search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband wife"

    • புரியாத விஷயங்களை துணையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
    • துணையின் பெற்றோருக்கு எந்த இடத்திலும், மரியாதை கொடுக்கத் தவறக்கூடாது.

    ஆண்-பெண் இருவருக்குமே தனது வாழ்க்கைத் துணையின் பெற்றோருடன் இனிமையான உறவை ஏற்படுத்திக்கொள்வது முக்கியமானது. இதனால் கணவன்-மனைவி உறவில் ஆனந்தம் நிலைக்கும். அதற்கான சில ஆலோசனைகள் இங்கே…

    முதல் சந்திப்பை இனிமையாக்குங்கள்: யாராக இருந்தாலும், முதல் சந்திப்பு நல்ல முறையில் இருந்தால், நம் மீதான அபிப்ராயமும் சரியாக அமையும். துணையின் பெற்றோரை சந்திக்கும்போது, புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுங்கள். உங்களை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு, இயல்பாக உரையாடுங்கள். அவர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முயலுங்கள். அவர்களின் குடும்பம், விருப்பு - வெறுப்பு, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள். இது இரண்டு தரப்பிலும், இறுக்கமான மனநிலையை மாற்றும்.

    உங்களது பெற்றோராக அணுகுங்கள்: வாழ்க்கைத் துணையின் பெற்றோரை மூன்றாம் நபராகப் பார்க்காமல், உங்களது பெற்றோர்போல் அணுகுவது முக்கியம். குறிப்பாக, துணையின் தாயை, உங்களது தாயைப் போல் நினைத்து பழக வேண்டும். உங்கள் தாயிடம் பேசுவது போல் இயல்பாகவும், நேர்மையான மற்றும் கண்ணியமான அணுகுமுறையுடனும் இருப்பது அவசியம். அவர்களின் இளமைப் பருவம், வாழ்க்கையின் இனிமையான சம்பவங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்த இத்தகைய உரையாடல்கள் உதவும். இதுபோன்று பேசுவதால், எதிர்பார்த்ததைவிட அதிக பிணைப்பை ஏற்படுத்த முடியும்.

    மதிப்பளியுங்கள்: வாழ்க்கைத் துணையின் பெற்றோருடன் இருக்கும் சமயங்களில், அவர்களின் குடும்ப வழக்கங்களை மதிக்க வேண்டும். அவர்களது கலாசாரம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளுங்கள். அவை புதிதாக இருந்தாலும், அதைக் குறை கூறாமல் ஏற்றுக்கொள்வது அவசியம். புரியாத விஷயங்களை துணையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது அவர்கள் மீதான உங்கள் மரியாதையை வெளிப்படுத்தும். மேலும், அவர்களின் அன்பைப் பெறவும் வழிவகுக்கும். துணையின் பெற்றோருக்கு எந்த இடத்திலும், மரியாதை கொடுக்கத் தவறக்கூடாது. குறிப்பாகப் பிறர் முன்னிலையில் வாழ்க்கைத் துணையின் பெற்றோருக்குத் தகுந்த மரியாதை அளித்தால், அவர்களுக்கு உங்கள் மீதான அன்பும் அதிகரிக்கும்.

    அன்பை வெளிப்படுத்துங்கள்: தங்கள் மகன் அல்லது மகளை அவர்களின் வாழ்க்கைத்துணை அதிகம் நேசிக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் விரும்புவார்கள். பிள்ளைகள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிய பெற்றோர் விரும்புவது இயல்பு. எனவே, அவர்கள் முன்னிலையில், வாழ்க்கைத் துணையுடன் வாதிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உறவுக்கு மனம் திறந்த பேச்சு, பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவை அவசியம். தங்கள் பிள்ளைகளின் நலனில் வாழ்க்கைத்துணை அக்கறை செலுத்துவது பெற்றோருக்குப் புரிந்தால், கட்டாயம் உங்கள் மீதான மதிப்பும், அன்பும் அதிகரிக்கும்.

    • இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.
    • மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

    திருமண பந்தத்தில் கணவரின் ஆதிக்கமே தலை தூக்கி நிற்கிறது. அப்படி ஆதிக்கம் செலுத்துவது தம்பதியர் இடையே அன்பை குறைத்துவிடும். மனைவிக்கு போன் செய்யும்போது இணைப்பு பிசியாக இருந்தால் வேறொருவருடன் பேசுவதாக சந்தேகிப்பது, சமூகவலைத்தளங்களில் வேறொருவருடன் அரட்டை அடிப்பதாக சந்தேகிப்பது, நடத்தையில் குறை கூறுவது போன்றவை குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து விடும்.

