search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hardik Patel"

    குஜராத்தில் ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக தலைவர்களுடன் அரசு அவசர ஆலோசனை நடத்தியது. #HardikPatel
    அகமதாபாத்:

    குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் மத்தியில் புகழ் பெற்ற தலைவராக 25 வயதே ஆன ஹர்திக் பட்டேல் திகழ்கிறார். இவர், பதிதார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு அவர் நடத்திய போராட்டம் குஜராத்தை கிடுகிடுக்க வைத்தது.

    இப்போது அவர் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இன்று 12-வது நாளாக உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இத்தனை நாளும் அவர் சாப்பிடாததால் அவர் மிகவும் சோர்வாக இருக்கிறார். அவரது உடல் எடை 20 கிலோ வரை குறைந்துள்ளது.

    கடந்த 2 நாட்களாக தண்ணீரும் குடிக்கவில்லை. இதனால் உடலில் நீர்சத்து குறைந்து உடல் அவையங்கள் பாதிக்க தொடங்கி உள்ளன. இதனால் அவரது உடல்நிலைக்கு கடும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை நிலவுகிறது.

    அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

    அதே நேரத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் குஜராத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று அரசு அவசர ஆலோசனை நடத்தியது. இதில் பட்டேல் சமூக மந்திரிகள் மற்றும் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அரசு ஹர்திக் பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

    ஏற்கனவே ஹர்திக் பட்டேலை குஜராத் முன்னாள் முதல்-மந்திரி சுரேஷ் மேத்தா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தினேஷ் திரிவேதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல், பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜிதன்ராம் மாஞ்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    நேற்று பா.ஜனதா மூத்த தலைவர்களான யஷ்வந்த்சின்கா, நடிகர் சத்ருகன்சின்கா ஆகியோர் ஹர்திக் பட்டேலை சந்தித்து பேசினார்கள்.

    இதுபற்றி யஷ்வந்த்சின்கா கூறும்போது, நாங்களும் விவசாயிகளுக்காக போராடி வருகிறோம். இப்போது இந்த பிரச்சினையை தேசிய அளவில் கொண்டு சென்று போராடுவோம்.

    விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஹர்திக் போராடுவது நியாயமானது. அவரிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார். #HardikPatel


    அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என மத்திய மந்திரி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #RamdasAthawale #HardikPatel
    அகமதாபாத்:

    மத்திய அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியாக இருந்து வருபவர் ராமதாஸ் அத்வாலே. இந்திய குடியரசு கட்சி தலைவரான இவர், நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்துக்கு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். ஆனால் கடந்த முறை பெற்ற இடங்களை விட 30 முதல் 40 இடங்கள் குறைவாக கிடைக்கும்.

    குஜராத்தில் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் பதிதார் இனத்தை சேர்ந்த ஹர்திக் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த தயார். பேச்சுவார்த்தை மூலமே இந்த பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார். #RamdasAthawale #HardikPatel
    குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் இனத்தவருக்கு இட இதுக்கீடு கேட்டு போராடி கைதான ஹர்திக் பட்டேல் இன்று மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார். #HardikPatel #Patidarquota
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் தொடர்பாக வெடித்த வன்முறைக்கு 14 பேர் உயிரிழந்தனர்.

    அந்த போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று அந்த இயக்கத்தின் சார்பில் குஜராத்தில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

    இதைதொடர்ந்து, அகமதாபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டு வளாகத்தில் இன்று மாலை 3 மணியளவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஹர்திக் பட்டேல் தொடங்கினார். பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பை சேர்ந்த பலர் அங்கு திரண்டுள்ளனர்.

    இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க வந்த தனது அமைப்பை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார். #HardikPatel  #Patidarquota
    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் புகி கிராமத்தில் பதார் ஆற்றில் ஜலசமாதி போராட்டம் நடத்த முயன்ற எம்.எல்.ஏ. லலித் வசோயா தலைமையிலான காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். #Gujarat #JaiSamadhi
    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் புகி கிராமத்தில் பதார் ஆற்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லலித் வசோயா தலைமையில் ஜலசமாதி போராட்டம் நடத்த முயன்றனர். ஜவுளி சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

