search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inauguration ceremony"

    • காலம் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ வேண்டும்.
    • முன்னாள் ஐ.ஜி., பாரி பேச்சு

    திருப்பூர், ஜூன்.26-

    திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் 2023-24-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நிதியுதவி வழங்கும் விழா திருப்பூர்- மங்கலம் ரோட்டில் உள்ள ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக எஸ். இளங்கோவன், செயலாளராக ஆர். மோகன்ராஜ், பொருளாளராக ஆர். பினுமோன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். கவுரவ விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுனர் இளங்குமரன், முன்னாள் மாவட்ட ஆளுனர் நாராயண சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, உதவி ஆளுனர் மீனாட்சி ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐ.ஜி., பாரி பங்கேற்று பேசியதாவது:- புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்பது அவர்கள் பேசிய பேச்சிலிருந்து உணர முடிகிறது. நாம் தாய் மொழியின் பெருமையை உணர வேண்டும். மனிதராக பிறந்த நாம் பிறருக்கு கொடுப்பதால் உயர்ந்து நிற்கிறோம். தமிழ் வாழ வேண்டும் என்று ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் தனது உயர்ந்த உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் விட எளியவர்களுக்கு கொடுப்பது தான் உயர்வு என்கிறார் வள்ளுவர். இந்த நவீன உலகில் நமது வரலாற்றையும்-பண்பாட்டையும் நமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.

    இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி கடுமையாக உழைத்தால் நான்கு பேருக்கு உதவி செய்யும் நிலைக்கு வர முடியும். காலமும் நேரமும் முக்கியமானது. அதனை உணர்ந்து நாம் வாழ வேண்டும். நமது பெற்றோர்களை அனாதை இல்லத்துக்கு அனுப்பாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சி முடிவில் தனியார் பள்ளி ஆசிரியரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம், தெற்கு ரோட்டரி பள்ளிக்கு நாப்கின் எரியூட்டும் எந்திரம் வாங்குவதற்கு ரூ. 20 ஆயிரம், ரோட்டரி சார்பில் கட்டப்பட உள்ள முதியோர் இல்லத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டன. முதியோர் இல்லம் கட்ட 3 ஏக்கர் நிலம் வழங்கிய கனகராஜ் என்பவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட முன்னாள் தலைவர் மணி, முன்னாள் செயலாளர் விவேகானந்தன், முன்னாள் பொருளாளர் செல்வன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
    • திருப்பூரில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிலில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட தண்ணீர் சுத்திகரிப்பு (ஆர்.ஓ.) டீலர்ஸ் சங்கம் புதிதாக தொடங்கப்பட்டு சங்க அலுவலகம் திருப்பூர் ஓம் சக்தி கோவில் எதிரே அமைந்துள்ளது. சங்க அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். தலைவராக ராஜகோபால், துணை தலைவராக குணமுகிலன், செயலாளராக மணிகண்டன், துணை செயலாளராக முகமது ஷரீப், பொருளாளராக நவநீதராஜா, துணை பொருளாளராக ஷக்கீர், நிர்வாகிகள் செய்யதப்ப நிஜாம், சங்கர் ஆகியோர் பொறுப்பேற்றார்கள்.

    கூட்டத்தில், திருப்பூரில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழிலில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. தொழிலை மேம்படுத்தவும், நெறிமுறைப்படுத்தவும், போலி உதிரிபாகங்கள் மற்றும் போலி நிறுவனங்களை தடுக்கவும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உதிரிபாகங்களுக்கான விலையை நிர்ணயம் செய்வது, உறுப்பினர்களுக்கு சங்கத்தின் சார்பில் சர்வீஸ் பை வழங்குவது, சங்க உறுப்பினர்களுக்கு காப்பீடு செய்தல் மற்றும் அடையாள அட்டை, தொழில் சார்ந்த உதவிகளை வழங்குவது, இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை சங்கத்தில் உறுப்பினராக சேர்ப்பது, உறுப்பினர்களிடம் சந்தா வசூலிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ திறப்பு விழா நடந்தது.
    • நான்காவது கிளையை காரைக்குடி செக்காலை ரோட்டில் தொடங்கியது.