    எந்தவொரு சூழலிலும் மனைவி மீது கணவர் சந்தேகம் கொள்ளக்கூடாது. அந்த அளவிற்கு துணை மீது கணவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.

    கணவன்-மனைவி இருவருக்குள் சந்தேக எண்ணம் தலைதூக்கினால் உடனடியாக பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், அபிலாஷைகள் இருக்கும். அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருவர்மீது ஒருவர் ஆணித்தரமான நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை எந்தவொரு சூழலிலும் சிதைப்பதற்கு இடம் கொடுத்துவிடவும் கூடாது.

    குடும்ப நலன் குறித்து எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் இருவரும் கலந்து பேச வேண்டும். வெளி இடங்களுக்கு செல்வது, ஆடை அணி வது, விருப்பமான உணவு சாப்பிடுவது, செலவு செய்வது எதுவாக இருந்தாலும் கணவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. தன் விருப்பத்தின்படிதான் மனைவி செயல்பட வேண்டும் என்று பிடிவாதம் கொள்ளக்கூடாது.

    வீட்டில் கணவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தால் அந்த உறவில் நேசமும், பாசமும் குறைவாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில் மனைவி தன் உணர்வுகளை கணவர் புரிந்துகொள்ளும் படி பக்குவமாக பேச வேண்டியது அவசியம். அதனை கேட்கும் மனநிலையில் கணவர் இல்லாமல் இருந்தால் மன நல நிபுணரின் ஆலோசனையை நாடலாம்.

    கணவர் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டாலோ, அதிகாரம் செலுத்தினாலோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினாலோ அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதேவேளையில் மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

    தம்பதியர் ஒருவரையொருவர் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் தாம்பத்ய பந்தம் வலுவாக இருக்கும். இருவருக்குமிடையே சந்தேக குணமோ, ஈகோ பிரச்சினையோ, சர்வாதிகார மனபாவமோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அது தாம்பத்ய வாழ்க்கையை சிதைத்துவிடும்.

    • ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும்.
    • வெளி இடங்களுக்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது.

    பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாடம் சில நிமிடங்களை கூட குழந்தைகளுடன் செலவிடாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி கிடக்கும் சுபாவம் அதிகரித்து வருவதுதான் அதற்கு காரணம். அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் அவசியம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டாக வேண்டும்.

    குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கு குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும். அதற்காக வாரந்தோறும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

    மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கூட பயண திட்டத்தை வகுக்கலாம். தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

    அருகில் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது. குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை பின் தொடர்ந்து வருவது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும். குடும்ப சுற்றுலா மூலம் மேலும் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.

    குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும்:

    குடும்பத்தினருடன் நாம் எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்பதை விடுமுறைகள் உணர வைக்கும். மற்ற நாட்களில் அவசரமாக வெளியே செல்லும்போது குடும்பத்தினருடன் பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம். அந்த குறையை விடுமுறை நாட்களில் போக்கிவிடலாம். வீட்டிற்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கோ, கோவிலுக்கோ செல்லலாம்.

    அங்கு குழுவாக அமர்ந்து மனம் விட்டு பேசலாம். வீட்டில் விடுமுறை நாளை செலவிட நேரிட்டால் குடும்பத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றை வாரம்தோறும் பகிரும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அது கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பை அதிகப்படுத்தும்.

    மன அழுத்தத்தை குறைக்கும்:

    பொதுவாக பணி நெருக்கடிதான் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்து விடுகிறது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதன் மூலம் பணி சூழலில் இருந்தும், மன நெருக்கடியில் இருந்தும் விடுபட்டு விடலாம்.

    குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம். மன நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதன் மூலமே மன அழுத்தத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விடலாம்.

    உற்சாகத்தை தூண்டும்:

    குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள திறந்தவெளி பகுதியில் குழுவாக அமர்ந்து ஓய்வு நேரத்தை செலவிடலாம். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வரவழைக்கும் சுவாரசியமான கதைகளை பகிர வேண்டும்.

    தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை ஒவ்வொருவரும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவும்.

    • ஒவ்வொரு நிலையிலும் தம்பதிகள் ஒற்றுமையோடு பயணித்தால் வாழ்க்கை இனிக்கும்.
    • எதையும் செய்வதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் கட்டாயம் விவாதிக்க வேண்டும்.

