search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rani Rampal"

    உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ராணி ரம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். #RaniRampal #HWWC
    பெண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் லண்டனில் அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்திய பெண்கள் அணி ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதே பிரிவில் நம்பர்-2 அணியான இங்கிலாந்து, 7-ம் இடத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் 16-ம் இடத்தில் இருக்கும் அயர்லாந்து அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவ வீராங்கனையான ராணி ரம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-

    கோல்கீப்பர்கள்:- சவிதா (துணைக்கேப்டன்), ரஜானி எதிமார்ப்பு

    டிஃபெண்டர்ஸ்:- சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா, குர்ஜித் கவுர், ரீனா கோகார்.

    மிட்ஃபீல்டர்ஸ்:- நமிதா டோப்போ, லிலிமா மின்ஸ், மோனிகா, நேஹா கோயல், நவ்ஜோத் கவுர், நிக்கி பிரதான்

    ஃபார்வர்ட்ஸ் வீரர்கள்:- ராணி ரம்பால் (கேப்டன்), வந்தனா கட்டாரியா, நவ்நித் கவுர், லால்ரெம்சியாமி, உதிதா
    ஸ்பெயினில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கும் பெண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி ரம்பால் அணிக்கு திரும்பியுள்ளார்.
    இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஸ்பெயினில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. ஜூன் 12-ந்தேதி தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறாத ராணி ரம்பால் தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

    ஜூலை மாதம் லண்டனில் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமா ஸ்பெயின் அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-

    கோல்கீப்பர்கள்:- 1. சவிதா, 2. ஸ்வாதி.

    பின்கள வீராங்கனைகள்:- சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, சுமன் தேவி தவுடம், தீபிகா, குர்ஜித் கவுர், சுஷிலா சானு புக்ரம்பம்

    நடுகள வீராங்கனைகள்:- நமிதா டாப்போ, லலிமா மின்ஸ், மோனிகா, நேகா கோயல், நவ்ஜோத் கவுர், நிக்கி பிரதான்

    முன்கள வீராங்கனைகள்:- ராணி ரம்பால் (கேப்டன்), வந்தான கட்டாரியா, நவ்நீத் கவுர், லால்ரெம்சியாமி, உதிட்டா, அனுபா பர்லா.
    ×