    காரைக்குடி

    மதுரையில் ரெடிமேட் கதவுகள், பிளைவுட்ஸ், கண்ணாடிகள், லாமி னேட்ஸ், ஹார்டுவேர் பொருட்களின் புகழ்பெற்ற விற்பனை நிறுவனமான எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ நிறுவனம் மதுரை, கோவை, சிவகாசி ஆகிய ஊர்களைத் தொடர்ந்து தனது நான்காவது கிளையை காரைக்குடி செக்காலை ரோட்டில் தொடங்கியது.

    இதனை நிர்வாக இயக்குநர்கள் எம்.ஆர்.எஸ்.பிரபாகரன், எம்.ஆர்.எஸ்.பி.பவானி ஆகியோர் தலைமையேற்று திறந்து வைத்தனர். எம்.ஆர்.எஸ்.பி.சிவராஜ் மணிமாலா மற்றும் எம்.ஆர்.எஸ்.பி.வசந்தராஜ் கீர்த்திகா தம்பதியினர் வரவேற்றனர்.

    மதுரை பி.எஸ்.எம்.என் மாரியப்ப நாடார் அன் கோ உரிமையாளர் கணேசன் பொற்செல்வி தம்பதியர் மற்றும் மதுரை எஸ்.வி.எஸ் வெற்றிவேல் நாடார், கோந்து கடை உரிமை யாளர் மோகன் செல்வி தம்பதியர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

    இதில் காரைக்குடி கட்டுமான பொறியா ளர்கள் சங்க நிர்வாகிகள், பில்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள், ஆர்க்கி டெக்சர் வல்லு நர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் பொன்முடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், விக்கிரவாண்டிஎம்.எல்.ஏ. புகழேந்தி, மாவட்ட விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சீலா தேவி, மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர்.விசுவநாதன், திருவெண்ணைநல்லூர் யூனியன் சேர்மன் ஓம்சிவசக்திவேல், ஒன்றியகுழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏமப்பூர் தேவி செந்தில், டி.எடையார் சுந்தரமூர்த்தி வரவேற்றனர். இதில் தமிழக உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்எம்.எல்.ஏ. புஷ்பராஜ் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட பிரதிநிதி பக்தவச்சலு மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு ,நந்தகோபாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சுபாஷ், மஞ்சுளா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பா ளர் விசுவநாதன், ஒன்றிய விவசாய அணி அமை ப்பாளர் வெங்க டேசன், தலைமைக் கழக பேச்சாளர் சிறுவனூர் பரசுராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்  

    • மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
    • நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    4.89 ஏக்கர் நிலத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டிட மான 'ஏ' பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்ப ளவில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    'பி' பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்ட ரில் அறுவை சிகிச்சை வளாகம், தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது.

    மூன்றாவது கட்டிடமான 'சி' பிளாக்கில் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ந் தேதி அந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சார்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், திட்டமிட்ட தேதியில் ஜனாதிபதியின் சென்னை வருகை ரத்தாகி உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழாவை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து ஜனாதிபதியின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற் கொள்கிறார். எனவே, மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் அந்த விழா ஒத்திவைக்கப் பட்டு, ஜூலை முதல் வாரத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது.
    • தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், சிவகங்கை மாவட்ட அலுவலர் சத்திய கீர்த்தி, உதவி அலுவர் தாமோதரன், பேரூராட்சித் தலைவர் நஜுமுதீன், நிலைய அலுவலர் பிரகாஷ், குமரேசன், பேரூராட்சி அலுவலர் கோபிநாத், பேராசிரியர் ஆபிதீன், ஒன்றிய துணைச்செயலர் சிவனேசன், துணைத்தலைவர் இப்ராகிம், இளைஞரணி பைரோஸ்கான், தகவல் தொழில் நுட்பஅணி கண்ணன், அழகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கோடியக்காடு ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜூ, ஒன்றிய பொறியாளர் மணிமாறன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், சுந்தரம் உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    • தமிழர் தேசம் கட்சியின் பொறுப்பாளர் அறிமுக விழா நடக்கிறது.
    • மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் செய்திருந்தார்.

