search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gujarath"

    மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது. #BulletTrain #Japan
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஆகிய இருவரும் கடந்த மே அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

    சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘குஜராத் மாநில சட்டப்படி, வளமான நிலத்துக்கு குறைவான நஷ்டஈடு தந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் சட்டப்படி நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என பல விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், விவசாயிகள் எதிர்ப்பால் தொய்வடைந்துள்ள புல்லட் ரெயில் கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் சர்வதேச கூட்டமைப்பு முகமை (JICA) என்ற ஜப்பான் அரசு நிறுவனமானது விவசாயிகள் பிரச்சனை குறித்தும், அரசு எடுத்துவரும் நவடிக்கை குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
    குஜராத் மாநிலத்தின் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில், 50 மதிப்பெண் கொண்ட தேர்விற்கு, 80 மதிப்பெண் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ExamMarks
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் கல்வி வாரியத்தால் இந்த ஆண்டின் முற்பகுதியில் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. கணித தேர்வுக்கு மொத்த மதிப்பெண்களே 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மாணவர் ஒருவர் கணிதத் தேர்வில் 80 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தாலும், கூடுதல் மதிப்பெண் கிடைத்ததற்காக மகிழ்ந்தார்.
     
    இதற்கிடையே, இதுகுறித்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தும்படி மாநில கல்வித்துறை உத்தரவிட்டது.  விசாரணையில், அந்த மாணவனுக்கு தவறுதலாக 80 மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. உண்மையில், அந்த மாணவர் பெற்றது வெறும் 8 மதிப்பெண் மட்டுமே.

    இதேபோல், 12-ம் வகுப்பு தேர்வுகளின் போதும் தவறான பதிலுக்கு கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. 

    ஆசிரியர்களின் இத்தகைய செய்கையால் மாநில கல்வி வாரியம் எரிச்சல் அடைந்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தலில், இதுபோன்ற குளறுபடிகளை செய்தது தொடர்பாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் தேர்வுக்கே வராத 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய பீகார் கல்வித்துறை  மாணவர்கள், பெற்றோரின் அதிருப்திக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. #ExamMarks
    அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என மத்திய மந்திரி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #RamdasAthawale #HardikPatel
    அகமதாபாத்:

    மத்திய அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியாக இருந்து வருபவர் ராமதாஸ் அத்வாலே. இந்திய குடியரசு கட்சி தலைவரான இவர், நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்துக்கு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். ஆனால் கடந்த முறை பெற்ற இடங்களை விட 30 முதல் 40 இடங்கள் குறைவாக கிடைக்கும்.

    குஜராத்தில் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் பதிதார் இனத்தை சேர்ந்த ஹர்திக் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த தயார். பேச்சுவார்த்தை மூலமே இந்த பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார். #RamdasAthawale #HardikPatel
    குஜராத்தில் சாலை விதிகளை மீறிய பதிதார் இன தலைவர் ஹர்திக் படேலுக்கு போக்குவரத்து போலீசார் 600 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். #HardikPatel
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பதிதார் இன மக்களுக்காக இடஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர்  ஹர்திக் படேல். இவர் மீது பல்வேறு  வழக்குகளை மாநில போலீசார்  பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், குஜராத்தில் சாலை விதிகளை மீறிய பதிதார் இன தலைவர் ஹர்திக் படேலுக்கு போக்குவரத்து போலீசார் 600 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில்,  போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த ஹர்திக் படேல் காரை போக்குவர்த்து போலீசார் தடுத்து நிறுத்தினர். 

    அவரது கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அவரது கார் டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சாலை விதிகளை மீறியதாக ஹர்திக் படேலுக்கு 600 ரூபாய் அபராதம் விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
    குஜராத்தில் மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் வெள்ளம் பாதித்த பகுதிகளை காரில் சென்று பார்வையிட்டார் முதல் மந்திரி விஜய் ரூபானி. #VijayRupani
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று பார்வையிட முதல் மந்திரி விஜய் ரூபானி நேற்று ஹெலிகாப்டரில் சென்றார்.  

    சோம்நாத் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றபோது அங்கு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அவர் சென்ற ஹெலிகாப்டரை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதையடுத்து, ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜெட்பூர் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட காரில் சென்றார். அவருடன் அரசு அதிகாரிகளும் உடன் சென்றனர்.
    #VijayRupani
    ×