search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kothagiri"

    • நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், காமராஜர் சதுக்கத்தில் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், காமராஜர் சதுக்கத்தில் நடந்தது. இதில் தலைவர் வாசுதேவன், துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி, செயலாளர் முகமதுசலீம், பொருளாளர் மரியம்மா, இணை செயலாளர் கண்மணி, விக்டோரியா, கிரேசி, லலிதா, சங்கீதா, ரோஸ்லின், ஜம்புலிங்கம், சுரேஸ், பிரேம் சதீஷ், மசினகுடி கரியன், தேவஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோத்தகிரி பகுதிகளில் உள்ள நீரோடைகளை தூர்வாரி, நீராதாரத்தை பெருக்க வேண்டும், கோத்தகிரி பண்டகசாலை முன்புறம் உள்ள பாலத்தை அகலப்படுத்தி, வேகத்தடைக்கு இரவில் ஒளிரும் பட்டை பொருத்த வேண்டும், நகரப்பகுதிகளில் விற்பனையாகும் இட்லி மாவு பாக்கெட், உப்பின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி செய்து தர வேண்டும், கோத்தகிரி தினசரி சந்தையின் நடைபாதை ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய வேண்டும், அளக்கரை குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், இறைச்சி, மீன் விற்பனை கடைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாகாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியில் பால் பாக்கெட் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • கரடி வந்து செல்லும் காட்சி சி.சி.டிவி காட்சியில் பதிவாகியது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர். கோத்தகிரி அரவேணு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்துள்ளது. கரடி வந்து செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டிவி காட்சியில் பதிவாகி உள்ளது. அடிக்கடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காளியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • 1 மணிக்கு ஆற்றங்கரையில் அம்மனை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வள்ளுவர் நகரில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 24-ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா விநாயகர் வேள்வி, 108 சங்காபிஷேகம், காப்பு கட்டுதல், கொடியே ற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அம்மன் அழைப்பு நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்றுமுன்தினம் காளியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது.

    தொடர்ந்து ஆடத்தொரை ஆற்றில் இருந்து அம்மன் மேள-தாளங்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து மதியம் 12 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட திரளான பக்தர்கள் கோவிலில் பூ குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பின்னர் அம்மனுக்கு அன்ன பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு கண்கவர் வாணவேடிக்கையும், 8 மணிக்கு வள்ளுவர் நகர் சிறுவர்- சிறுமிகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை, 9 மணிக்கு நீர்தொழுதல், 11 மணிக்கு மாவிளக்கு பூஜையும் அன்னதானம் நடந்தது. மதியம் 1 மணிக்கு ஆற்றங்கரையில் அம்மனை வழி அனுப்பும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.

    • ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய திணறி வந்தனர்.

    கோத்தகிரி

    கோடை சீசன் தொடங்கி உள்ளதால் நீலகிரி மாவ ட்டத்தில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கூடலூர், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாகன நெருக்கடியை சமாளிக்க ஒரு வழிப்பாதை யை அமல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மேட்டுப்பா ளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் காட்டேரி வழியாகவும், ஊட்டியில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது

    இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் அதிக சுற்றுலாப் பயணிகள் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கோத்தகிரி மார்க்கமாக மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

    நேற்று மாலை சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய திணறி வந்தனர்.

    • பள்ளியையொட்டிய சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
    • குழந்தைகள் நடப்பதற்கு நடைபாதையை அமைத்து தர வேண்டி மனு அளிக்கப்பட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள புனித மரியன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலை பள்ளிக்கு வரும் போதும், மாலை பள்ளி முடிந்து வீடு செல்லும் போதும் சரியான நடைபாதை இல்லாததால் வாகனங்கள் அதிகம் வரும் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் அதிக அளவு உள்ளது.

    பள்ளியை ஒட்டியுள்ள சாலையின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் தான் குழந்தைகள் சாலையில் நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக கூறி அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த விடாமல் குழந்தைகள் நடப்பதற்கு நடைபாதையை அமைத்து தர வேண்டியும் அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டியும் நீலமலை அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோருக்கும் தனித்தனியாக மனு அளிக்கப்பட்டது.

