search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Minister Ramdas Athawale"

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் சேரவேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார். #ParliamentElection #BJP #RamdasAthawale #ADMK #AMMK
    புதுச்சேரி:

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று புதுச்சேரிக்கு வந்தார். தனது துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர்,  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேரவேண்டும்.

    தமிழகத்தின் நலனை கருதி அ.ம.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். #ParliamentElection #BJP #RamdasAthawale #ADMK #AMMK
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் இ்ல்லை என மத்திய மந்திரி அத்வாலே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #FuelPriceHike #RamdasAthawale
    ஜெய்ப்பூர்:

    நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

    இந்நிலையில், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் ஒரு மத்திய மந்திரி, எனக்கு அரசின் சலுகைகள் உள்ளன. அவற்றை நான் பயன்படுத்தி வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி எனக்கு கவலையில்லை. எனது மந்திரி பதவி பறிபோனால்தான் நான் பாதிப்பு அடைவேன் என கூறினார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மத்திய மந்திரியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #FuelPriceHike #RamdasAthawale
    அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என மத்திய மந்திரி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #RamdasAthawale #HardikPatel
    அகமதாபாத்:

    மத்திய அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியாக இருந்து வருபவர் ராமதாஸ் அத்வாலே. இந்திய குடியரசு கட்சி தலைவரான இவர், நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்துக்கு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். ஆனால் கடந்த முறை பெற்ற இடங்களை விட 30 முதல் 40 இடங்கள் குறைவாக கிடைக்கும்.

    குஜராத்தில் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் பதிதார் இனத்தை சேர்ந்த ஹர்திக் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த தயார். பேச்சுவார்த்தை மூலமே இந்த பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார். #RamdasAthawale #HardikPatel
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். #Rahulgandhi #RamdasAthawale
    மும்பை:

    கர்நாடகம் மாநில சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றால் பிரதமராக பதவியேற்க தயார் என்றார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி பிரதமராக இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்ற ஆசை குறித்து பேசியுள்ளார். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் எனில், அவர் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    கர்நாடக தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி பாஜகவை தலித்களுக்கு எதிரான கட்சி என சித்தரிக்க முயலுகிறது. மக்களுக்கு உண்மை நிலை நன்கு தெரியும் என தெரிவித்துள்ளார். #Rahulgandhi #RamdasAthawale
    ×