    மதுரை

    மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர் அறிமுக விழா நடக்கிறது. ஆலாத் தூரில் உள்ள கணேஷ் மகாலில் மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் கட்சியின் நிறுவனரும், தலைவருமான கே.கே. செல்வகுமார் கலந்து கொண்டு தென்மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரை யாற்றுகிறார்.

    மாநில பொதுச் செய லாளர் தளவாய் ராஜேஷ், தலைமை ஒருங்கிணைப் பாளர் குரு மணிகண்டன் உள்பட தலைமை நிர்வாகி கள் பேசுகிறார்கள்

    இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட பொறுப் பாளர்கள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்து கொள்கின்ற னர்.

    தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட பொறுப் பாளர் அறிமுக விழா விற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் செய்திருந்தார்.

    • மதுரை சூர்யா நகர் அருகே ஜெய பாரத் ஹோம்சின் டைட்டன் சிட்டி தொடக்க விழா நடந்தது.
    • இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது

    மதுரை

    மதுரையை அடுத்துள்ள சூர்யா நகரில் ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யாநகரில் டைட்டன் சிட்டி என்ற பெயரில் 300 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நடந்தது.

    ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றார். ஜெயபாரத் ஹோம்ஸ் இயக்குநர் நிர்மலாதேவி ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார், சகோதரர்கள் அழகர், முருகன், செந்தில், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் பேசுகையில், கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

    மதுரை மற்றும் கோவையில் எங்களது நிறுவனம் சார்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு வீடுகளை கட்டி தர சொல்கிறார்கள். நாங்களும் தரமான வீடுகளை கட்டித்தந்து கட்டுமானத்துறையில் அனைவரும் பாராட்டும் வகையில் வீடுகளை கட்டித் தருகிறோம்.

    மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மிகுந்த தரத்துடன் கட்ட உள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.59 லட்சம் முதல் பல்வேறு தரமான வசதிகளுடன் வீடுகள் கட்ட உள்ளோம் என்றார்.

    அதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இதனை ஆயிரக்

    கணக்கானோர் கேட்டு ரசித்தனர்.

    • புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
    • ஊராட்சி செயலாளர் கவிதா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சியில், ரூ.19 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உத்தமராஜ் தலைமை வகித்தார். இந்த விழாவில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, தி.மு.க.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன்,ஊராட்சி செயலாளர் கவிதா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் 35 வது பேட்ச் டி.பார்ம், 31-வது பேட்ச் பி.பார்ம், 7- வது பேட்ச் பார்ம் டி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, கல்லூரி செயலாளர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். வத்திராயிருப்பு அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன், சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை மயக்கவியல் நிபுணர் ஜெகநாத் பிரபு ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு மருந்தியல் துறையின் எதிர்காலம் குறித்து பேசினர்.

    அரவிந்த் ஹெர்பல் லேப் நிர்வாக இயக்குநர் பரத்ராஜ், மெட் பிளஸின் சீனியர் மேனேஜர் வெங்கட் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவமனை டீன் சேவியர் செல்வா சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரிக்கும் ,மெட் பிளஸ், அரவிந்த் ஹெர்பல் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.

    • விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
    • கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பாக தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.சங்கர் தலைமையில் பல்லடம் தொகுதி பூமலூர் பகுதியில் விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.தொடர்ந்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     விழாவில் தெற்கு மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், தெற்கு மாவட்ட ஆலோசகர் முருகானந்தம், தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இவ்விழாவில் மங்கலம் பகுதி தலைவர் பாலசுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் சம்சுதீன், துணை தலைவர் விக்னேஷ், பொருளாளர் நவீன், இளைஞரணி தலைவர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பூர் மேற்கு பகுதி தலைவர் விஜய், பல்லடம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×