பதவி ஏற்ற பிறகு நிருபர்களிடம் சுனில் அரோரா கூறியதாவது:-

    நாட்டில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நம்பகத்தன்மையுடனும், பாரபட்சம் இன்றியும், நெறிமுறைகளோடு முற்றிலும் அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் முன்னுரிமை அளிக்கும். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் மிகுந்த கவனத்துடன் நடத்தப்படும்.

    இதற்காக பொதுமக்கள், தேர்தல் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் எங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பை அளிக்கவேண்டுகிறோம்.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் இப்போதே தயாராகி வருகிறது.

    குறிப்பாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைப்பது உள்பட அனைத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தேர்தல் குறித்தும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தலில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த கேள்விக்கு சுனில் அரோரா பதில் அளிக்கையில், “இது தொடர்பாக துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா இந்த மாத இறுதியில் அறிக்கை தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

    1980-ம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் அரோரா நிதி, ஜவுளி, திட்டக் கமிஷன் அமைச்சகங்களில் பணியாற்றியவர்.

    1999-2002-ம் ஆண்டுகளில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் இணை செயலாளராகவும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக இயக்குனராக 5 ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார். 36 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி தேர்தல் கமிஷனராக அவர் நியமிக்கப்பட்டார்.  #SunilArora #ParliamentElection
    பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #AAP #LokSabha #Election
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பல முக்கிய மாநிலங்களில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறது. இது தொடர்பாக கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் அண்மையில் அரியானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து தனது கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.



    இதுபற்றி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டமிட்டு இருக்கிறது. இதில் 25 தொகுதிகளை கைப்பற்றுவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த வெற்றி கிடைத்துவிட்டால் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மற்ற கட்சிகளுடன் எங்களால் பேரம் பேச முடியும்.

    டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி வலிமையாக உள்ளது. உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் இன்னும் சில மாநிலங்களிலும் எங்கள் கட்சி போட்டியிடும். இதேபோல் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியை சேர்ந்த 4 பேர் வெற்றி கண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.  #AAP #LokSabha #Election
    இந்தியாவில் இருக்கும் சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என அமர்தியா சென் தெரிவித்துள்ளார். #AmartyaSen #BJP #LokSabhaPolls
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமர்தியா சென் இந்திய ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி இருப்பதாகவும், அதை மக்கள் தான் மீட்டெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக சாடிய அவர், 2014-ல் பாராளுமன்ற தேர்தலில் 33 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்ற பா.ஜ.க மோசமான நோக்கங்களுடன் ஆட்சி அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், நாம் அனைவரும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட வேண்டும் எனவும், மதவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நாம் ஒருபோதும் நிறுத்தி விடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்திய ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருப்பதாகவும், அதனை மக்கள்தான் சரிசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். #AmartyaSen #BJP #LokSabhaPolls
    ×