என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கணவன்-மனைவியிடம் விசாரணை
  X

  கணவன்-மனைவியிடம் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கந்துவட்டி புகாரில் கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
  • சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மதுரை

  மதுரை டி.எஸ்.பி நகரைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது 36). இவர் அந்த பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜெயமுருகன் எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

  மதுரை கே.கே.நகர், கார்ப்பரேஷன் காலனி சீனிவாசன் (50), அண்ணாநகர் சுகுமார் (40), சீனிவாசன் மனைவி நிர்மலா (45), அவரது மகன் கிரீஸ் என்ற கிரீஸ்வர் ஆகியோரிடம் நிலத்தை அடமானம் வைத்து 11 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அதனை நான் திருப்பி செலுத்தி விட்டேன். இருந்தபோதிலும் அவர்கள் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், சுகுமார், நிர்மலா, கிரீஸ் என்ற கிரீஸ்வர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், மதுரையைச் சேர்ந்த இன்பா குபேந்திரன், சூர்யா மற்றும் அருண் ஆகிய 3 பேரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்.

  இதற்கான பணத்தை வட்டியுடன் சேர்த்து 7.88 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தினேன். இருந்தபோதிலும் அவர்கள் மேலும் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

  இதற்காக என் காரையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×