search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband arrest"

    • விசாரணையில் கணவன்-மனைவி இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது.
    • ஆத்திரமடைந்த சந்திரன் தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கி உள்ளார்.

    தென்காசி:

    தென்காசி நடுமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சித்ரா (வயது 50). இவர் பீடி சுற்றும் தொழிலாளி.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த சித்ராவின் தம்பி குற்றாலநாதன், சந்திரனின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது அக்கா குறித்து கேட்டதாகவும், அதற்கு சித்ராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும், தானும் அங்கேயே அவருடன் இருப்பதாக கூறி சந்திரன் போன் இணைப்பைத் துண்டித்துள்ளார். தொடர்ந்து மீண்டும் சந்திரனை தொடர்பு கொண்ட போது போன் இணைப்பு சுவிட்ச்-ஆப் என வந்துள்ளது.

    இதனால் சந்தேகம் அடைந்த குற்றாலநாதன், அக்காவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் உடனடியாக தென்காசி போலீசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.

    தென்காசி டி.எஸ்.பி. நாகசங்கர் மற்றும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி ஆகியோர் அடங்கிய போலீசார் நேரடியாக வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு கட்டிலில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். அவரது முகமும் சிதைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர் விசாரணையில் கணவன்-மனைவி இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் கை-கால்களையும் கை, கால்களை கட்டி முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் திருச்செந்தூர் பகுதியில் சந்திரன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் 15 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் திருச்செந்தூர் விரைந்தனர். அங்கு அன்னசத்திரம் அருகே நின்ற சந்திரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    சந்திரனை தென்காசிக்கு அழைத்து வந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜாத்திக்கும், சில நபர்களுக்கும் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
    • இதனால் அர்ஜூனன், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாத்தி, ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள பொட்டபட்டிக்கு செல்லும் வழியில் கடந்த 29-ந் தேதி இளம்பெண் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் யார்? என விசாரித்தனர். மேலும் அந்தப்பகுதியில் இதுதொடர்பாக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் மேலூர் அருகே உள்ள கருத்தலக்கான்பட்டி புதூரைச் சேர்ந்த ராஜாத்தி (வயது 19) என தெரியவந்தது.

    தொடர் விசாரணையில், இவரது கணவர் அர்ச்சுணன் (25) என்பவர் மனைவியை தாக்கி எரித்துக்கொலை செய்துள்ளார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் ராசு-அரியம்மாள், உறவினர்கள் வல்லான் என்ற ரவி, சிவலிங்கம் ஆகியோர் இருந்துள்ளனர். இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் கைதான 5 பேரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி கொலையான ராஜாத்திக்கும், அர்ஜூனனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அர்ஜூனனுக்கு, ராஜாத்தி 3-வது மனைவி ஆவார்.

    இந்த நிலையில் ராஜாத்திக்கும், சில நபர்களுக்கும் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அர்ஜூனன், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாத்தி, ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த அர்ஜூனன், தன்னை கொலை செய்வதற்கு முன்பு மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று அர்ஜூனன், பொட்டபட்டியில் மனைவியை தாக்கி எரித்துக்கொலை செய்துள்ளார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோரும், உறவினர்களும் இருந்துள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • மனைவியை தேடிச்சென்று பார்த்தபோது மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் யாருக்காக இங்கே நிற்கிறாய் என கணவர் அவருடன் தகராறு செய்தார்.
    • மேலும் அவரை தாக்கி கீழே தள்ளி அங்கிருந்த கல்லை அவரது தலையில் தூக்கிபோட்டார். படுகாயமடைந்த காயத்ரியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாலைபுதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). இவரது மனைவி காயத்ரி(26). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. காயத்ரியின் நடத்தையில் கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்த காயத்ரி திடீரென மாயமானார். அவரை தேடிச்சென்று பார்த்தபோது மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் யாருக்காக இங்கே நிற்கிறாய் என கணவர் அவருடன் தகராறு செய்தார்.

    மேலும் அவரை தாக்கி கீழே தள்ளி அங்கிருந்த கல்லை அவரது தலையில் தூக்கிபோட்டார். படுகாயமடைந்த காயத்ரியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    • கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • அப்போது அவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி பி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது44). இவருடைய மனைவி முருகாம்பாள்(40). இவர்களுக்கு விக்னேஷ் (13) என்ற மகன் உள்ளான்.

    கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி முருகாம்பாள் ஆகிய இருவரும் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். கிருஷ்ணன் காவலாளியாகவும், முருகாம்பாள் தொழிலாளியாகவும் பணிபுரிந்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது அவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.

    இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவும் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மனைவி முருகாம்பாள் தலையில் கிருஷ்ணன் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த முருகாம்பாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதையடுத்து கிருஷ்ணன் தனது மனைவியை கொன்று விட்டதாக கூறி கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு முருகாம்பாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    முருகாம்பாளை கிருஷ்ணன் அடித்து கொன்றது சிறுவனான அவர்களது மகன் விக்னேசுக்கு தெரியவில்லை. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது சிறுவன் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவர் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதியம்புத்தூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் மாரி கணேஷ் (வயது 23). இவரது மனைவி முத்துக்கொடி (21). மாரி கணேஷ் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துக்கொடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    சம்பவத்தன்று மாரி கணேஷ் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மனைவியை தாக்கியதோடு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துக்கொடி புதியம்பு த்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாரி கணேசை கைது செய்தனர்.
    மகள் காதல் விவகாரத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவல் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் சமுத்திர பாண்டி (வயது 35). இவருடைய மனைவி வெள்ளதுரைச்சி (39). இவர் தனது கணவரை விட மூத்தவர் ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சிவரஞ்சனி (17).

    கர்நாடக மாநிலத்தில் டவர் அமைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த சமுத்திர பாண்டி கடந்த மாதம் ஊருக்கு வந்தார். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று பகலில் சமுத்திர பாண்டி, வெள்ளதுரைச்சி, சிவரஞ்சனி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி வீட்டில் உள்ள அரிவாளால் வெள்ள துரைச்சியை சரமாரியாக வெட்டினார். அதை தடுத்த மகள் சிவரஞ்சனியையும் அவர் சரமாரியாக வெட்டினார். பின்னர் சமுத்திர பாண்டி அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த வெள்ளதுரைச்சி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். சிவரஞ்சனி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு ஓடிவந்தனர். அங்கு 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சிவரஞ்சனியை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிணமாக கிடந்த வெள்ளதுரைச்சியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த பயங்கர கொலை குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

    சமுத்திர பாண்டி மகள் சிவரஞ்சனி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தாயார் வெள்ளதுரைச்சியிடம் தெரிவித்துள்ளார். அவர் தனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இது வெளியூரில் இருந்த சமுத்திர பாண்டிக்கு முதலில் தெரியவில்லை. இதையடுத்து கடந்த மாதம் விடுமுறைக்காக ஊருக்கு வந்த சமுத்திர பாண்டிக்கு தனது மகளின் காதல் விவகாரம் தெரிய வந்தது.

    மேலும் இந்த காதலுக்கு தனது மனைவி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தனது மகளின் காதலுக்கு சமுத்திர பாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பகலில் இந்த பிரச்சினை தொடர்பாக சமுத்திரபாண்டியிடம் வெள்ளதுரைச்சி, சிவரஞ்சனி ஆகியோர் பேசினார்கள். அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி 2 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    இந்த நிலையில் தப்பி ஓடிய சமுத்திரபாண்டி நேற்று இரவு புளியங்குடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் மகள் சிவரஞ்சனியின் காதல் விவகாரத்துக்கு மனைவி வெள்ளதுரைச்சி ஆதரவாக இருந்ததால் ஆத்திரத்தில் வெட்டிக்கொலை செய்ததாகவும், தடுத்த மகள் சிவரஞ்சனியையும் அரிவாளால் வெட்டியதாகவும் கூறினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    ராஜபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
     ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகில் உள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது23). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், சேத்தூர் காமராஜர்நகரைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது 10 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

    தற்போது கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்கின்றனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து ஸ்டாலின் ராஜாவை கைது செய்தார். அவரது தாயார் விஜயாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை, கணவரே அடித்துக் கொன்று விட்டு நாடகமாடியது சப்-கலெக்டர் விசாரணையில் அம்பலமானது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பார்த்தீபன்(வயது 27). தொழிலாளி. இவருக்கும், விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த சிவப்பிரியா(26) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சிவப்பிரியா கடந்த மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தீபனை கைது செய்தனர். பின்னர் அவரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.

