search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnasamy"

    எச்.ராஜாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #hraja #drkrishnasamy

    சேலம்:

    புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சேலத்திற்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் எஸ்.சி. பட்டியலில் உள்ள பள்ளர், காலாடி, தேவேந்திரகுல வோளாளர் உள்பட 6 இனத்தவரையும் அதில் இருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் வருகிற 6-ந் தேதி திருச்சியில் கட்சியின் இளைஞரணி சார்பில் மாநாடு நடக்கிறது.

    எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டதால் இட ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தவர்கள் தவிர மற்றவர்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளனர். பட்டியல் பிரிவில் வைத்துள்ளது அடிமை தனத்திற்கு சமம். எனவே அதில் இருந்து நீக்க வேண்டும். வருகிற தேர்தலில் புதிய தமிழகம் புதிய தளம் அமைத்து அரசியல் களம் காணும்.


    வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது போல எச்.ராஜா வழக்கிலும் அரசு எந்த முடிவையும் எடுக்கலாம் என்றார். #hraja #drkrishnasamy

    வருகிற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் புதிய தமிழகம் ஈடுபடும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #krishnasamy #tamilnadugovernment

    நெல்லை:

    நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் 6 வித பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் 77 ஜாதி பட்டியலில் உள்ள பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்று வருகிறார்கள். தேவேந்திரகுல வேளாளர்களை தனியாக பிரித்து பிற்பட்டோர்பட்டியலில் சேர்க்க வேண்டும். பின்னர் அதற்கு தக்க பிற்பட்டோர் பிரிவு இடஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். இதை வலியுறுத்தி அக்டோபர் 6-ந் தேதி திருச்சியில் இளைஞரணி மாநாட்டில் வலியுறுத்துவோம்.

    சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் 1980-81 ம் ஆண்டு நடந்த மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவத்தை ஆய்வு செய்து அதற்காக ஒருவருக்கு டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதில் பல தவறுகள் நடந்துள்ளது. உடனடியாக இதை நிறுத்தவேண்டும். வருகிற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் புதிய தமிழகம் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #krishnasamy #tamilnadugovernment

    இந்திய அளவில் தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே நீட் தேர்வை ஆதரிப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #NEET #Krishnasamy
    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேவேந்திரகுல வேளாளர் இனத்தை சேர்ந்த 6 பிரிவினரை பட்டியலினத்தில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக மாநாடுகள் நடத்தி வருகிறோம். வருகிற அக்டோபர் மாதத்திற்குள் இதை நிறைவேற்றாவிட்டால் பின்னர் போராட்டம் நடத்தப்படும்.

    தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய பாட திட்டம் நன்றாக உள்ளது. முந்தைய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே ‘நீட்’ தேர்வை ஆதரித்தோம். பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் குறைவாக உள்ளதால் ‘நீட்’ தேர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.


    புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். தமிழகத்திற்கென தனி அடையாளம் உள்ளது. அதை அழிக்க பல சக்திகள் முயற்சிக்கின்றன. தமிழ்தேசியம் பேசுபவர்கள் தமிழை பயன்படுத்தி தமிழகத்தில் கபளீகரம் செய்ய முயல்கிறார்கள். யார் தமிழர் என்பதை தெளிவுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

    பல மதவாத சக்திகள் பெயரை மாற்றி அன்னிய நாட்டு நிதி உதவியை பெற்று தமிழகத்தில் புகுந்து தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.

    பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் நியமிப்பதில் முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனால் உயர் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. இதை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #NEET #Krishnasamy
    கோவை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
    பழனி:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பழனி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இமானுவேல் சேகரன், சுதந்திர போராட்ட தியாகி சுந்தரலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து 7, 8, 9-ம் வகுப்பு பாடத்திட்டங்களில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற தலைவர்கள் போல் இவர்கள் குறித்த விவரங்களையும் அனைத்து வகுப்புகளுக்கும் துணை பாடதிட்டமாக சேர்க்க வேண்டும்.

