search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coach Harendra"

    பெங்களூருவில் உள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சி, முடி இருந்ததாக பயிற்சியாளர் ஹரேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். #HockeyIndia
    பெங்களூரு:

    இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நெதர்லாந்தில் இந்த மாதம் 23-ல் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இருக்கிறது. அதற்காக பெங்களூருவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்நிலையில், வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் தலைவர் நரேந்தர் பத்ராவிற்கு எழுதிய கடிதத்தில், பெங்களூரு எஸ்.ஏ.ஐ. மையத்தில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருக்கிறது. உணவில் பூச்சு, வண்டு மற்றும் முடி போன்றவை இருக்கின்றன.

    வீரர்களுக்கு மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால் இது போன்ற உணவுகளால் வீரர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். சமீபத்தில் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் உணவு சார்ந்த குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இது வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலககோப்பை விளையாட்டுகளில் விளையாடும் போது பாதிப்பை ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ஹரேந்திர சிங்கின் கடிதத்திற்கு விளக்கம் அளித்த பத்ரா பெங்களூரு  எஸ்.ஏ.ஐ. மையத்தின் தலைவரிடம் இப்பிரச்சனை குறித்து பேசியதாக கூறினார். விரைவில் இந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்படும். வீரர்களுக்கு தரமான, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உணவுகள் வழங்கப்படும் என கூறினார். #HockeyIndia

    ×