search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    எதையும் வாழ்க்கைத் துணையிடம் ஆலோசியுங்கள்...
    X

    எதையும் வாழ்க்கைத் துணையிடம் ஆலோசியுங்கள்...

    • ஒவ்வொரு நிலையிலும் தம்பதிகள் ஒற்றுமையோடு பயணித்தால் வாழ்க்கை இனிக்கும்.
    • எதையும் செய்வதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் கட்டாயம் விவாதிக்க வேண்டும்.

    திருமண பந்தத்தில், கணவன்-மனைவி இருவரில் யார் எந்த முடிவை எடுத்தாலும், அதன் விளைவுகள் இருவரையுமே பாதிக்கும். எதையும் செய்வதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் கட்டாயம் விவாதிக்க வேண்டும். அதற்கான ஆலோசனைக் குறிப்புகள் இதோ:

    நிதி சார்ந்தது:

    குடும்பத்தில், பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவது நிதி சார்ந்த விஷயங்களே. ஒருவர் மட்டுமே சம்பாதித்தாலும் அல்லது இருவரும் வருமானம் ஈட்டினாலும், குடும்பத்திற்கான நிதி சார்ந்தவற்றில் ஒருவரது முடிவு மட்டும் போதாது. கணவன், மனைவி இருவர் சார்ந்த முடிவு கட்டாயம் இருக்க வேண்டும்.

    குழந்தை சார்ந்தது:

    குழந்தைப் பெற்றுக்கொள்வதில் கணவன்-மனைவி இருவருக்கும் பங்குண்டு என்றாலும், அவரவருக்கு தனித்தனி விருப்பங்களும் இருக்கும். இதில், ஒருவர் சிறிது காலம் திருமண வாழ்க்கையை அனுபவித்து விட்டு, பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கலாம். மற்றொருவர் உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பலாம். இது குறித்து, இருவரும் விவாதித்து அதற்கேற்ப முடிவு செய்து கொள்ள வேண்டும்.

    அந்தரங்கம் சார்ந்தது:

    தம்பதிக்குள் மகிழ்ச்சியைக் கொடுப்பதும், பிரச்சினையை ஏற்படுத்துவதும் அந்தரங்கம் சார்ந்ததாகவே இருக்கும். இதில் ஒருவர் மற்றொருவரின் விருப்பத்தையும், உணர்வுகளையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் கட்டாயத்திற்கோ, ஒருவரின் தனிப்பட்ட முடிவுக்கோ இடம் கொடுக்கக்கூடாது. அந்தரங்கத்தைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாவிட்டால், அந்த உறவில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதைப் பற்றி இருவரும் தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம்.

    குடும்பம் சார்ந்தது:

    சிலருக்கு கூட்டுக் குடும்பமாக வாழ்வது பிடித்திருக்கலாம். சிலர் தனிக்குடும்ப வாழ்க்கையை விரும்பலாம். இதில் எதுவாக இருந்தாலும், திருமணத்துக்கு முன்பே தெளிவாக விவாதித்து முடிவு செய்ய வேண்டும். இருவரும் தனிப்பட்ட கருத்துகளை வைத்துக் கொண்டு முடிவு எடுப்பதால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். முன்னரே தெளிவாக முடிவெடுத்து செயல்படுவது, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

    எதிர்கால இலக்கு சார்ந்தது:

    தம்பதிக்குள் பிரிவு வர முக்கியக் காரணமாக இருப்பது, நீண்ட கால இலக்கு குறித்து முன்னரே சரிவர விவாதிக்காமல் இருப்பதுதான். கணவன்-மனைவி இருவருக்கும், சிறு வயது முதலே எதிர்கால இலக்கு இருக்கும். திருமணத்திற்கு முன் அந்த இலக்கை நோக்கி எளிதில் நடைபோட முடியும். திருமணத்திற்குப் பின்பு அதை நிறைவேற்றுவதற்கு ஒருவரின் துணை மற்றவருக்கு வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும், ஒருவர் மட்டுமே முடிவு எடுத்துச் செயல்படாமல், இலக்கை நோக்கிப் பயணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.

    இதுபோன்று, ஒவ்வொரு நிலையிலும் தம்பதிகள் ஒற்றுமையோடு பயணித்தால் வாழ்க்கை இனிக்கும்.

    Next Story
    ×