    லலித் வசோயாவுக்கு ஆதரவாக மேலும் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேல் உள்பட பலர் புகி கிராமத்தில் கூடியிருந்தனர். அப்போது போலீசார் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி அவர்களை கைது செய்தனர்.   #Gujarat #JaiSamadhi   #tamilnews 
    குஜராத்தில் சாலை விதிகளை மீறிய பதிதார் இன தலைவர் ஹர்திக் படேலுக்கு போக்குவரத்து போலீசார் 600 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். #HardikPatel
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பதிதார் இன மக்களுக்காக இடஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர்  ஹர்திக் படேல். இவர் மீது பல்வேறு  வழக்குகளை மாநில போலீசார்  பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், குஜராத்தில் சாலை விதிகளை மீறிய பதிதார் இன தலைவர் ஹர்திக் படேலுக்கு போக்குவரத்து போலீசார் 600 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில்,  போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த ஹர்திக் படேல் காரை போக்குவர்த்து போலீசார் தடுத்து நிறுத்தினர். 

    அவரது கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அவரது கார் டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சாலை விதிகளை மீறியதாக ஹர்திக் படேலுக்கு 600 ரூபாய் அபராதம் விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
    குஜராத்தில் அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி ஹர்திக் படேலை கைது செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. #HardikPatel
    அகமதாபாத்:

    கடந்த 2015-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார். அப்போது, மேஹ்சனா மாவட்டத்தின் விஸ்நகரில் உள்ள பாஜக எம்.எல்.ஏ ரிஷிகேஷ் பட்டேலின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. 

    இதுதொடர்பாக ஹர்திக் பட்டேல், அவரது ஆதரவாளர்கள் லால்ஜி பட்டேல் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஸ்நகரில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

    இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பட்டேல், லால்ஜி பட்டேல் மற்றும் சர்தார் பட்டேல் அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி ஹர்திக் படேலை கைது செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.#HardikPatel

    இதுதொடர்பாக, மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டே கூறுகையில், குஜராத் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பாஜக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்கிறது. இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் இளைஞர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு அவர்களின் குரல்களை அடக்க நினைக்கிறது. மேலும், மாநில அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார். #HardikPatel
    பட்டேல் இடஒதுக்கீடு போராட்டத்தின் போது, எம்.எல்.ஏ அலுவலகத்தை சூறையாடியதாக தொடரப்பட்ட வழக்கில், ஹர்திக் படேல் உள்ளிட்ட மூவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. #HardikPatel
    அகமதாபாத்:

    கடந்த 2015-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார். இந்தப் போராட்டத்தின் போது, மேஹ்சனா மாவட்டத்தின் விஸ்நகரில் உள்ள பாஜக எம்.எல்.ஏ ரிஷிகேஷ் பட்டேலின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. 

    இந்த சம்பவம் தொடர்பாக ஹர்திக் பட்டேல், அவரது ஆதரவாளர்கள் லால்ஜி பட்டேல் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு விஸ்நகரில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட இரண்டு பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், மீதம் உள்ளவர்கள் மீது போதுமான ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி வி.பி.அகர்வால் தீர்ப்பு கூறினார்.

    ஹர்திக் பட்டேல், லால்ஜி பட்டேல் மற்றும் சர்தார் பட்டேல் அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை காலம் விதிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பட்டேலால் ஜாமீன் பெற முடியும் என்பதால் அவரின் வழக்கறிஞர் ஜாமீன் மனுவை உடனடியாக தாக்கல் செய்தார்.
    மத்திய பிரதேச மாநிலத்தில் ஹர்திக் பட்டேல் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளையும், காலணிகளையும் வீசினர். #HardikPatel
    ஜபல்பூர்:

    குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையினராக உள்ள பட்டேல் இனத்தவரை ‘ஓ.பி.சி.’ என்னும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான போராட்டத்தை கையில் எடுத்து நடத்தியவர் ஹர்திக் பட்டேல் (வயது 25).

    இவர் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், பனகர் என்ற இடத்தில் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க நேற்று காரில் சென்று கொண்டு இருந்தார். அங்கு ரானிடால் பகுதியில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் அருகே அவரது கார் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளையும், காலணிகளையும் வீசினர். இந்த தகவலை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் யாதவ் தெரிவித்தார்.

    ஹர்திக் பட்டேல் கார் மீது முட்டைகளையும், காலணிகளையும் வீசிய நபர்களில் சிலர் கைகளில் துப்பாக்கிகளும் இருந்ததாக சஞ்சய் யாதவ் கூறினார்.

    இந்த சம்பவத்துக்கு அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் ஆதரவாளர்கள்தான் காரணம் என ஹர்திக் பட்டேல் குற்றம் சாட்டினார்.  #HardikPatel  #tamilnews 
    ×