search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kajal aggarwal"

    பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்துள்ள கவச்சம் படத்தில் நாயகிகளாக நடித்துள்ள காஜல் அகர்வால் - மெஹ்ரீன் பிர்சாடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Kavacham #KajalAggarwal #MehreenPirzada
    பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தெலுங்கு படம் கவச்சம். இந்த படத்தில் காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாடா இணைந்து நடித்துள்ளனர். 

    மெஹ்ரீன் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கவச்சம் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு மெஹ்ரீன் வந்தால் நான் வர மாட்டேன் என்று காஜல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. 

    இதனால் தான் கவச்சம் இசை வெளியீட்டு விழாவுக்கு மெஹ்ரீன் வரவில்லை என்று கூறப்பட்டது. படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாம். பாடல்களை படமாக்க படக்குழு துபாய்க்கு சென்றது. மெஹ்ரீனின் பகுதியை படமாக்கும் வரை நான் துபாய்க்கு வர மாட்டேன் என்று காஜல் அடம் பிடித்துள்ளார். 



    மெஹ்ரீன் இந்தியா திரும்பிய பிறகே காஜல் துபாய்க்கு சென்றிருக்கிறார். தனக்கு படப்பிடிப்பு இருந்ததால் கவச்சம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று மெஹ்ரீன் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் காஜலுடனான பிரச்சினையால் தான் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. #Kavacham #BellamKondaSreenivas #KajalAggarwal #MehreenPirzada

    ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கும் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்திற்காக தயாராகி வருகிறார். #Indian2 #KamalHaasan #KajalAggarwal
    2.0 படத்தை அடுத்து கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தயாராகி வருகிறார் ‌ஷங்கர். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

    இந்த படத்தில் மீண்டும் வயதான இந்தியன் தாத்தாவாக நடிக்கும் கமலுக்கு புதிய உடல்மொழி மற்றும் தலைமுடி ஸ்டைலை மாற்றி சமீபத்தில் அதற்கான டெஸ்ட் ஷூட் நடத்தினார்கள். அந்தவகையில் இந்தியன் படத்தில் நடித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் இந்தியன் 2 வில் கமல் நடிக்கிறார்.



    நாயகியாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை பாரிஸ் நகருக்கு வரவழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர். அந்த மேக்கப் டெஸ்ட் இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் `இந்தியன்-2' படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal
    22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

    முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகத்திலும் முதியவர் வேடத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.

    இதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி உள்ளன.



    வருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.

    அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கின்றனர். 2.0 படத்தைபோல் இந்தியன்-2 படத்தையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட படமாக தயார் செய்கின்றனர். இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Indian2 #KamalHaasan #KajalAggarwal
     
    கமல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிகர் சிம்பு போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #STR
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். நல்ல வரவேற்பைபெற்ற இந்த படத்தில் கமல் சுதந்திர போராட்ட வீரராகவும், லஞ்சம் வாங்கும் மகனாகவும் நடித்திருந்தார்.

    நேர்மையே கொள்கையாக வைத்து இருக்கும் தந்தை தனது கொள்கைக்கு எதிராக இருக்கும் மகனையே கொல்வதுபோல படத்தின் முடிவு அமைந்து இருந்தது.

    1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கமல் நடிக்க ‌ஷங்கர் இயக்குகிறார்.

    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. அந்த படம் வெளியான சில நாட்களில் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.



    இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைய தகவல்படி கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்றும் மேலும் துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

    சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ‌ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். இந்தியன் முதல் பாகத்தில் தந்தை கமலுக்கு மகன் கமலே வில்லனாக அமைந்திருப்பார்.

    முதல் பாகத்தின் கதையே லஞ்சத்துக்கு எதிரானதாக இருந்தது. இரண்டாம் பாகம் ஊழலுக்கு எதிரான படமாக இருக்கும் என்கிறார்கள். 21 ஆண்டுகள் கழித்து திரும்பும் சேனாபதி, நாடு முழுவதும் பரவியுள்ள ஊழலை ஒழிப்பதே கதை என்கிறார்கள்.

