search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனாதிபதி சென்னை வருகை ரத்து: கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு ஒத்திவைப்பு
    X

    ஜனாதிபதி சென்னை வருகை ரத்து: கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு ஒத்திவைப்பு

    • மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
    • நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    4.89 ஏக்கர் நிலத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டிட மான 'ஏ' பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்ப ளவில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    'பி' பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்ட ரில் அறுவை சிகிச்சை வளாகம், தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது.

    மூன்றாவது கட்டிடமான 'சி' பிளாக்கில் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ந் தேதி அந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சார்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், திட்டமிட்ட தேதியில் ஜனாதிபதியின் சென்னை வருகை ரத்தாகி உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழாவை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து ஜனாதிபதியின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற் கொள்கிறார். எனவே, மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் அந்த விழா ஒத்திவைக்கப் பட்டு, ஜூலை முதல் வாரத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×