    திருமண பந்தத்தில், கணவன்-மனைவி இருவரில் யார் எந்த முடிவை எடுத்தாலும், அதன் விளைவுகள் இருவரையுமே பாதிக்கும். எதையும் செய்வதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் கட்டாயம் விவாதிக்க வேண்டும். அதற்கான ஆலோசனைக் குறிப்புகள் இதோ:

    நிதி சார்ந்தது:

    குடும்பத்தில், பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவது நிதி சார்ந்த விஷயங்களே. ஒருவர் மட்டுமே சம்பாதித்தாலும் அல்லது இருவரும் வருமானம் ஈட்டினாலும், குடும்பத்திற்கான நிதி சார்ந்தவற்றில் ஒருவரது முடிவு மட்டும் போதாது. கணவன், மனைவி இருவர் சார்ந்த முடிவு கட்டாயம் இருக்க வேண்டும்.

    குழந்தை சார்ந்தது:

    குழந்தைப் பெற்றுக்கொள்வதில் கணவன்-மனைவி இருவருக்கும் பங்குண்டு என்றாலும், அவரவருக்கு தனித்தனி விருப்பங்களும் இருக்கும். இதில், ஒருவர் சிறிது காலம் திருமண வாழ்க்கையை அனுபவித்து விட்டு, பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கலாம். மற்றொருவர் உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பலாம். இது குறித்து, இருவரும் விவாதித்து அதற்கேற்ப முடிவு செய்து கொள்ள வேண்டும்.

    அந்தரங்கம் சார்ந்தது:

    தம்பதிக்குள் மகிழ்ச்சியைக் கொடுப்பதும், பிரச்சினையை ஏற்படுத்துவதும் அந்தரங்கம் சார்ந்ததாகவே இருக்கும். இதில் ஒருவர் மற்றொருவரின் விருப்பத்தையும், உணர்வுகளையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் கட்டாயத்திற்கோ, ஒருவரின் தனிப்பட்ட முடிவுக்கோ இடம் கொடுக்கக்கூடாது. அந்தரங்கத்தைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாவிட்டால், அந்த உறவில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதைப் பற்றி இருவரும் தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம்.

    குடும்பம் சார்ந்தது:

    சிலருக்கு கூட்டுக் குடும்பமாக வாழ்வது பிடித்திருக்கலாம். சிலர் தனிக்குடும்ப வாழ்க்கையை விரும்பலாம். இதில் எதுவாக இருந்தாலும், திருமணத்துக்கு முன்பே தெளிவாக விவாதித்து முடிவு செய்ய வேண்டும். இருவரும் தனிப்பட்ட கருத்துகளை வைத்துக் கொண்டு முடிவு எடுப்பதால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். முன்னரே தெளிவாக முடிவெடுத்து செயல்படுவது, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

    எதிர்கால இலக்கு சார்ந்தது:

    தம்பதிக்குள் பிரிவு வர முக்கியக் காரணமாக இருப்பது, நீண்ட கால இலக்கு குறித்து முன்னரே சரிவர விவாதிக்காமல் இருப்பதுதான். கணவன்-மனைவி இருவருக்கும், சிறு வயது முதலே எதிர்கால இலக்கு இருக்கும். திருமணத்திற்கு முன் அந்த இலக்கை நோக்கி எளிதில் நடைபோட முடியும். திருமணத்திற்குப் பின்பு அதை நிறைவேற்றுவதற்கு ஒருவரின் துணை மற்றவருக்கு வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும், ஒருவர் மட்டுமே முடிவு எடுத்துச் செயல்படாமல், இலக்கை நோக்கிப் பயணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.

    இதுபோன்று, ஒவ்வொரு நிலையிலும் தம்பதிகள் ஒற்றுமையோடு பயணித்தால் வாழ்க்கை இனிக்கும்.

    • தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்.
    • மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    இல்லற வாழ்க்கையில் இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தம்பதியரிடையே புரிதல் இருக்க வேண்டும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும். அந்த சமயத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும்.

    கருத்து மோதல் தலைதூக்கும்போது ஒருசில வார்த்தைகளை உச்சரிப்பதை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தை மற்றொருவருக்கு மன வேதனையை உண்டாக்கக்கூடும். அதனால் தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தை பிரயோகத்தை கவனமாக கையாள வேண்டும்.

    'உன்னால் என்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நீ கேட்டுத்தான் நடந்தாக வேண்டும்' என்ற ரீதியில் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அது துணையின் கோபத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அவருடைய ஆழ்மனதில் அந்த வார்த்தை ஆழமாக பதிந்துவிடும். அது ஆறாத மன காயமாக மாறிவிடவும் கூடும். அதனால் தன்னை சார்ந்திருந்துதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

    எதிர்பாராதவிதமாக நிகழும் தவறுக்கு துணை காரணமாக இருக்கலாம். அது அவருக்கு தெரியாமலேயே நடந்திருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் முன்கூட்டியே அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் செய்த தவறுக்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூட 'தன்னால் இப்படியொரு தவறு நடந்துவிட்டதே' என்ற வேதனை அவரை ஆட்கொண்டிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'நீதான் காரணம்' என்று துணை மீது குற்றம் சாட்டக்கூடாது. அது மோதல் போக்கை உண்டாக்கிவிடும். தவறை திருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வதற்கு பதிலாக திசை திருப்பும் நடவடிக்கையாக மாறிவிடும்.

