search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harbhajan singh"

    சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2018 சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ரோகித் சர்மா சாதனையுடன் ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு இணைந்துள்ளனர். #IPL2018
    மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒரு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று பேரையும் இடம்பிடித்துள்ளார்.

    இவர்தான் அதிக கோப்பையை வென்ற வீரராக இருந்தார். இவருடன் தற்போது அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர். இருவரும் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தனர். அப்போது மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்ஸ் பட்டம் வென்றிருந்தது.



    இந்த முறை இரண்டு பேரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்கள். 2018 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அம்பதி ராயுடும், ஹர்பஜன் சிங்கும் நான்கு முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மா சாதனையுடன் இணைந்துள்ளனர்.

    2009-ம் ஆண்டு டெக்கார் சார்ஜர்ஸ் அணியும், 2013, 2015 மற்றும் 2017-ல் மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    ஐபிஎல் 2018 தொடரில் கோப்பையை கைப்பற்றியதை தொடர்ந்து தனது வெற்றியை மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக ஹர்பஜன் சிங் டுவிட் செய்துள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தமிழக ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டுவிட் செய்து வருகிறார். அவர் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் டுவிட் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.



    இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கரன் சர்மா சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார். சிறப்பாக விளையாடிய சென்னை அணி வெற்றி பெற்று 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியை வீரர்கள் அனைவரும் கொண்டாடினர்.



    வெற்றி குறித்து டுவிட் செய்த ஹர்பஜன் சிங், 'தோட்டாவென கிளம்பிய பந்துகள். கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம். எமை அடித்து, அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம். மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், 'கிட்டத்தட்ட ஐபில் ஏலம் நடக்க 3/4 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த விசயத்த இப்போ அது நிதர்சனம். நம்பிக்க வெச்சா எதுவும் சாத்தியம். வேர்வை சிந்தி உழைச்சா எந்த இலக்கையும் அடைய முடியும் என்னோட 4th @ipl கப் @ChennaiIPL காக #WhistlePodu  கோப்பை வெல்ல ஓங்கிய கைகள் #எதிர்காலம்'

    என தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். #harbhajansingh #IPL2018 #CSK

    கவுன்ட்டி கிரிக்கெட் இல்லாமலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறந்த வீரர்தான் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இந்திய அணி கேப்டனாக விராட் கோலி கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து சென்று விளையாடிய போது மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் ஆஸ்திரேலியா சென்ற தொடரில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.

    இந்தியா அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. அப்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சர்ரே அணியில் இணைந்து கவுன்ட்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.



    துரதிருஷ்டவசமாக கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும், விராட் கோலி சிறந்த வீரர்தான் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு நன்றாக இருக்க வேண்டும். அவரது காயம் பயப்படக்கூடிய அளவிற்கு பெரிதானதல்ல. இங்கிலாந்து தொடருக்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளன. கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும், இந்த நேரம் அவருக்கு நல்லதாக அமையும்.

    ஏனென்றால், அவரது காயம் குணமடைய ஓய்வு தேவை. கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதை விட பெரிய அளவில் யோசிப்பது தயார் ஆவதற்கு சிறந்ததாகும். கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும் இன்னும் அவர் சிறந்த வீரர்தான்.’’ என்றார்.
    நேற்று நடைபெற்ற பிளே-ஆப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். #VIVOIPL #IPL2018 #CSKvSRH #HarbhajanSingh

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் முதல் பிளே-ஆப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 139 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 140 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 



    இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது: “விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல் நோக்கி வளரும்.@chennaiipl மக்கள் எங்களை விதைகளாய் வித்திட்டார்கள் இன்று அரை இறுதியில் வென்று உங்கள் முன் விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.மெரீனாவை வென்ற கூட்டம் கோப்பை வெல்லாமல் போய்விடுமா.அறம் கூற்று சொல்லும் #நெஞ்சுக்குநீதி”.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். #VIVOIPL #IPL2018 #CSKvSRH #HarbhajanSingh
    நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். #VIVOIPL #IPL2018 #CSKvKXIP #HarbhajanSingh

    புனே:

    ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

    இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது: “எங்க டீமுக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது அன்ப கொட்டிக்கொடுக்குற தமிழ்நாட்டுக்கு, உயிரக்குடுத்தாச்சும் கப் ஜெய்ச்சு பெருமை சேக்கனும்ங்கற பயம் நிறையா இருக்கு.ஒரே ஒரு ஆசை தான்,@IPL முடியும்போது "தல" கைல கப் இருக்கணும்,ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் @ChennaiIPL #கற்றவை”.



    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். #VIVOIPL #IPL2018 #CSKvKXIP #HarbhajanSingh
    இந்தியா ஏன் பிங்க் பாலில் விளையாட மறுக்கிறது எனத் தெரியவில்லை என்று சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #PinkBallTest
    பகல் - இரவு டெஸ்ட் போட்டியை நடத்த எல்லா நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. மதியதற்கு மேல் டெஸ்ட் போட்டியை நடத்தினால் அதிக அளவில் ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்கலாம் என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

    குறிப்பாக ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தில் டே-நைட் டெஸ்டை நடத்தி வருகிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. அப்போது அடிலெய்டு டெஸ்டில் டே-நைட் மேட்ச் ஆக நடத்த இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் ஆஸ்திரேலியா பகல் டெஸ்டாக நடத்த ஒத்துக் கொண்டது.



    இந்திய வீரர்கள் பிங்க் பால் டெஸ்டிற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இந்திய அணி ஏன் பிங்க் பால் டெஸ்டில் விளையாட மறுக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘இந்தியா ஏன் டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. இதை நாம் கண்டிப்பாக முயற்சி செய்தாக வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.
    ரெய்னா மகளின் 2-வது பிறந்த நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து கூறினார்கள்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் விளையாடும் இடங்களுக்கெல்லாம் தங்களது குடும்பங்களை அழைத்துச் செல்கிறார்கள். அப்போது அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் ஒன்று சேர்ந்து போட்டியை ரசிக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய குடும்பமாக திகழ்கிறார்கள்.



    இந்நிலையில் ரெய்னா மகள் கிரேசியா நேற்று 2-வதை முடிந்து 3-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்தார். இதனல் நேற்றிரவு அவளுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் எம்எஸ் டோனி, ஹர்பஜன் சிங் ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த நாள் பாடல் பாடி அசத்தினார்கள். இவர்களுடன் வெயின் பிராவோவும் கலந்து கொண்டார்.



    ரெய்னா மகள் கிரேசியாவின் பிறந்த நாள் விழா வீடியோவை ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், அப்பவப்போது தமிழில் ட்வீட் போட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். #CSK #IPL2018 #HarbhajanSingh #VIVOIPL #KKRvCSK

    புனே:

    சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைப்பார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இன்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.



    இந்நிலையில், ஐதராபாத் அணியிடம் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளதாவது, “ஓங்கி இடிஇடித்து,ஓயாமல் மின்னல் வெட்டி,பல மணிநேரம் நிக்காமல்  நெரம்பபபெய்த,வரதா புயலால் சென்னைய ஒன்றும் செய்ய இயலவில்லை.பதினொன்று வீரர்களை கொண்டு எங்களை சாய்த்து விடலாம் என்று பார்த்தாயா.இது தலை நிமிர்ந்து நடை போடும் @chennaiipl @RayuduAmbati @ShaneRWatson33 #chahar #விஸ்வாசம்", என அவர் கூறியுள்ளார்.  #CSK #IPL2018 #HarbhajanSingh #VIVOIPL
    ×