search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karthi chidambaram"

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. #KartiChidambaram #SC #ED
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் பிப்ரவரி மாதம் 21-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி அளிக்குமாறு கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

    இதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

    கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உள்ள தேதிகளை வருகிற 30-ந்தேதி தெரிவிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #KartiChidambaram #SC #ED
    கொடைக்கானலில் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அமலாக்கத்துறை முடக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். #INXMediaCase #KarthiChidambaram
    கொடைக்கானல்:

    முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் மோசடி நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு சொந்தமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரூ.54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்க உத்தரவிட்டது.

    கொடைக்கானலில் நாயுடுபுரம் மற்றும் அட்டுவம்பட்டியில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான பங்களாக்கள் உள்ளன. மேலும் 3 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளது.

    அமலாக்கத்துறை உத்தரவை அடுத்து இந்த சொத்துக்களை முடக்கி அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதன் அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.25 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #INXMediaCase #KarthiChidambaram
    ஐ.என். எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் ஊட்டியில் உள்ள ப. சிதம்பரத்தின் குடும்ப சொத்துக்கள் முடக்கப்பட்டது. #INXMediaCase #KarthiChidambaram
    ஊட்டி:

    ஐ.என். எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ. 54 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்க துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

    அதன்படி டெல்லி, ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரியில் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பர்ன்ஹில் பகுதியில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் குடும்ப சொத்தான கொலடியா பங்களா உள்ளது.

    இந்த பங்களாவும் முடக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 3.75 கோடியாகும். இதே போல் கோத்தகிரியில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பங்களாவும் முடக்கப்பட்டு இருக்கிறது. #INXMediaCase #KarthiChidambaram
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மேலும் 3 மாத கால அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #ED
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. 

    இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபையின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனியாக முறைகேடு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, 6 மாத கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், கால அவகாசம் முடிந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மேலும் சில ஆதாரங்களை திரட்ட வேண்டியது இருப்பதால் கால அவகாசம் வழங்கும் படி கோரிக்கை விடுத்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். 
    ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் மீண்டும் விசாரணை நடத்தியது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. #AircelMaxisCase
    புதுடெல்லி:

    ஏர்செல் நிறுவனத்தில், 2006-ம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் 800 மில்லியன் டாலர் (அப்போதைய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக) முதலீடு செய்வதற்கு எப்.ஐ.பி.பி. என்னும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது.

    ஆனால் ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தர முடியும். அதற்கு அதிகமான முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுதான் ஒப்புதல் தர முடியும்.

    ஆனால் சட்டத்தை மீறி, ஏர்செல் நிறுவனத்தில் குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்ய ஒப்புதல் தரப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

    2006-ம் ஆண்டு இந்த ஒப்புதல் தரப்பட்டபோது, மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.

    இந்த நிலையில் சட்டத்தை மீறி ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது எப்படி என்பது பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கு இடையே ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2 ‘ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் சந்தேகப்பார்வை விழுந்து உள்ளது. இது தொடர்பாக அவரை கடந்த ஜூன் மாதம் வரவழைத்து, பல மணி நேரம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது என்ன நடந்தது என்பது வெளியிடப்படவில்லை.

    இருப்பினும் இது பற்றி ப.சிதம்பரம் அப்போது டுவிட்டரில் பதிவிடுகையில், “பாதிக்கு மேற்பட்ட நேரம் கேள்விகளுக்கான பதில்களை பிழையின்றி (கணினியில்) ‘டைப்’ செய்வதிலும், படித்துக்காட்டி அதில் கையெழுத்து பெறுவதிலும் கழிந்தது” என குறிப்பிட்டு இருந்தார்.


    இந்த நிலையில் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நேற்று மீண்டும் வரவழைத்தது. அவர் டெல்லியில் உள்ள அந்த அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    ஏற்கனவே இந்த விவகாரத்தில், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ப.சிதம்பரத்திடம் கேள்விகள் எழுப்பி பதில்கள் பெறப்பட்டதாகவும் தெரிய வந்து உள்ளது.  #AircelMaxisCase
    வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் தொடர்பாக கணக்கு சமர்ப்பிக்காத கார்த்தி சிதம்பரத்தின் மீது வருமான வரித்துறை விசாரித்து வரும் வழக்கில் அவருக்கு சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் அளித்துள்ளது. #KarthiChidambaram #anticipatorybail #BlackMoneycase
    சென்னை:

    சட்டத்தை மீறிய வகையில் வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பாக கணக்குகளை சமர்ப்பிக்காத கார்த்தி சிதம்பரத்தின் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கருப்புப் பண தடுப்பு சடத்தின்கீழ் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த விவாகரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக தவறியதால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து, போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க நேற்று நள்ளிரவு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வீட்டுக்கு சென்ற கார்த்தி சிதம்பரம் தனது வக்கீல்கள் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ், சதிஷ் பராசரன் 
    மூலம் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

    கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறிந்து வருமான வரித்துறை வக்கீலும் அதிகாரிகளும் நள்ளிரவு நேரத்தில் நீதிபதியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

    வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 18-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்த நிலையில், தனது மனைவி, குழந்தைகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டுச் செல்ல தயாராகும் நிலையில் தனக்கெதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்பியதும், வரும் 28-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார். 

    இதையே எழுத்துமூலமான வாக்குறுதியாக பதிவு செய்யுமாறு கூறிய நீதிபதி இந்திரா பானர்ஜி, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்வரை அவருக்கு எதிராக பிறப்பித்த பிடி வாரண்டை நிறுத்தி வைக்குமாறு வருமான வரித்துறை வக்கீல்களுக்கு உத்தரவிட்டார். பிடி வாரண்ட் நிறுத்தப்பட்டதை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார். #KarthiChidambaram #anticipatorybail  #BlackMoneycase
    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் உள்ள கார்த்தி சிதம்பரம் கோர்ட் அனுமதியுடன் இன்று காலை லண்டனுக்கு புறப்பட்டுச்சென்றார். #KarthiChidambaram
    சென்னை:

    ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பணம் ஆதாயம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார்.

    இந்த நிலையில், அவர் சொந்த அலுவல் காரணமாக வெளிநாடு செல்ல அன மதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து நிபந்தனையுடன் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இன்று காலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு கார்த்தி சிதம்பரம் வந்தார். அவர் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
    ×