    எதேச்சையாக தவறுகள் நடக்கும்போது 'நீ ஒரு முட்டாள், உன்னால் அதற்கேற்பத்தான் செயல்பட முடியும்', 'நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவள்' என்பன போன்ற வார்த்தைகளை உபயோகித்து திட்டுவது துணையின் தன்மானத்தை சீண்டுவதாக அமையும். அவரது சுய கவுரவத்தை சிதைப் பதாகவும் அமைந்துவிடும். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் துணையை விட கணவர் அதிக தவறுகளை செய்திருக்கக்கூடும். அவரது தவறான வழி நடத்தல்தான் தவறுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கும். அதனால் தவறுகள் நிகழும் பட்சத்தில் இருவரும் நிதானம் இழக்காமல் அதனை திருத்துவதற்கான முயற்சியில்தான் கவனம் செலுத்த வேண்டும். துணை வருத்தப்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்திருந்தால் மன்னிப்பு கேட்கவும், சமாதானம் செய்யவும் தயங்கக்கூடாது.

    அதேபோல் தவறு நிகழும்போது, 'நீ கடந்த முறையும் அப்படித்தானே செய்தாய்? இதுவே உனக்கு வாடிக்கையாகி விட்டது' என்றும் பேசக்கூடாது. அது உறவுக்குள் விரிசலை அதிகப்படுத்திவிடும். கணவர் தன் மீது எப்போதும் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை துணையிடம் விதைத்து விடும். குடும்ப மகிழ்ச்சியையும் சிதைத்துவிடும்.

    மேலும் தவறு நடந்துவிட்டால், 'எதனால் அந்த தவறு நிகழ்ந்தது?' என்பதை கண்டறி வதற்கே நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் 'ஏன் இப்படி நடந்தது. எனக்கு உடனே பதில் சொல்' என்று கடுமையாக திட்டுவதும் கூடாது.

    நடந்த தவறை நினைத்து துணை வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை உணராமல், 'ஏன் எதுவும் பேசாமல் 'உம்'மென்று இருக்கிறாய்? வாயை திறந்து பதில் சொல்' என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக ''நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இருவரும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போமா?" என்று சொல்லிப் பாருங்கள்.

    துணை முக மலர்ச்சியுடன் செயல்பட தொடங்கிவிடுவார். தவறுகளையெல்லாம் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். தேவையற்ற கருத்து மோதல்கள் எழுவதற்கு இடமிருக்காது. இல்லற வாழ்வில் நிம்மதியும் குடிகொள்ளும்.

    • செயின் பறிப்பில் ஈடுபட்ட கணவன்- மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
    • கார், மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க நகைகள் உள்பட 18 லட்சம் ரூபாய் மதிப்பு உடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை

    மதுரை திருப்பரங் குன்றம், திருநகர் ஆகிய பகுதிகளில் தங்க சங்கிலி, வழிப்பறி தொடர்ச்சியாக நடந்து வந்தது. இதில் தொடர்பு உடைய குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷ னர் செந்தில்குமார் உத்தர விட்டார்.

    இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் ரவி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவ ர்கள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது திருப்பரங் குன்றம் பகுதியில் பதுங்கி இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் கும்பலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க நகைகள் உள்பட 18 லட்சம் ரூபாய் மதிப்பு உடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கணவன்-மனைவி

    இதனை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஜனபுல்லா (வயது 45), மனைவி ராசியா (வயது 35), 17 வயது மகன் மற்றும் ஊமச்சிகுளம் சைனி மனைவி சித்ரா (வயது 29) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    • இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வேலைகளை செய்து கொடுத்து, காதலை அதிகப்படுத்தலாம்.
    • விடுமுறையில் மனைவியோடு, சமையல் அறையில் கதை பேசியபடி வீட்டுவேலைகளை செய்யலாம்.
    • கணவன்மார்களின் அரைகுறை சமையல் கூட, மனைவிகளுக்கு முழு மனநிறைவை கொடுக்கும்.

