என் மலர்

  செய்திகள்

  கொடைக்கானல் நாயுடுபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் பங்களா.
  X
  கொடைக்கானல் நாயுடுபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் பங்களா.

  கொடைக்கானலில் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானலில் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அமலாக்கத்துறை முடக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். #INXMediaCase #KarthiChidambaram
  கொடைக்கானல்:

  முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் மோசடி நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

  இந்த வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு சொந்தமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரூ.54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்க உத்தரவிட்டது.

  கொடைக்கானலில் நாயுடுபுரம் மற்றும் அட்டுவம்பட்டியில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான பங்களாக்கள் உள்ளன. மேலும் 3 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளது.

  அமலாக்கத்துறை உத்தரவை அடுத்து இந்த சொத்துக்களை முடக்கி அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதன் அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.25 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #INXMediaCase #KarthiChidambaram
  Next Story
  ×