search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hockey india"

    ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி 5-3 என தென்கொரியாவை வீழ்த்தியது. #AsianGames2018 #HI
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா இன்று தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 5-3 என வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் சிங் முதல் கோலை பதிவு செய்தார். பெனால்டி ஸ்ட்ரோக்கை சிறப்பான வகையில் கோலாக மாற்றினார்.

    5-வது நிமிடத்தில் சிங்லென்சானா சிங் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றது. 16-வது நிமிடத்தில் இந்திய வீரர் லலித் குமார் உபத்யாய் ஒரு கோல் அடிக்க முதல் பாதி நேரத்தில் இந்தியா 3-0 என வலுவான முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்தில் தென்கொரியா ஆதிக்கம் செலுத்தியது. 33-வது நிமிடத்தில் கொரிய வீரர் மஞ்சய் ஜுங் கோல் அடித்தார். 36-வது நிமிடத்தில் மஞ்சய் ஜூங் மேலும் ஒரு கோல் அடித்தார். ஸ்கோர் 3-2 என ஒரு கோல் வித்தியாசம் மட்டுமே பெற்றது.

    அதன்பின் இந்திய வீரர்கள் கொரியாவை கோல் அடிக்க விடவில்லை. இதனால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது. இந்தியா தனது கடைசி லீக்கில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்தியா இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மூன்று கோல் வாங்கியுள்ள இந்தியா 56 கோல்கள் அடித்து 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
    ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் ஹாங் காங்கை 26-0 என வீழ்த்தி இந்திய அணி 86 வருட சாதனையை முறியடித்துள்ளது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் இன்று மோதின. இதில் இந்தியா 26-0 வெற்றி பெற்றது.

    இதற்கு முன் இந்தியா 1932-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவை இந்தியா 24-1 என வீழ்த்தியிருந்தது. அதுதான் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது 86 ஆண்டுகள் கழித்து இந்தியா அதிக கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளது.

    ருபிந்தர் பால் சிங் ஐந்து கோல்களும், ஹர்மன்ப்ரீத் சிங் நான்கு கோல்களும், ஆகாஷ்தீப் சிங் மூன்று கோல்களும் அடித்தனர். இதற்கு முன் இந்தோனேசியாவை 17-0 என வீழ்த்தியிரந்தது குறிப்பிடத்தக்கது.
    ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் கஜகஸ்தானை 21-0 என துவம்சம் செய்தது இந்திய பெண்கள் அணி #AsianGames2018 #HockeyIndia
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - கஜகஸ்தான் அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் கோலாக அடித்து தள்ளினார்கள். இதனால் இந்தியா 21-0 என கஜகஸ்தானை துவம்சம் செய்தது. இந்திய அணியில் குர்ஜித் கவுர் அதிகபட்சமாக நான்கு கோல்கள் அடித்தார்.



    வந்தனா கட்டாரியா, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி தலா மூன்று கோல்களும், லிலிமா மின்ஸ், நவ்ஜோத் கவுர் தலா இரண்டு கோல்களும் அடித்தனர்.
    ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கி குரூப் சுற்று போட்டியில் இந்தோனேசியாவை 17-0 என துவம்சம செய்தது இந்தியா #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற ஹாக்கி குரூப் போட்டி ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - இந்தோனேசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய வீரர்கள் கோலாக அடித்துத் தள்ளினார்கள். இந்தியாவின் அட்டக் ஆட்டத்திற்கு இந்தோனேசியாவால் அணைபோட முடியவில்லை.

    ஆட்டத்தின் 46-வது வினாடியில் ருபிந்தர் பால் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 3-வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங் மேலும் ஒரு கோல் அடித்தார். 7-வது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். 10-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்தார்.

    13-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் ஒரு கோல் அடித்தார். 25-வது நிமிடத்தில் சுனில் ஒரு கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் விவேக் சாகர் ஒரு கோல் அடித்தார். 30-வது நிமிடத்தில் மந்தீப் சிங் ஒரு கோலும், தில்ப்ரீத் சிங் ஒரு கோலும் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 9-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 31-வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். 32-வது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் கோல் அடித்தார். 38-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் கோல் அடித்தார். 45-வது நிமிடத்தில் லலித் குமார் உபத்யாய் கோல் அடித்தார்.



    45-வது நிமிடத்தில் மந்தீப் சிங் கோல் அடித்தார். 49-வது நிமிடத்தில் மந்தீப் சிங் கோல் அடித்தார். 53-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் கோல் அடித்தார். 54-வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸ் கோல் அடித்தார்.

    இதனால் இந்தியா 17-0 என இந்தோனேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் மந்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங், தில்ப்ரீத் சிங் ஆகியோர் தலா மூன்று கோல்கள் அடித்தனர்.
    பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. #HockeyIndia #INDvNZ
    இந்தியா - நியூசிலாந்து ஆடவர் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 2-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 3-1 என வெற்றி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    முதல் காலிறுதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேரத்தில் இந்தியா இரண்டு கோல்களும், நியூசிலாந்து ஒரு கோலும் அடித்தது. இதனால் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது.



    18-வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங்கும், 27-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங்கும் கோல் அடித்தனர். 24-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஜென்னெஸ் கோல் அடித்தார். 56-வது நிமிடத்தில் மந்தீப் சிங் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-1 என வெற்றி பெற்றது.
    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியதால் சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #HockeyIndia #HI
    சர்வதேச ஹாக்கி பெடரேசன் இன்று அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. இதில் இந்தியா அணி 6-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டாம் பிடித்ததால் ஒரு இடம் முன்னேறியுள்ளது.



