என் மலர்

  நீங்கள் தேடியது "Madurai murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
  • அப்போது அவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.

  திருமங்கலம்:

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி பி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது44). இவருடைய மனைவி முருகாம்பாள்(40). இவர்களுக்கு விக்னேஷ் (13) என்ற மகன் உள்ளான்.

  கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி முருகாம்பாள் ஆகிய இருவரும் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். கிருஷ்ணன் காவலாளியாகவும், முருகாம்பாள் தொழிலாளியாகவும் பணிபுரிந்தனர்.

  இந்த நிலையில் கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது அவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.

  இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவும் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மனைவி முருகாம்பாள் தலையில் கிருஷ்ணன் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

  இதில் படுகாயம் அடைந்த முருகாம்பாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதையடுத்து கிருஷ்ணன் தனது மனைவியை கொன்று விட்டதாக கூறி கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

  பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு முருகாம்பாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

  முருகாம்பாளை கிருஷ்ணன் அடித்து கொன்றது சிறுவனான அவர்களது மகன் விக்னேசுக்கு தெரியவில்லை. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது சிறுவன் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

  இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவர் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேலூர் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
  மேலூர்:

  மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

  கடந்த சில மாதங்களாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர் களுக்குள் பிரச்சினை ஏற்பட, விரக்தியடைந்த கவிதா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

  இந்த நிலையில் நேற்று ராஜா மது குடித்துவிட்டு வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை நீண்ட நேரமாகியும் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டுக் குள் சென்று பார்த்த போது ராஜா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

  மேலவளவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் கைரே கைகள் சேகரிக்கப்பட்டன.

  ராஜாவை கொலை செய்தது யார்? முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பேரையூர்:

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன் பிரேம்குமார் (வயது28), லேத் பட்டறை நடத்தி வந்தார்.

  கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரேம்குமாருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

  பிரேம்குமாரின் வீட்டில் அவரது தாய்மாமன் மகன் பிரகாஷ் (34) தனது மனைவி சூர்யாவுடன் வசித்து வந்தார். ஒரே வீட்டில் இருந்ததால் பிரேம்குமாரும், சூர்யாவும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

  இது தெரியவந்ததும் இருவரையும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். பிரகாஷ் 3 மாதத்துக்கு முன்பு மனைவியுடன் அங்கிருந்து வெளியேறி கருப்பாயூரணி சென்று விட்டார். ஆனால் அதன் பிறகும் சூர்யாவுடன் பிரேம்குமார் தொடர்பு வைத்துள்ளார்.

  இதனால் பிரகாஷ் ஆத்திரம் அடைந்தார். பிரேம்குமாரின் சகோதரரை சந்தித்து எச்சரித்துள்ளார். இந்த நிலையில் பிரகாஷ் சகோதரர் பாலனுடன் இன்று காலை கூத்தியார்குண்டு வந்தார்.

  பிரேம்குமார் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து அவர்கள் உள்ளே சென்றனர். வீட்டின் மாடிக்கு சென்ற 2 பேரும், அங்கு படுத்திருந்த பிரேம் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் படுக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

  மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அமுதாவை ஒரு அறையில் தள்ளி அடைத்து விட்டு பிரகாசும், அவரது சகோதரரும் தப்பிச் சென்று விட்டனர்.

  தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பிரேம் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  தப்பி ஓடிய பிரகாஷ் மற்றும் அவரது சகோதரரை தேடி வருகின்றனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை அருகே மு.க.அழகிரி ஆதரவாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  அலங்காநல்லூர்:

  மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 45). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

  இன்று அதிகாலை எழுந்த மதுரைவீரன் வீட்டின் அருகே உள்ள டீக்கடைக்கு வந்தார். அங்கு டீ குடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப தயாரானார்.

  அப்போது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிமணி (32), சின்னச்சாமி உள்பட 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் மதுரைவீரனை சுற்றிவளைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

  ரத்த வெள்ளத்தில் மிதந்த மதுரைவீரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாலமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

  பின்னர் மதுரைவீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மதுரைவீரன் கொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மு.க.அழகிரியின் ஆதரவாளருமான மதுரைவீரன் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
  ×