search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "houses"

    சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசித்த இளம்பெண்களின் வீடுகள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #SabarimalaProtest #SabarimalaWomen
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்கு இன்று போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனை தரிசித்த இளம்பெண்கள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பிந்து (வயது 44), கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டியை சேர்ந்தவர். ஏற்கனவே இவர் சபரிமலை சென்றபோது இவரது வீடு மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல் நடத்தினர். இதுபோல மலப்புரம் அங்காடிபுரத்தை சேர்ந்த கனகதுர்கா (42) வீடு மீதும் தாக்குதல் நடந்தது.

    இன்று அதிகாலையில் இவர்கள் இருவரும் மீண்டும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த தகவல் வெளியானதும் மர்ம நபர்கள் சிலர் பிந்து, கனகதுர்கா வீடுகள் முன்பு திரண்டனர். அவர்களுக்கு எதிராக கோ‌ஷமிட்டபடி போராட்டத்திலும் ஈடுபட்டனர். சிலர் வீடுகள் மீது கல்வீசவும் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #SabarimalaProtest #SabarimalaWomen
     
    தேனாம்பேட்டை, ஐஸ்அவுஸ் பகுதிகளில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery
    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கவிதா துகார் (வயது 60).

    இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    சென்னை தேனாம்பேட்டையில் மதி பவுண்டே‌ஷன் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்த 60 லேப்டாக்குகள் (கையடக்க கணினி) திடீரென்று மாயமாகி இருந்தது.

    அதை கொள்ளையர்கள் திருடிச் சென்றார்களா? அல்லது ஊழியர்களே கைவரிசை காட்டினார்களா என்று தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    சென்னை ஐஸ்அவுஸ் வெங்கடேசபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் முனியப்பன். ஐஸ்அவுஸ் யானைக்குளம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடைக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.24 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2½ பவுன் நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

    இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. #Robbery

    திருவேற்காட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம், ஆகியவற்றை இடித்து அகற்றினர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு பஸ் நிலையம் அருகில் இருந்து வேத புரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் 40 அடி சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடு, கடைகள் கட்டப்பட்டு இருந்தன.

    இதனால் சாலை மிகவும் குறுகலாகி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் திருவேற்காடு நகராட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நகராட்சி கமி‌ஷனர் சித்ரா தலைமையில் ஊழியர்கள் 2 ஜே.பி.சி. எந்திரத்துடன் அங்கு வந்தனர். அவர்கள் சிவன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகம், ஆகியவற்றை இடித்து அகற்றினர்.

    இதேபோல் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடு வெட்டியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான 9 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி ஆகும்.

    இதில் நகராட்சி கமி‌ஷனர் சித்ரா,பொறியாளர் முத்துக் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் கவிதா, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், மேற்பார்வையாளர் குமார் உள்பட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டதையொட்டி 2 இடங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    பண்ருட்டியில் இன்று ஏரியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 200 வீடுகளை இடித்து அதிகாரிகள் அகற்றம் செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் உள்ள கடலூர் சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில் செட்டிபட்டறை ஏரி அமைந்துள்ளது.

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியின் மேடான பகுதியில் 200 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் வரும் 24-ந் தேதிக்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் இடங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து செட்டிபட்டறை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு சென்ற அதிகாரிகள், ஏரியில் உள்ள ஆக்கிரப்பு வீடுகள் இடிக்கப்படும்.எனவே வேறு இடங்களுக்கு செல்லுங்கள் என்று அங்கு வசிக்கும் மக்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவர்கள் காலி செய்யவில்லை.

    இதையடுத்து இன்று காலை பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் சிவராமன் மற்றும் அதிகாரிகள் செட்டிபட்டறைக்கு வந்தனர். பாதுகாப்புக்காக போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வருமாறு ஓலிபெருக்கி மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை கேட்டு பொதுமக்கள் அனைவரும் வெளியே வந்தனர். அவர்களிடம் கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று இடித்து அகற்றப்படும் என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசபேச்சுவார்த்தை நடத்தினர். உங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதையடுத்து 3 பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதை பார்த்து பெண்கள் கதறி அழுதனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    சிறிய அளவு 'பட்ஜெட்' கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே பெண்கள் விரும்புவார்கள்.
    சிறிய அளவு 'பட்ஜெட்' கொண்ட வீடாக இருந்தாலும் கண் கவரும் அலங்கார பொருட்கள் மற்றும் அமைப்புகள் மூலம் ஒவ்வொரு அறையையும் அழகாக காண்பிக்கவே அனைவரும்(பெண்கள்) விரும்புவார்கள். பொதுவாக, எல்லா அறைகளுக்கும் உள் அலங்காரம் தேவை என்ற நிலையில், ஒரு சில அறைகளை நமக்கு பிடித்தமான வகையில் அழகுபடுத்த முடியும்.