    திருமணமான 7 மாதத்தில் சிவப்பிரியா இறந்ததால், இது சம்பந்தமாக சப்-கலெக்டர் பிரசாந்த் விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அவர் விசாரணை நடத்தினார். விசாரணையில், பார்த்தீபன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, சிவப்பிரியாவை அடித்து கொலை செய்துவிட்டு அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. மேலும், சிவப்பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, இந்த கொலைக்கு பார்த்தீபனின் தாய் கவுரி (50), சகோதரிகள் பானுமதி, நளினி ஆகியோரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பான அறிக்கையை சப்-கலெக்டர் பிரசாந்த் நேற்று வெளியிட்டார். அதன்அடிப்படையில் சிவப்பிரியா இறந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர். பின்னர் கவுரியை போலீசார் கைது செய்தனர். மேலும் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பார்த்தீபனை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ஜீவா (வயது 28). வேன் டிரைவர். இவருக்கும் சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (23) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வி, கணவர் வீட்டில் இருந்து வெளியில் ஓடி வந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டனர். ஆனாலும் அவரது உடல் 90 சதவீதம் கருகியது.

    பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மகளின் இந்த நிலைக்கு காரணமான ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கலைச்செல்வியின் தாய் இந்திராணி மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும் கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் போட்ட மனுவில், திருமணம் முடிந்ததில் இருந்தே எனது மகளை அவரது கணவர் ஜீவா கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் மேலும் 5 பவுன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை கொடுத்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார் என்றும் கூறி இருந்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்திய கன்னங்குறிச்சி போலீசார் ஜீவா மீது கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    காதல் மனைவியை கணவரே கழுத்தை துண்டித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை மேட்டுக்கடை அருகே வசித்து வருபவர் முனியப்பன்(வயது 28). இவரது மனைவி பெயர் நிவேதா (19) இருவரும் கர்நாடக மாநிலம் சிமாகோ மாவட்டம் ஏலே பகுதியை சேர்ந்தவர்கள்.

    இருவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    ஒரே பகுதியை சேர்ந்த இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வேலைக்கு போய் வந்தனர்.

    முனியப்பன் தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிவேதா மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு டிப்பார்ட்டுமெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்.

    மனைவியின் நடத்தை மீது கணவன் முனியப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் தலைக்கேரிய முனியப்பன் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் மனைவி என்றும் பாராமல் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்து துண்டித்தார்.

    தலை துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் நிவேதா பரிதாபமாக இறந்தார்.

    பிறகு தலையையும் உடலையும் தனித்தனி துணியால் மூடிக்கொண்டு வாய்க்காலில் வீச மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று கொண்டிருந்தார்.

    எருக்ககாட்டு வலசு பகுதியில் வந்த போது அந்த வழியாக சென்ற மக்களுக்கு முனியப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    மேலும் பின்னால் மனைவி உடலின் கால் பகுதி தரையில் உரசிய படி வந்ததால் சந்தேகம் மேலும் வலுத்தது,

    இதனால் 4 பேர் மோட்டார் சைக்கிளில் அவரை விரட்டி சென்றனர். பொதுமக்கள் தன்னை விரட்டி வருவதை கண்ட முனியப்பன் பைக்கை முறுக்கி வேகமாக ஓட்டினார்.

    பெரியமிளாமலை வாய்க்கால் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி முனியப்பன் கீழே விழுந்தார். உடனே வாய்க்காலில் குதித்து மறுகரையில் ஏற தப்பி ஓடினார்.

    அவரை விரட்டிய இளைஞர்களும் விடவில்லை. அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    பிறகு முனியப்பனை வி.ஏ.ஓ. ஆல்பர்ட் ஓப்படைத்தனர். அவர் பெருந்துறை போலீசில் முனியப்பனை ஒப்படைத்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வேப்பகுளம் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி (30).இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    நேற்று மாலை ராஜபாண்டிக்கும், கோடீஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த ராஜபாண்டி கோடீஸ்வரியை அடித்து கீழே தள்ளி உள்ளார் அப்போது தலையில் பலத்த காயமடைந்த கோடீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இந்த கொலை சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கோடீஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக ராஜபாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மது குடிக்க பணம் தராததால் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், நொய்யல் அருகே வெல்லக்கல் மேட்டைச் சேர்ந்தவர் முனுசாமி (43). இவரது மனைவி பரமேஸ்வரி (30). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    முனுசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பரமேஸ்வரியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவதன்று முனுசாமி பரமேஸ்வரியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முனுசாமி அருகில் கிடந்த கத்தியை எடுத்து பரமேஸ்வரியின்கழுத்தை அறுத்தார். வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் பரமேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வேலாயுதம்பாளைம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்கு பதிவுசெய்து முனுசாமியை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்து வருகிறது.

    ×