search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inspected"

    • தங்கும் விடுதிகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இன்று மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலை பணிகள், கட்டட பணிகள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சீர்மிகு நகர திட்ட பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

    தொடர்ந்து இன்று மண்டலம் 4க்கு உட்பட்ட வார்டு 50, தென்னம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற நல வாழ்வு மையம், வார்டு 21 குமரன் பூங்கா மற்றும் வார்டு 43 ஆலங்காடு பகுதிகளில் செயல்பட்டு வரும் இரவு தங்கும் விடுதிகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வார்டு 27 குமார் நகர் மற்றும் வார்டு 1 அங்கேரிபாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட்டார். 

    • விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி முதல் எட்டயபுரம் வரை சாலைகளின் இரு புறமும் மொத்தம் 34 கிலோமீட்டர் தூரம் மரங்கள் நடப்படுகிறது.
    • மரங்களுக்கு அமைக்கப்படும் கம்பி வேலியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி முதல் எட்டயபுரம் வரை சாலைகளின் இரு புறமும் மொத்தம் 34 கிலோமீட்டர் தூரம் மரங்கள் நடப்படுகிறது. முதற்கட்டமாக பிள்ளையார்நத்தம் முதல் சாலைகளின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நாளை முதல் கட்டமாக 4 கிலோமீட்டர் தூரம் நடப்படும். இதையொட்டி மரங்களுக்கு அமைக்கப்படும் கம்பி வேலியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் மரங்கள் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராகவன், மரங்கள் மக்கள் இயக்கம் அமல்ராஜ், முருகன், சென்னை குமார், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்று வரும் 4-வது குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார், துணைமேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
    • 11 பள்ளி வாசல் ஜமாத்தை சோ்ந்த முத்துவல்லி மற்றும் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

    தாராபுரம் :

    விநாயகா் சதுா்த்தியை ஒட்டி, தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், விநாயகா் விசா்ஜன ஊா்வலம் நடைபெறும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    இதில், பொள்ளாச்சி சாலை அமராவதி ரவுண்டானா, பெரியகடை வீதி, டி.எஸ்.காா்னா் 5 சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டாா்.இதைத் தொடா்ந்து, தாராபுரம் சுற்றுவட்டார 11 பள்ளி வாசல் ஜமாத்தை சோ்ந்த முத்துவல்லி மற்றும் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.ஆய்வின்போது துணை காவல் கண்காணிப்பாளா் தனராசு, காவல் ஆய்வாளா் மணிகண்டன், போக்குவரத்து ஆய்வாளா் ஞானசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • கவிதைக்குடி கிராமத்தில் ஆய்வு செய்த கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ஒரு மூதாட்டியிடம் குறைகளை கேட்டார்.
    • அப்போது பரமக்குடி வட்டாட்சியர் தமீம்ராஜா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சுதர்ஷன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம்எட்டிவயல் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதன் பின்னர் போகலூர் ஊராட்சி மயானத்தையும், சத்திரக்குடி கிராம சந்தையில் உள்ளகழிப்பறை மற்றும் வளாகத்தையும்,சத்திரக்குடி ஊராட்சி தீயனூர் கிராமத்தில் பிரதம மந்திரி கிராமச் சாலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய தார் சாலையையும், கவிதைக்குடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஓ.பிளான்ட் மூலம் வழங்கப்படும் குடிதண்ணீரின் தரம் குறித்தும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பரமக்குடி வட்டாட்சியர் தமீம்ராஜா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சுதர்ஷன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ஏழை-எளிய மக்களுக்காக ஆலந்தலை பகுதியில் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.48.95 மதிப்பில் 400 சதுர அடியில் 450 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது
    • பயனாளிகள் ரூ.1.66லட்சம் கட்ட வேண்டும். பணம் கட்டியதும் அவர்கள் பெயருக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் ஏழை- எளிய மக்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    ஏழை-எளிய மக்களுக்காக ஆலந்தலை பகுதியில் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.48.95 மதிப்பில் 400 சதுர அடியில் 450 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    இந்த குடியிருப்பு பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.வரும் காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    75சதவீத கட்டுமான பணி முடிந்து விட்டது. மீதம் உள்ள பணிகள் முடிந்ததும் பயனாளிகளுக்கு வழங்கப்படும். பயனாளிகள் ரூ.1.66லட்சம் கட்ட வேண்டும். பணம் கட்டியதும் அவர்கள் பெயருக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.


    தஞ்சை பெரிய கோவிலில் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். #IdolWing #PonManickavel
    தஞ்சை:

    தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட பல்வேறு தகவல்கள், ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சர்வதேச கடத்தல் மன்னனான ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதில், இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏராளமான சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 89 சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.

    இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் சிலை, அவரது பட்டத்து அரசியான உலகமாதேவி சிலை ஆகியவை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.



    கோயில் வளாகத்தில் உள்ள சிலை பாதுகாப்பு மண்டபத்தில் நடத்தப்பட்ட தொடர் ஆய்வில் மேலும் சில சிலைகள் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்று ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோவிலுக்குள் இருந்த பக்தர்களை வெளியேற்றி கதவுகளை மூடிவிட்டு ஆய்வு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  #IdolWing #PonManickavel 
    ×