search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி-உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம்:  அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
    X

    மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்த காட்சி. அருகில் கலெக்டர் பழனி உள்ளார்

    திருவெண்ணைநல்லூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி-உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம்: அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

    • விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் பொன்முடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், விக்கிரவாண்டிஎம்.எல்.ஏ. புகழேந்தி, மாவட்ட விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சீலா தேவி, மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர்.விசுவநாதன், திருவெண்ணைநல்லூர் யூனியன் சேர்மன் ஓம்சிவசக்திவேல், ஒன்றியகுழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏமப்பூர் தேவி செந்தில், டி.எடையார் சுந்தரமூர்த்தி வரவேற்றனர். இதில் தமிழக உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்எம்.எல்.ஏ. புஷ்பராஜ் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட பிரதிநிதி பக்தவச்சலு மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு ,நந்தகோபாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சுபாஷ், மஞ்சுளா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பா ளர் விசுவநாதன், ஒன்றிய விவசாய அணி அமை ப்பாளர் வெங்க டேசன், தலைமைக் கழக பேச்சாளர் சிறுவனூர் பரசுராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    Next Story
    ×