    மனைவி சமைக்கும் உணவின் ருசியை குறைகூறும் கணவன்மார்கள், அதை சரிப்படுத்துவதற்கு முயல்வதில்லை. உணவு விஷயத்தில் 'டைனிங் டேபிளோடு' நின்று விடாமல், அடிக்கடி சமையல் அறைக்குள்ளும் 'சர்பிரைஸ் விசிட்' கொடுங்கள். குக்கர் விசில் சத்தம், மிக்ஸி-கிரைண்டர் என இரைச்சல் சத்தத்துடன் சமையல் அறையில் அவதிப்படும் மனைவிக்கு, அன்பு கணவரின் வருகை சற்று ஆறுதலை கொடுக்கலாம். வேலைக்கு செல்லும் நாட்களில் நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் விடுமுறை நாட்களிலாவது காய்கறி நறுக்குவது, சப்பாத்தி மாவு தேய்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடலாம். அதனை அரைகுறையாக செய்தாலும் அதுவும் அன்பு தொல்லையாக மாறி ரொமாண்டிக் பட்டியலில் சேரும்.

    வெளிநாடுகளில் இரவு உணவின்போது பயன்படுத்திய பாத்திரங்களை, மனைவி கழுவி கொடுக்க, கணவன் உணவின் சுவையை புகழ்ந்தபடி துணியை கொண்டு துடைத்து வைப்பார். இதை நம் வாழ்விலும், செய்து பார்க்கலாம். நாள்தோறும் செய்யமுடியாத பட்சத்தில், வார விடுமுறையில் மனைவியோடு, சமையல் அறையில் கதை பேசியபடி வீட்டுவேலைகளை செய்து முடிக்கலாம்.

    விடுமுறை நாட்களில், வீட்டில் ஓய்வெடுக்கும்போது வீட்டை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு மனைவியின் வேலைப்பளுவை குறைக்கலாம். குறிப்பாக சோபா செட்டுகளை சுத்தப்படுத்துவது, வீட்டில் படிந்திருக்கும் தூசிகளை அகற்றுவது, பூஜை பொருட்களை சுத்தப்படுத்தி கொடுப்பது... என இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வேலைகளை செய்து கொடுத்து, காதலை அதிகப்படுத்தலாம். இதுபோன்ற பணிகள், அவர்களுக்கு பூங்கொத்தை பரிசளித்தது போன்ற உணர்வை கொடுக்கும்.

    சில பெண்களுக்கு காபி குடிக்க பிடிக்கும். சிலருக்கு சமோசா, பஜ்ஜி, பகோடா போன்ற நொறுக்குத்தீனிகளை ருசிப்பது பிடிக்கும். சிலருக்கு பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளை சுவைக்க பிடிக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விருப்ப உணவு இருக்கும். மனைவியின் விருப்ப உணவை தெரிந்து கொள்வதோடு, அதை சமைக்கவும் பழகலாம். கணவன்மார்களின் அரைகுறை சமையல்கூட, மனைவிகளுக்கு முழு மனநிறைவை கொடுக்கும்.

    • பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும்.
    • பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
    • மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    மனிதர்களின் அடிப்படை குணாதிசயங்களில் இருந்து இந்த நூற்றாண்டில் காணாமல்போன விஷயங்கள் மூன்று. அவை: பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை. இவைகள் இல்லாமல் போனதால்தான், கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்துக்கு மாற்றாக வேறு எதையும் அவர்கள் கருத்தில்கொள்வதில்லை. முறித்துக்கொள்வது மட்டுமே முடிவானது என்று கருதுகிறார்கள்.

    ஆணும், பெண்ணும் சரி சமம் என்று தலைநிமிர்ந்து நிற்கும் இன்றைய தலை முறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. பொறுமையின்றி, நிதானமின்றி அதிரடியும் ஆவேசமுமாக களத்தில் இறங்கி சண்டையிட்டுக்கொண்டு விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள். ஆனால் விவாகரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி பலரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் இழந்த எதையும் பணத்தால் வாங்கமுடியாது என்பதை உணரும்போது அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.

    மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். அதை திருத்திக்கொள்ளும் முயற்சிதான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்பு செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொருவர் வந்துவிடுகிறார்.

    திருமணத்துக்கு முன்பு - திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு - பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அநேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.

    விவாகரத்துக்கு பிறகு ஆண்களும் அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. 'தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!' என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிதாகி தன் கண்முன்னே வந்து நின்று மிரட்டும். அந்த நேரத்தில் தன் மீதே தனக்கு கோபமும், வருத்தங்களும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண் பாடான பாதையில் அவர்கள் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.

    அதனால் அவர்களது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவர்களுடைய வாழ்க்கை யில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்துவிட்டதை புரிந்துகொள்வார்கள்.

