என் மலர்

  நீங்கள் தேடியது "HI"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் ஹாங் காங்கை 26-0 என வீழ்த்தி இந்திய அணி 86 வருட சாதனையை முறியடித்துள்ளது. #AsianGames2018
  ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் இன்று மோதின. இதில் இந்தியா 26-0 வெற்றி பெற்றது.

  இதற்கு முன் இந்தியா 1932-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவை இந்தியா 24-1 என வீழ்த்தியிருந்தது. அதுதான் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது 86 ஆண்டுகள் கழித்து இந்தியா அதிக கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளது.

  ருபிந்தர் பால் சிங் ஐந்து கோல்களும், ஹர்மன்ப்ரீத் சிங் நான்கு கோல்களும், ஆகாஷ்தீப் சிங் மூன்று கோல்களும் அடித்தனர். இதற்கு முன் இந்தோனேசியாவை 17-0 என வீழ்த்தியிரந்தது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் கஜகஸ்தானை 21-0 என துவம்சம் செய்தது இந்திய பெண்கள் அணி #AsianGames2018 #HockeyIndia
  ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - கஜகஸ்தான் அணிகள் மோதின.

  ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் கோலாக அடித்து தள்ளினார்கள். இதனால் இந்தியா 21-0 என கஜகஸ்தானை துவம்சம் செய்தது. இந்திய அணியில் குர்ஜித் கவுர் அதிகபட்சமாக நான்கு கோல்கள் அடித்தார்.  வந்தனா கட்டாரியா, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி தலா மூன்று கோல்களும், லிலிமா மின்ஸ், நவ்ஜோத் கவுர் தலா இரண்டு கோல்களும் அடித்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒடிசாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரை பிரபலப்படுத்தும் வகையில் ஒடிசா அரசு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. #HI
  ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நவம்பர் மாதம் 28-ந்தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 16-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கு ஒடிசா அரசு டைட்டில் ஸ்பான்சராக உள்ளது.

  உலகக்கோப்பை ஹாக்கி தொடரை பிரபலப்படுத்த ஒடிசா அரசு பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் ஹாக்கி போட்டியை பார்க்க வருவதுடன், ஒடிசாவை சுற்றிப் பார்க்கவும் வந்தால் ஒடிசா மாநில சுற்றுலாத் துறையில் முன்னேற்றம் காணமுடியும். அதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்று நினைக்கிறது.

  இதன் முயற்சியாக வெற்றிகரகமாக கொண்டு செல்லும் வகையில் லண்டனில் பஸ்களில் உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த பஸ் செல்லும் வழியெல்லாம் லண்டன் வாசிகள் மற்றும் லண்டனுக்கு வரும் வெளிநாட்டினர் இந்த விளம்பரத்தை பார்க்க வாய்ப்புள்ளது. அப்படி பார்த்து ஒடிசாவிற்கு வந்தால் அதிக அளவில் வருமானம் ஈட்டலாம் என நினைக்கிறது.  இந்த விளம்பரத்திற்கு ‘காலையில் ஒடிசா, மாலையில் ஹாக்கி’ என்று டைட்டில் வைத்துள்ளது. தற்போது லண்டனில் பெண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதை பயன்படுத்தி ஒடிசா இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியதால் சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #HockeyIndia #HI
  சர்வதேச ஹாக்கி பெடரேசன் இன்று அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. இதில் இந்தியா அணி 6-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டாம் பிடித்ததால் ஒரு இடம் முன்னேறியுள்ளது.  1906 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. 1883 புள்ளிகளுடன் அர்ஜென்டினா 2-வது இடத்தையும், 1709 புள்ளிகளுடன் பெல்ஜியம் 3-வது இடத்தையும், 1654 புள்ளிகளுடன் நெதர்லாந்து 4-வது இடத்தையும், 1484 புள்ளிகளுடன் இந்தியா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
  ×