என் மலர்

  செய்திகள்

  ஆசிய விளையாட்டு போட்டி- ஹாக்கியில் 17-0 என இந்தோனேசியாவை துவம்சம் செய்தது இந்தியா
  X

  ஆசிய விளையாட்டு போட்டி- ஹாக்கியில் 17-0 என இந்தோனேசியாவை துவம்சம் செய்தது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கி குரூப் சுற்று போட்டியில் இந்தோனேசியாவை 17-0 என துவம்சம செய்தது இந்தியா #AsianGames2018
  ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற ஹாக்கி குரூப் போட்டி ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - இந்தோனேசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய வீரர்கள் கோலாக அடித்துத் தள்ளினார்கள். இந்தியாவின் அட்டக் ஆட்டத்திற்கு இந்தோனேசியாவால் அணைபோட முடியவில்லை.

  ஆட்டத்தின் 46-வது வினாடியில் ருபிந்தர் பால் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 3-வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங் மேலும் ஒரு கோல் அடித்தார். 7-வது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். 10-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்தார்.

  13-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் ஒரு கோல் அடித்தார். 25-வது நிமிடத்தில் சுனில் ஒரு கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் விவேக் சாகர் ஒரு கோல் அடித்தார். 30-வது நிமிடத்தில் மந்தீப் சிங் ஒரு கோலும், தில்ப்ரீத் சிங் ஒரு கோலும் அடிக்க முதல் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 9-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

  2-வது பாதி நேரத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 31-வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். 32-வது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் கோல் அடித்தார். 38-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் கோல் அடித்தார். 45-வது நிமிடத்தில் லலித் குமார் உபத்யாய் கோல் அடித்தார்.  45-வது நிமிடத்தில் மந்தீப் சிங் கோல் அடித்தார். 49-வது நிமிடத்தில் மந்தீப் சிங் கோல் அடித்தார். 53-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங் கோல் அடித்தார். 54-வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸ் கோல் அடித்தார்.

  இதனால் இந்தியா 17-0 என இந்தோனேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் மந்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங், தில்ப்ரீத் சிங் ஆகியோர் தலா மூன்று கோல்கள் அடித்தனர்.
  Next Story
  ×