    கமல் தனது கட்சியின் கொள்கைகளில் முக்கியமாக ஊழல் ஒழிப்பையே முன்மொழிந்து வருகிறார். கமலின் தீவிர அரசியலுக்கும் அவரது கொள்கைகளுக்கும் உதவும் வகையிலேயே கதை, வசனம் அமைந்திருக்கும் என்கிறார்கள். #Indian2 #KamalHaasan #STR

    கவச்சம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மேடையில் வைத்து காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்ததற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒளிப்பதிவாளர் சோட்டா காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்தியுள்ளார். #KajalAggarwal #BanChotaKNaidu
    கவச்சம் என்ற தெலுங்கு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் காஜலை அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு முத்தமிட்டது சர்ச்சையானது. குறிப்பாக காஜல் அகர்வாலின் ரசிகர்கள் இனி சோட்டா நாயுடுவுக்கு வாய்ப்பே தரக்கூடாது என்று சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குடன் பகிர்ந்தனர். 

    இந்த விவகாரம் விஸ்வரூபமானதைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு, “காஜல் அகர்வால் மேல் உள்ள மதிப்பில் இவ்வாறு செய்தேன். அவரோடு பல படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். 



    சவுந்தர்யாவுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகை காஜல். ஒரு நடிகையாகத் தன் வேலையை சிறப்பாகச் செய்கிறார். எனவே, ஒரு ஈர்ப்பினால் அவரை முத்தமிட்டேன்” என்று சமாதானப்படுத்தியுள்ளார். #KajalAggarwal #BanChotaKNaidu

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #STR
    22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள். 

    ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடித்தனர். இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா இந்தியா திரும்புவது போல் கதையை ஆரம்பிக்கின்றனர்.

    இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.



    அதேநேரத்தில் இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வாலிடமும், கமலின் இளமை தோற்றத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. படத்திற்காக கமல்ஹாசன் தயாராகி வருகிறார். #Indian2 #KamalHaasan #STR

    பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்துள்ள `கவச்சம்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு முத்தமிட்டதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #KajalAggarwal #BanChotaKNaidu
    பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் `கவச்சம்'. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பெலம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மெஹ்ரின் பிர்ஸாடா, காஜல் அகர்வால், இயக்குனர் ஸ்ரீனிவாச மமிலா, இசை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தாமான், ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, இந்த படத்தின் படபிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து காஜல் அகர்வால் கூறினார். அப்போது ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு பற்றியும் காஜல் பேசினார். அப்போது சோட்டா நாயுடு, காஜல் அகர்வாலை அணைத்து முத்தமொன்று கொடுத்தார்.



    இதையடுத்து அந்த நிகழ்வை சமாளிக்க முயன்ற காஜல், சான்ஸ் பீ டான்ஸ் என்று சமாளித்தார்.

    இந்த சம்பவத்தையடுத்து, டுவிட்டரில் காஜல் அகர்வால் ரசிகர்கள் #BanChotaKNaidu என்ற ஹேஸ்டேகை உருவாக்கி சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். #KajalAggarwal #BanChotaKNaidu #KavachamTeaser

    வீடியோ பார்க்க:

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் `இந்தியன்-2' படத்தின் கலை பணிகள் பூஜையுடன் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
    22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இயக்குநர் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை சமீபத்தில் ஆய்வு செய்தார்கள்.

    இந்த நிலையில், படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் கலை பணிகளை டி.முத்துராஜ் கவனிக்கிறார். இவர் முன்னதாக ஷங்கர் இயக்கிய ஐ, 2.0 படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    இந்தியன்-2 முழு அரசியல் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கமல் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், இந்தியன் தாத்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan

    மலைப்பாம்புடன் காஜல் அகர்வால் வெளியிட்ட படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் காஜல் அகர்வாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். #KajalAggarwal
    நடிகை காஜல் அகர்வால் விடுமுறையை கழிக்க குடும்பத்தாருடன் தாய்லாந்து சென்றபோது ஒரு மலைப்பாம்பை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு அதன் வாலையும் தலையையும் கைகளால் பிடித்தபடி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். வீடியோவுக்கு ‘என்ன ஒரு அனுபவம்’ என்று தலைப்பும் வைத்தார்.