    • கூக்கல்தொரை பகுதியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன.
    • காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் தற்போது சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் குட்டிகளுடன் வந்து, இங்குள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உலா வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளதால், பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி விவசாயிகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார்.
    • கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரவேணு,

    கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி மற்றும் பொருளாளர் மரியம்மா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமதுசலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார். கூட்டத்தில் கோத்தகிரி கோவில் மேடு பகுதியில் பேரூராட்சியின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நடைபாதை சீரமைக்கவும், அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை சந்திப்பில் தெருவிளக்கு அமைக்கவும், கோத்தகிரி விநாயகர் கோவில் முதல் டானிங்டன் வரை செல்லும் நீரோடையில் குப்பை கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முகமது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பிரேம்செபாஸ்டியன், லெனின்மார்க்ஸ் ஜார்ஜ் பால், பிரேம் சதீஷ், திரைசா, லலிதா, சங்கீதா யசோதா, விக்டோரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச்செயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.

    • தோட்ட–ங்களில் ஏராளமான காபி பழங்கள் விளைந்துள்ளன.
    • ஒற்றைக் காட்டு யானை சாலையை விட்டு கடந்து அருகே இருந்த வனத்திற்குள் சென்றது.

    அரவேணு,

    கோத்தகிரி சுற்று வட்டார பகுதியிகளா ன மாமரம், குஞ்சப்பனை, முள்ளூர் போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்ட–ங்களில் ஏராளமான காபி பழங்கள் விளைந்துள்ளன.

    இவற்றை உண்பதற்காக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்வது வழக்கம், இந்நிலையில் நேற்றிரவு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் முல்லூர் பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை சாலையில் சுற்றி திரிந்தது.

    இன்று அதிகாலை வரை அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.நீண்ட நேரம் சாலையில் நின்ற ஒற்றை காட்டு யானையால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் பல மணி நேரங்களுக்கு பிறகு ஒற்றைக் காட்டு யானை சாலையை விட்டு கடந்து அருகே இருந்த வனத்திற்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து வாகனங்களை இயக்கி சென்றனர்.

    அடிக்கடி இந்த சாலையில் யானை நடமாட்டம் இருப்பதால், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, காட்டு யானையை சாலைக்கு வராத வண்ணம், வனத்திற்குள் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும்,
    • மலைப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

    அரவேணு

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாரவிடுமுறையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரி பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வருகை புரிகின்றனர். குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மலைப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டும், அதிக வேகம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கோத்தகிரி போக்குவரத்து போலீசார் அரவேணு, சக்கத்தா, டானிங்டன், கட்டபெட்டு, பாண்டியன் பார்க் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் சிறப்பு சார்பு இன்ஸ்பெக்டர்கள் ஜான், ராஜேந்திரன், போலீசார்கள் அப்பாஸ், சுரேஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த 2 நாட்களில் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் ரூ.84 ஆயிரம் அபராதம் மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 3 வாகன ஓட்டிகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அபாயகரமான வளைவுகள், மலைப்பாதையில் எவ்வாறு வாகனங்களை முறையாக இயக்க வேண்டும், சமவெளி பகுதிகளில் வாகனங்களை இயக்கும் போது 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும், அபாயகரமான வளைவுகளில் ஒலி எழுப்ப வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    கரடி ஒன்று கடையின் சீட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தின்பண்டங்களை எடுத்து தின்றதுடன், வீசியும் சென்றுள்ளது.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு சிறிய கடை ஒன்று உள்ளது.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடி ஒன்று கடையின் சீட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தின்பண்டங்களை எடுத்து தின்றதுடன், வீசியும் சென்றுள்ளது. காலையில் கடை திறப்பதற்காக வந்த கடை உரிமையாளர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அரவேனு சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தேயிலை பறிக்க செல்ல முடியாமலும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவும் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளில் விடுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

    கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து.

    அரவேணு:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் வழிகாட்டுதலின் படி கோத்தகிரி வட்டாரத்தில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து. நிகழ்ச்சிக்கு கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், சுப்ரமணி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் பேரணியின் முக்கிய அம்சங்களை விளக்கி பேசினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன், காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன், குன்னூர் ஜெ.சி.ஐ. அமைப்பு தலைவர் பாவனா, எப்.பி.டி. தன்னார்வ அமைப்பு ஜோசப், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், ஹேரி உத்தம் சிங், தன்னார்வலர்கள் நிர்மலா யமுனா உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர்களுக்கு கோத்தகிரி நெல்லை கண்ணன் அவர்கள் குளிர்பானம் வழங்கினார்.

    படுகர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ ஹெத்தப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே படுகர் இன மக்கள் வசிக்கும் பகுதியான சுள்ளிக்கூடு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ ஹெத்தப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் அவர்கள் பாரம்பரிய உடையான வெள்ளை ஆடை அணிந்து கலந்து கொண்டனர். இதில் குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு மற்றும் இட்டக்கல் போஜராஜ் கலந்துகொண்டனர்.

    ×