    அதே போல் அனைத்து தலைவர்களின் பெயரிலும் அரசு விழா கொண்டாடப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

    கல்வி, மின்சாரம், சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளுடன் சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் கையகப்படுத்த வேண்டும். 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக கோவை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

    கேள்வி:- 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் பற்றி உங்கள் நிலைப்பாடு?


    பதில்:-ஒரு கட்சியின் சின்னத்தை நம்பியே மக்கள் வாக்களித்து எம்.எல்.ஏ.க்களை உருவாக்குகின்றனர். அந்த கட்சி மீது எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவர்களே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும்.

    கேள்வி:-பழனி சிலை மோசடி வழக்கில் அரசு ஒத்துழைக்கவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியது பற்றி?

    பதில்:- அரசு கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது. எனவே அரசின் உத்தரவுக்கு யாராக இருந்தாலும் கீழ்படிந்தே ஆக வேண்டும்.

    கேள்வி:-கவர்னர் அடுத்து எங்கு ஆய்வு செய்தாலும் போராட்டம் நடத்துவேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

    பதில்:-சில கேள்விகளுக்கு உடனே பதில் அளித்துவிட முடியாது. அடுத்து நாம் சந்திக்கும் போது இதற்கான பதிலை நிச்சயம் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.#Krishnasamy
    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படாத நிலையில் உள்ளது என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #krishnasamy #tngovt

    மதுரை

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அவர் கூறியதாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர புதிய தமிழகம் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக குரல் கொடுத்தது. இதற்கு மத்திய அரசு செவி சாய்த்து எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க உத்தரவிட்டது. மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய முயற்சி எடுத்தது. இதற்காக மத்திய, மாநில அரசுகளை பாராட்டுகிறேன்.

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அனைத்து தலைவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாறுகளை இருட்டடிப்பு செய்யக் கூடாது.

    இதனை வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது பல கிராமங்களில் சாதி ஏற்றத்தாழ்வு இருப்பதை பார்த்தேன். கவிஞர் பாரதிதாசன் கூறியது போல் சாதி ஒழித்தல், நல்ல தமிழ் வளர்த்தல் ஆகியவை மிகவும் அவசியம். இதில் ஒன்றை தவிர்த்தாலும் மற்றொன்று துலங்காது.

    தமிழகத்தில் தமிழ் உணர்வு எவ்வளவு அவசியமோ அதே போல சாதிய ஒழித்தல் அவசியம்.

    தமிழகத்தில் எடப்பாடி அரசு செயல்படாத நிலையில் உள்ளது. எனவே ஆளுநர் சுற்றுப்பயணம் மூலம் அரசு எந்திரங்களை செயல்பட வைக்கிறார். இதனால் மாநில சுயாட்சி கேள்விக்குறியாக உள்ளது. இதனை ஏற்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #krishnasamy #tngovt

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் சந்தேகங்களை மத்திய- மாநில அரசுகள் போக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். #Sterliteprotest
    மதுரை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நியூட்ரினோ, நெடுவாசல் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிப்பு போன்ற தொழில் சார்ந்த நிறுவனங்கள் தொடங்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக இயற்கை வளத்தை பயன்படுத்தி மத்திய-மாநில அரசுகள் தொழிற்சாலைகளை உருவாக்கி உள்ளன. ஆனாலும் இதில் நல்லது எது? கெட்டது எது? என ஆய்வு நடத்தப்படவில்லை.

    தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியுடன் தொடங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.


    ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    இதற்காக மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அதுபற்றி எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

    1994-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். எல்லா நோய்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம் என தூத்துக்குடி மக்கள் நினைக்கிறார்கள். அதை போக்க வேண்டியது மத்திய-மாநில அரசின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மதுரை மாவட்ட செயலாளர் தெய்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Sterliteprotest
    ×