    அந்த வீடியோ அவருக்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர்கள், “உங்கள் செயல் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை ஊக்குவிப்பது போல் உள்ளது” என்று கண்டித்து உள்ளனர். காஜல் அகர்வால் ‘பீட்டா’வில் இணைந்து விலங்குகள் பாதுகாப்பு பிரசாரங்களில் ஈடுபட்டவர். அவர் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை என்கிறார்கள் அந்த அமைப்பினர்.
    ஐதராபாத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் பாயல் குரானா கூறும்போது, “பாம்புகளை கூண்டுக்குள் அடைத்து வைப்பதால் தொல்லைகளை அனுபவிக்கின்றன. சுதந்திரமாக இருக்க வேண்டிய பாம்புகளை மனிதர்கள் பொழுதுபோக்கு பொருளாக பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது.

    காஜல் அகர்வால் பாம்புடன் இருக்கும் வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்களும், அதேபோல் பாம்பை துன்புறுத்த நினைப்பார்கள். பிரபலமாக இருப்பவர்கள் தங்கள் செயலில் கவனமாக இருக்க வேண்டும்” என்றார். ஏற்கனவே நடிகை திரிஷாவும் வெளிநாட்டு ரிசார்ட்டில் டால்பினுக்கு முத்தமிடும் படத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது. #KajalAggarwal

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் தாய்லாந்தில் உள்ள வன உயிரியல் பூங்கா ஒன்றில் மலைப் பாம்புடன் விளையாடினார். #KajalAggarwal
    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்ட காஜல் அகர்வாலுக்கு தற்போது தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற படம் மட்டுமே உள்ளது. 

    இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நடித்து முடித்துவிட்ட காஜல் தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார். அங்குள்ள வனஉயிரியல் பூங்காவிற்கு சென்ற காஜல் அங்குள்ள விலங்குகளுடன் விளையாடினார். அப்போது மலைபாம்பு ஒன்றை தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்ட காஜல், அந்த அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாம்பு இருப்பதை உங்களால் உணர முடிகிறதா? என்று ஒருவர் கேட்க, காஜல் கூறியதாவது,

    `ஆமாம் என்னால் உணர முடிகிறது. இந்த உணர்வு அற்புதமாக இருக்கிறது. பாம்பின் தசைகள் அசைவதை என்னால் தெளிவாக உணர முடிகிறது. பாம்பின் மெல்லிய சத்தமும் எனக்கு கேட்கிறது. இது ஒரு ஸ்வாரஸ்ய அனுபவம்'. என்று கூறினார். #KajalAggarwal

    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #KajalAggarwal #ParisParis
    இந்தியில் பெரிய வெற்றி பெற்ற குயின் படத்தை பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் தமிழில் காஜல் அகர்வாலை கதா நாயகியாக்கி இயக்கி வருகிறார் ரமேஷ் அரவிந்த்.

    அவரிடம் படம் எப்படி வந்துள்ளது என்று கேட்டதற்கு ‘தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாருல் யாதவ். இப்படி மொழிக்கு ஒவ்வொரு ஹீரோயின்கள். இவங்களைத் தவிர முக்கியமான கேரக்டரில் எமி ஜாக்ச‌ன் நடிக்கிறார்.

    மலையாளத்துல நீலகண்டனும், தெலுங்கில் பிரசாத்தும் டைரக்‌‌ஷன் பண்றாங்க. என்னைப் பொறுத்தவரை, இந்தப் படம் காஜலுக்குத் திருப்புமுனையைக் கொடுக்கிற படமா இருக்கும்.



    ‘பரமேஸ்வரி’ங்கிற கேரக்டர்ல அழகாக நடிச்சிருக்காங்க. எமி ஜாக்ச‌ன் தமிழ் வசனங்களை மனப்பாடம் பண்ணி அவ்வளவு அழகா பேசுறாங்க. அவங்க பேசுறதைப் பார்த்துட்டு, நானே ஆச்சர்யப்பட்டுப் போனேன்’ என்று கூறி இருக்கிறார். #ParisParis #KajalAggarwal

    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் புதிய மைல்கல்லை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. #Mersal #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது. 

    அதுமட்டுமின்றி, உலக அளவிலும் ‘மெர்சல்’ படத்துக்கு கவனம் கிடைத்துள்ளது. சில விருதுப் போட்டிகளிலும் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.



    இதுவரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கு கிடைத்திராத பெருமை பெற்று மெர்சல் திரைப்படம் சாதனைப் படைத்துள்ளது.
    ×