    ஒரே தோற்றம் :

    சமையல் அறை, 'வார்ட்ரோப்ஸ்' என்ற அலமாரிகள், பூஜை அறை, டி.வியை வைப்பதற்கான 'கேபினட்டுகள்', குட்டி பசங்களின் ஸ்கூல் புராஜக்ட் மற்றும் பரிசு கோப்பைகள் வைக்கும் கண்ணாடி பொருத்திய அலமாரிகள், பல்வேறு 'லேமினேஷன்கள்' ஆகியவற்றை ஒரே மாதிரியாக அமைத்தால், வித்தியாசமான அழகாக இருக்கும். சமையல் அறையில் 'வாட்டர் புரூப்' கொண்ட பொருட்களையும் பயன்படுத்தலாம்.

    அலமாரிகள் அவசியம் :

    சுவர் அலமாரிகள் 'ஸ்லைடிங்' கதவுகள் கொண்டதாக இருப்பது வழக்கம். வீட்டில் குறைவான உபயோகம் கொண்ட பொருட்களை சுவர் அலமாரிகள் அல்லது மர கதவு பொருத்தப்பட்ட 'லாப்ட்' அமைப்புகளில் வைத்து பராமரிப்பது வழக்கம். பொதுவாக கான்கிரீட் பரண்கள் அதிகமாக அமைப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. 'வார்ட்ரோப்' அமைக்கும்போது மேற்கூரையை தொடும் வகையில் உயரமாக அமைத்துவிட்டால், சூட்கேஸ்கள் உள்ளிட்ட 'டிராவல் பேக்' போன்றவற்றை அவற்றில் வைப்பது சுலபமாக இருக்கும்.



    சுவர் அலமாரிகள் :

    'வால்க் இன் க்ளோசட்' என்ற அலமாரிகளை உள்ளே அமைத்து ஒற்றை கதவு பொருத்தப்படும் முறையானது இப்போது மெதுவாக பல இடங்களில் பரவி வருகிறது. இந்த முறையில் அதிக செலவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒற்றைக் கதவு என்பதால் பொருட்கள் வைக்க நிறைய இடம் கிடைக்கும். நமது செலவுகளை பொறுத்து இரண்டு அறைகளுக்கு இடைவெளிகளில் இதை அமைத்துக்கொள்ளலாம். வீட்டு கட்டுமான பணிகளின்போதே இந்த முறைக்கான இடத்தை கச்சிதமாக தேர்வு செய்து கொள்வது சிறப்பு.

    'ஸ்கர்டிங்' பலகைகள் :

    நவீன சமையலறை அமைப்பில் கவனிக்க வேண்டிய விஷயம், கேபினட்டுகளை தாங்கக்கூடிய 'புஷ்' அமைப்பை மறைக்கும் 'ஸ்கர்டிங்' என்ற சிறிய பலகைகள் ஆகும். மேலும், அங்கே குப்பைகள் சேராமல் தடுக்கவும் இந்த அமைப்பு பயன்படும். அந்த 'ஸ்கர்டிங்' அமைப்பை மரத்தால் செய்யப்பட்டதாக இல்லாமல் 'பி.வி.சி' தயாரிப்புகளான 'பிளாஸ்டிக்' பொருள்கள் மூலம் அமைத்து, தண்ணீர் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.



    அழகிய படுக்கையறை :

    பொதுவாக, படுக்கையறை கதவு திறந்தவுடன் கண்ணில் படுக்கை படாதவாறு அமைக்கவேண்டும். படுக்கையறைக்கு போதுமான வெளிச்சம் இருக்குமாறு ஜன்னல்களை கச்சிதமாக அமைக்கவேண்டும். அறை நடுவில் கட்டில் போடும்போது 'சைடு டேபிள்' இருப்பின் அவற்றின் மீது புத்தகங்களை வைத்து உபயோகப்படுத்தலாம். சிறிய அறையாக இருந்தாலும் முக்கியமாக கருதப்படுவது படுக்கை அறையாகும்.

    படிக்கும் இடம் :

    அலுவலக பணிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடம் போன்றவற்றை செய்வதற்காக பல வீடுகளில் 'லேப்டாப்' பயன்படுத்தப்படுவது வழக்கம். அதை பயன்படுத்தும்போதும், 'சார்ஜ்' செய்யும்போதும் தனியாக வைத்து பராமரிப்பதற்காக தனியிடம் தேவைப்படும். முக்கியமாக பசங்கள் படிக்கும்போது அமைதியாக இருப்பது அவசியம். அந்த அறைகளில் 'டிரெஸ்ஸிங் டேபிள்' வைக்கப்படும் சூழலில் அலமாரிகளில் கண்ணாடியை பதித்துக்கொள்ளலாம்.
    ×