என் மலர்
நீங்கள் தேடியது "patidar quota"
குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் இனத்தவருக்கு இட இதுக்கீடு கேட்டு போராடி கைதான ஹர்திக் பட்டேல் இன்று மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார். #HardikPatel #Patidarquota
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் தொடர்பாக வெடித்த வன்முறைக்கு 14 பேர் உயிரிழந்தனர்.
அந்த போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று அந்த இயக்கத்தின் சார்பில் குஜராத்தில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர்.
இதைதொடர்ந்து, அகமதாபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டு வளாகத்தில் இன்று மாலை 3 மணியளவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஹர்திக் பட்டேல் தொடங்கினார். பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பை சேர்ந்த பலர் அங்கு திரண்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க வந்த தனது அமைப்பை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார். #HardikPatel #Patidarquota






