search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "incident"

    • பா.ஜ.க பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், இந்துக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசாவை கண்டித்தும் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    காந்தி ஜெயந்தியை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் திமுக தலைமையிலான அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இந்த ஊர்வல அனுமதியை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.

    மேலும் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறேன்.

    3000 ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுஸ்மிருதி நூலை குறிப்பிட்டு,

    இவ்வாறு மிக மோசமாக பேசி உள்ளார்.

    சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும் என்று யாரும் நிர்பந்தம் செய்யாத போது எதற்காக இதை பேச வேண்டும்?

    மற்ற மதத்தினரின் நூல்களில் உள்ள குறைகளை பற்றி ஆ.ராசா பேசுவாரா?

    தொடர்ச்சியாக இந்து மதத்தை இழிவு படுத்துவோர், மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

    • சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் முத்து (வயது 38). சம்பவத்தன்று இவர் 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மேலும் வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த அவர்கள் பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் பலாதாரம் செய்த முத்துவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் வசந்தா, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் முத்துவை சிறையில் அடைத்தனர்.

    • போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • தியேட்டரில் நடந்த பிரச்சினையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை தாக்குவதற்காக அரிவாள், கத்திகளுடன் காத்திருந்ததும் தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேம்பாலம் ரெயில்வே குட்ஷெட் சாலையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றி திரிவதாக தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் 6 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்த தினேஷ் (வயது 26), மணிகண்டன், சீனிவாசன், மணிகண்டன் உள்பட 6 பேர் என்பதும், தியேட்டரில் நடந்த பிரச்சினையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை தாக்குவதற்காக அரிவாள், கத்திகளுடன் காத்திருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், மணிகண்டன், சீனிவாசன் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து அரிவாள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மகன் அறிவழகன் என்பவருடைய வயலுக்கு இன்று காலையில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார்.
    • அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் தெற்கு கோழிய தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (58). விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் திருவிசநல்லூர் காருடையான் தெருவை சேர்ந்த சம்மந்தம் மகன் அறிவழகன் என்பவருடைய வயலுக்கு இன்று 10-ந்தேதி காலையில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார்.

    அப்பொழுதுவயலில் அறுந்து கிடந்த மின்கம்பி யை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தி லேயே கணேசன் பரிதா பமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில் அறிவழ கனின் மனைவி மீனா வயலில் பூச்சி மருந்து அடிக்கப்படுகிறதா என்பதை சென்று பார்த்தபோது கணேசன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசன் உடலை கைப்பற்றி திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருவிடைமருதூர் டி.எஸ்பி ஜாபர் சாதிக் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.

    பலியான கணேசனுக்கு பவானி என்ற மனைவியும், 4மகள்களும் உள்ளனர். 3 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வழிப்பறி சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • நகை பறிப்பு, கொள்ளை தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள், சமூக விரோத கும்பல்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. தனியாக செல்லும் பெண்கள், பூட்டியிருக்கும் வீடுகள் ஆகியவற்றை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர்.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களிடம் மர்ம கும்பல் நகை பறிப்பில் துணிச்சலாக ஈடுபட்டு வருகிறது. விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் நகை பறிப்பு, கொள்ளை தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    நேற்றும்கூட பட்டம்புதூரை சேர்ந்த பலசரக்கு வியாபாரி முருகேசன் என்பவர் தனது மனைவி ஜீவராணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதுஅவரை மறித்த மர்ம நபர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றது. இதுபோன்று விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் ஏராளமானோர் நகை-பணத்தை பறி கொடுத்து போலீஸ் நிலையங்களில் அைலந்து வருகின்றனர்.

    கடந்த மார்ச் மாதம் சாத்தூரில் 54 பவுன் நகை திருடுபோனது. இதுதொடர்பாக சாத்தூர் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தீவிரம் காட்டவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

    போலீசாரின் மெத்தன நடவடிக்கையால் சமூக விரோத கும்பல் துணிச்சலாக கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முதியவர்கள், பெண்கள் தனியாக வெளியே செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

    இதுதவிர மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை, ரேசன் அரிசி கடத்தல் போன்றவையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

    • விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து திருடப்பட்டுள்ளது.
    • இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் இந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த ஜி.எஸ்.டி. சாலை யில் விபூதி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று காலையில் வழக்கம்போல் கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலில் உள்ள கைரேகை சேகரித்தனர். கோவில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே 2 முறை இந்த கோவிலில் உண்டியல் இதுபோன்ற திருட்டு நடந்துள்ளது. இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் இந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தர்மபுரி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சின்னசாமி, மாதேஸ்வரன், கந்தசாமி, காதர், மாது, விஸ்வநாதன், கமலாமூர்த்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

    சுற்றுச்சூழலை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். பொதுமக்களின் போராட்டத்தை முடக்கும் வகையில் மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டக்குழுவினர் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    ×