    பெண்கள்தான் விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். என்னதான் மனதளவில் பெண்கள் தைரியமானவர்களாக இருந்தாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து குறைந்துவிடும். அதற்குதக்கபடி பெண்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்துபோவார்கள். அப்போது தங்களுக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தங்களுக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வார்கள்.

    அப்படி உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, 'நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கையும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும். அதனால் மணவாழ்க்கையை முறித்துக்கொள்ளாமல், பொருந்திப்போவதே சிறந்தது.

    • திருமணத்திற்கு முந்தைய ரகசியங்களை முன்பின் யோசிக்காமல் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை.
    • ரகசியங்களை ரகசியமாகவே வைத்திருப்பதுதான் நல்லது.
    • பல விவாகரத்துகளுக்கு கடந்தகால வாழ்க்கை காரணமாக கூறப்பட்டுள்ளது.

    ஆணும் - பெண்ணும் கணவன், மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பின்பு அவர்களுக்குள் ரகசியங்கள் இருக்கலாமா? என்ற கேள்விக்கு இன்றைய மனோதத்துவ நிபுணர்கள் தரும் விடை வித்தியாசமானதாக இருக்கிறது.

    'ரகசியங்கள் இருவருக்குள்ளும் இருக்கத்தான் செய்யும். அதை அப்படியே ரகசியமாகவே வைத்திருப்பதுதான் நல்லது. கணவனும், மனைவியும் முந்தைய ரகசியங்களை பாதுகாக்கும் வரைதான் வாழ்க்கை இனிக்கும்' என்று சொல்கிறார்கள். ஒளிவு மறைவற்ற வெளிப்படையான பேச்சு பலரது வாழ்க்கையில் புயலை கிளப்பி இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக திருமணத்திற்கு முந்தைய விஷயங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது வீண் குழப்பங்களை வளர்த்து விவாகரத்து வரை கொண்டுபோய்விட்டுவிடும் என்று கூறும் அவர்கள், திருமணத்திற்கு முன்பும், பின்பும் கணவனும்-மனைவியும் பேசக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று பெரிய பட்டியலே போட்டுக்காட்டுகிறார்கள்.

    திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையை முற்றிலும் மாறுபட்டதாக அமைத்துக்கொள்ளவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் முயற்சிக்கிறார்கள். அதற்கான முதல்படியாக கணவருடன் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், ஒளிவுமறைவற்ற தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். அது நல்லதுதான். திருமணத்திற்கு பின்பு ரகசியங்கள் தேவையில்லை. ஆனால் திருமணத்திற்கு முந்தைய ரகசியங்களை முன்பின் யோசிக்காமல் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை.

    திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு முந்தைய விஷயங்கள் எல்லாவற்றையும் ரகசியம் காக்காமல் கூறிவிட நினைப்பது பலரின் இயல்பு. தப்புத் தண்டா எதுவும் செய்யவில்லையே என்ற மனப்பாங்குடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாராகிறார்கள்.

    திருமணத்திற்கு முன்பு நெருடலான தொடர்புகள் இருந்தால்தான் பிரச்சினை உருவாகும் என்பதில்லை. மனைவி கூறும் சாதாரண விஷயங்கள்கூட கணவரின் மனதில் சந்தேகத்தையும், தவறான எண்ணத்தையும் வளர வைத்துவிடலாம். திருமணத்திற்கு முன் நடந்த சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதால், அதுவே விபரீதமாக மாறிய நிகழ்வுகள் அனேகம். பல திருமண பந்தங்களை அது சிதறடித்திருக்கிறது. சமீபகாலமாக நடக்கும் பல விவாகரத்துகளுக்கு கடந்தகால வாழ்க்கை காரணமாக கூறப்பட்டுள்ளது.

    கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் அதிகரிப்பதால், அதற்கான கவுன்சலிங் பெற வருபவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆண்களில் பலர் 'என் மனைவி நல்லவள் இல்லை. அதனால் நான் அவளை விட்டு விலக விரும்புகிறேன்' என்று கூறுகிறார்கள். 'திருமண உறவில் அடியெடுத்துவைத்த பின்பு, மனைவி அந்த பந்தத்தை மதித்து நடந்துகொண்டால் போதும். திருமணத்திற்கு முந்தைய நிலை பற்றி அறிய தனக்கு ஆர்வம் இல்லை' என்று மனப்பூர்வமாக சொல்லும் ஆண்களின் எண்ணிக்கை குறைவுதான். அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட ஆண்கள் உருவாகும் வரை பெண்கள் முந்தைய ரகசியங்களை காப்பதுதான் நல்லது.

