என் மலர்
செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் - மத்திய மந்திரி அத்வாலே
அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என மத்திய மந்திரி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #RamdasAthawale #HardikPatel
அகமதாபாத்:
மத்திய அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியாக இருந்து வருபவர் ராமதாஸ் அத்வாலே. இந்திய குடியரசு கட்சி தலைவரான இவர், நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்துக்கு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். ஆனால் கடந்த முறை பெற்ற இடங்களை விட 30 முதல் 40 இடங்கள் குறைவாக கிடைக்கும்.
குஜராத்தில் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் பதிதார் இனத்தை சேர்ந்த ஹர்திக் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த தயார். பேச்சுவார்த்தை மூலமே இந்த பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார். #RamdasAthawale #HardikPatel
Next Story