    1906 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. 1883 புள்ளிகளுடன் அர்ஜென்டினா 2-வது இடத்தையும், 1709 புள்ளிகளுடன் பெல்ஜியம் 3-வது இடத்தையும், 1654 புள்ளிகளுடன் நெதர்லாந்து 4-வது இடத்தையும், 1484 புள்ளிகளுடன் இந்தியா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
    உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ராணி ரம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். #RaniRampal #HWWC
    பெண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் லண்டனில் அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்திய பெண்கள் அணி ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதே பிரிவில் நம்பர்-2 அணியான இங்கிலாந்து, 7-ம் இடத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் 16-ம் இடத்தில் இருக்கும் அயர்லாந்து அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவ வீராங்கனையான ராணி ரம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-

    கோல்கீப்பர்கள்:- சவிதா (துணைக்கேப்டன்), ரஜானி எதிமார்ப்பு

    டிஃபெண்டர்ஸ்:- சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா, குர்ஜித் கவுர், ரீனா கோகார்.

    மிட்ஃபீல்டர்ஸ்:- நமிதா டோப்போ, லிலிமா மின்ஸ், மோனிகா, நேஹா கோயல், நவ்ஜோத் கவுர், நிக்கி பிரதான்

    ஃபார்வர்ட்ஸ் வீரர்கள்:- ராணி ரம்பால் (கேப்டன்), வந்தனா கட்டாரியா, நவ்நித் கவுர், லால்ரெம்சியாமி, உதிதா
    ஸ்பெயினுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இந்தியா 4-1 என அசத்தல் வெற்றி பெற்று தொடரை 2-2 என டிரா செய்தது. #WomenHockey
    இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஸ்பெயின் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கியிருந்தது.

    இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் நேற்று மாட்ரிட்டில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 4-1 என ஸ்பெயினை துவம்சம் செய்து தொடரை 2-2 என சமன் செய்தது.



    ராணி 33-வது நிமிடத்திலும், 37-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தார். அதேபோல் குர்ஜித் கவுர் 44-வது மற்றும் 50-வது நிமிடத்திலும் கோல் அடிக்க இந்தியா 4-0 என வலுவான முன்னிலைப் பெற்றது. அதன்பின் 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் லோலா ரியேரா 58-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடிக்க இந்தியா 4-1 என வெற்றி பெற்றது.
    பெங்களூருவில் உள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சி, முடி இருந்ததாக பயிற்சியாளர் ஹரேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். #HockeyIndia
    பெங்களூரு:

    இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நெதர்லாந்தில் இந்த மாதம் 23-ல் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இருக்கிறது. அதற்காக பெங்களூருவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்நிலையில், வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் தலைவர் நரேந்தர் பத்ராவிற்கு எழுதிய கடிதத்தில், பெங்களூரு எஸ்.ஏ.ஐ. மையத்தில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருக்கிறது. உணவில் பூச்சு, வண்டு மற்றும் முடி போன்றவை இருக்கின்றன.

    வீரர்களுக்கு மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால் இது போன்ற உணவுகளால் வீரர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். சமீபத்தில் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் உணவு சார்ந்த குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இது வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலககோப்பை விளையாட்டுகளில் விளையாடும் போது பாதிப்பை ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ஹரேந்திர சிங்கின் கடிதத்திற்கு விளக்கம் அளித்த பத்ரா பெங்களூரு  எஸ்.ஏ.ஐ. மையத்தின் தலைவரிடம் இப்பிரச்சனை குறித்து பேசியதாக கூறினார். விரைவில் இந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்படும். வீரர்களுக்கு தரமான, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உணவுகள் வழங்கப்படும் என கூறினார். #HockeyIndia

    நெதர்லாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் சர்தார், லக்ரா இடம்பிடித்துள்ளனர்.
    நெதர்லாந்தின் ப்ரேடாவில் ஜூன் மாதம் 23-ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டன் சர்தார் சிங், மிட்பீல்டர் பிரேந்த்ரா லக்ரா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.



    18 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    கோல்கீப்பர்கள்:- ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் (கேப்டன்), கிருஷ்ணன் பகதுர் பதக்

    பின்கள வீரர்கள் :- ஹர்மன்ப்ரீத் சிங், வருண் குமார், சுரேந்தர் குமார், ஜர்மன்ப்ரீத் சிங், பிரேந்த்ரா லக்ரா, அமித் ரோஹிதாஸ்

    நடுகள வீரர்கள்:- மன்ப்ரீத் சிங், சிங்லென்சானா சிங் கன்ஜுகம் (துணைக் கேப்டன்), சர்தார் சிங், விவேக் சாகர் பிரசாத்

    முன்கள வீரர்கள்:- சுனில் சவ்மார்பெட் விடாலாசார்யா, ராமன்தீப் சிங், மந்தீப் சிங், சுமித் குமார், அக்சய்தீப் சிங், தில்ப்ரீத் சிங்.
    ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முன்னாள் வீரரும், சீனியர் துணைத்தலைவருமான ரஜிந்தர்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். #RajinderSingh #HockeyIndia

    புதுடெல்லி:

    ஆக்கி இந்தியா அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக மரியம்மா கோஷி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வந்தார். அவர் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் பதவி விலகினார். 

    இதையடுத்து ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரும், சீனியர் துணைத்தலைவருமான ரஜிந்தர்சிங் (59) நியமிக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அவர் இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 

    அவரது திறமையை பாராட்டும் வகையில் அவருக்கு துரோனாச்சாரியா விருது (2011), தயான் சந்த் விருது (2005), மகாராஜா ரஞ்சித் சிங் விருது (1984) ஆகிய விருதுகளை வென்றுள்ளார். #RajinderSingh #HockeyIndia
    ×