    பெரும்பாலும் கணவனின் கடந்தகாலத்தைப் பற்றி மனைவி பெரிதாக சிந்திப்பதில்லை. ஆனால் மனைவியின் கடந்தகாலமோ கணவனுக்கு அவ்வப்போது வம்புக்கு இழுக்கும் விஷயமாக மாறிவிடுகிறது. பெண்களில் பலர் 'எனது கடந்த காலத்தை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்ட பின்பு கணவர், அந்த கசப்பான விஷயங்களை சொல்லிக்காட்டி என்னை துன்புறுத்துகிறார்' என்று கண்ணீரோடு சொல்கிறார்கள்.

    அதில் பெண்களின் தவறும் சரிபாதி இருக்கத்தான் செய்கிறது. வாழ்க்கை என்பது நல்ல விஷயங்கள் மட்டும் நடக்கும் களம் அல்ல. நன்மை-தீமை இரண்டும் விளையக்கூடிய பூமி. இதில் சில களைகள் நாம் விதைக்காமலே முளைக்கக்கூடும். அவைகளை பிடுங்கி எறிய கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சியை வளர்க்க முடியும். கடந்த காலம் என்பது இனிமையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது முடிந்துபோன ஒன்றுதான். ஆனால் நிகழ்காலம் என்பது மிக முக்கியமானது. அதை மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

    பழைய விஷயங்களை பேசுவதில் மறுமணம் செய்து கொண்டவர்கள் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மறுமண வாழ்க்கையில் பரந்த மனம் இருக்க வேண்டும். கடந்தகால நெருடல்கள் இருக்கக்கூடாது. அதுபற்றி தம்பதிகள் அவசியமின்றி பகிர்ந்து கொள்ளக்கூடாது. இனி இதுதான் வாழ்க்கை என்று தீர்மானித்த பிறகு பழையதை தோண்டக்கூடாது. புது வாழ்வை மதித்து நடந்து கொள்ள வேண்டும். திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். இதில் பல ரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

    திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், கசப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்கவைகளை மனதிற்குள் புதைத்துக்கொள்வது நல்லது. வீண் பிரச்சினைகளை உருவாக்கும் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்போது கடந்தகால நினைவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். அதுதான் சரியான முடிவு. கடந்து போனதைக்கூறி கையில் இருப்பதை சிதறவிடுவது அறிவார்ந்த செயல் அல்ல.

    • அவ்வப்போது காதலை வெளிப்படுத்துங்கள். அரவணையுங்கள்.
    • துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள்.

    வேலைக்கு செல்லுதல், குடும்பத்தை நிர்வகித்தல் என ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு மாறக்கூடும். அப்படி ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு பழகிவிடும்போது ஒருவித சலிப்பு எட்டிப்பார்க்கும். காதலிக்கும்போது தன்னிடம் காண்பித்த அன்பை இப்போது வெளிப்படுத்துவதில்லை என்ற எண்ணம் துணையிடம் குடிகொண்டுவிடும். சின்னச் சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் போதும். அதுபோன்ற எண்ணங்கள் தோன்றாது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    வாரத்திற்கு ஒருமுறை, இல்லாவிட்டால் மாதம் ஒருமுறையாவது வெளி இடங்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அவை ஷாப்பிங், சுற்றுலா, கடற்கரை, பூங்கா, காபி ஷாப் என எந்த இடமாகவும் இருக்கலாம். அங்கு குடும்ப விஷயங்களை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுங்கள். காதலித்த நாட்களை பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த நாட்களை மீண்டும் அன்றாட வாழ்வில் நினைவுபடுத்தும் விதமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அவ்வப்போது காதலை வெளிப்படுத்துங்கள். அரவணையுங்கள். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் எந்த அளவுக்கு காதல், அன்பு, அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.

    மாதம் ஒருமுறையேனும் துணைக்கு ஆச்சரியம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். பரிசு வழங்குவது, திடீரென சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது, துணைக்கு பிடித்தமான விஷயங்களை செய்வது, பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுப்பது என `சர்ப்ரைஸ்' கொடுக்கும் விதத்தில் செயல்படுங்கள். அவை இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். விடுமுறை நாட்களில் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவுங்கள். இந்த செயல் அவரின் வேலையை எளிமைப்படுத்தும். அவருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பையும் வழங்கும்.

    குழந்தைகள், குடும்பத்தினருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். குழுவாக நடனம் ஆடலாம். அவை உடல் மற்றும் மன ரீதியாக உற்சாகத்தை வழங்கும். உணர்வு ரீதியாக ஒன்றிணைந்து செயல்படவும் வழிவகுக்கும். காதலித்த சமயத்தில் நடை, உடை, அழகை பராமரிப்பதற்கு எவ்வளவு ஆர்வம் காட்டினீர்களோ அதனையே இப்போதும் பின் தொடருங்கள். மற்றவர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுக்கொடுக்கவும் அவை உதவும். துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் அவரது செயல்பாடுகளை மனம் திறந்து பாராட்டுங்கள். இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்குவியுங்கள். அவை கடந்த கால காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க பக்கபலமாக அமைந்திருக்கும்.

    • கந்துவட்டி புகாரில் கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை டி.எஸ்.பி நகரைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது 36). இவர் அந்த பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜெயமுருகன் எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை கே.கே.நகர், கார்ப்பரேஷன் காலனி சீனிவாசன் (50), அண்ணாநகர் சுகுமார் (40), சீனிவாசன் மனைவி நிர்மலா (45), அவரது மகன் கிரீஸ் என்ற கிரீஸ்வர் ஆகியோரிடம் நிலத்தை அடமானம் வைத்து 11 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அதனை நான் திருப்பி செலுத்தி விட்டேன். இருந்தபோதிலும் அவர்கள் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், சுகுமார், நிர்மலா, கிரீஸ் என்ற கிரீஸ்வர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், மதுரையைச் சேர்ந்த இன்பா குபேந்திரன், சூர்யா மற்றும் அருண் ஆகிய 3 பேரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்.

    இதற்கான பணத்தை வட்டியுடன் சேர்த்து 7.88 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தினேன். இருந்தபோதிலும் அவர்கள் மேலும் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

    இதற்காக என் காரையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை நாட்களில் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவுங்கள்.
    • துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள்.

    காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள் தங்கள் காதலை உயிர்ப்புடன் பின் தொடர்வதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும். குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு என எதிர்கொள்ளும் வாழ்க்கை மாற்றங்கள் காதல் தீயை கட்டுப்படுத்தக்கூடும். வேலைக்கு செல்லுதல், குடும்பத்தை நிர்வகித்தல் என ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு மாறக்கூடும். அப்படி ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு பழகிவிடும்போது ஒருவித சலிப்பு எட்டிப்பார்க்கும். காதலிக்கும்போது தன்னிடம் காண்பித்த அன்பை இப்போது வெளிப்படுத்துவதில்லை என்ற எண்ணம் துணையிடம் குடிகொண்டுவிடும். சின்னச் சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் போதும். அதுபோன்ற எண்ணங்கள் தோன்றாது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    வாரத்திற்கு ஒருமுறை, இல்லாவிட்டால் மாதம் ஒருமுறையாவது வெளி இடங்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அவை ஷாப்பிங், சுற்றுலா, கடற்கரை, பூங்கா, காபி ஷாப் என எந்த இடமாகவும் இருக்கலாம். அங்கு குடும்ப விஷயங்களை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுங்கள். காதலித்த நாட்களை பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த நாட்களை மீண்டும் அன்றாட வாழ்வில் நினைவுபடுத்தும் விதமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அவ்வப்போது காதலை வெளிப்படுத்துங்கள். அரவணையுங்கள். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் எந்த அளவுக்கு காதல், அன்பு, அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.

    மாதம் ஒருமுறையேனும் துணைக்கு ஆச்சரியம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். பரிசு வழங்குவது, திடீரென சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது, துணைக்கு பிடித்தமான விஷயங்களை செய்வது, பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுப்பது என `சர்ப்ரைஸ்' கொடுக்கும் விதத்தில் செயல்படுங்கள். அவை இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.

    விடுமுறை நாட்களில் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவுங்கள். இந்த செயல் அவரின் வேலையை எளிமைப்படுத்தும். அவருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பையும் வழங்கும். குழந்தைகள், குடும்பத்தினருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். குழுவாக நடனம் ஆடலாம். அவை உடல் மற்றும் மன ரீதியாக உற்சாகத்தை வழங்கும். உணர்வு ரீதியாக ஒன்றிணைந்து செயல்படவும் வழிவகுக்கும்.

    காதலித்த சமயத்தில் நடை, உடை, அழகை பராமரிப்பதற்கு எவ்வளவு ஆர்வம் காட்டினீர்களோ அதனையே இப்போதும் பின் தொடருங்கள். மற்றவர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுக்கொடுக்கவும் அவை உதவும். துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் அவரது செயல்பாடுகளை மனம் திறந்து பாராட்டுங்கள். இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்குவியுங்கள். அவை கடந்த கால காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க பக்கபலமாக அமைந்திருக்கும்.

    ×