என் மலர்

  செய்திகள்

  இந்தியா ஏன் பிங்க் பாலில் விளையாட விரும்பவில்லை எனத் தெரியவில்லை- ஹர்பஜன் சிங்
  X

  இந்தியா ஏன் பிங்க் பாலில் விளையாட விரும்பவில்லை எனத் தெரியவில்லை- ஹர்பஜன் சிங்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா ஏன் பிங்க் பாலில் விளையாட மறுக்கிறது எனத் தெரியவில்லை என்று சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #PinkBallTest
  பகல் - இரவு டெஸ்ட் போட்டியை நடத்த எல்லா நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. மதியதற்கு மேல் டெஸ்ட் போட்டியை நடத்தினால் அதிக அளவில் ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைக்கலாம் என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

  குறிப்பாக ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தில் டே-நைட் டெஸ்டை நடத்தி வருகிறது. இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. அப்போது அடிலெய்டு டெஸ்டில் டே-நைட் மேட்ச் ஆக நடத்த இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் ஆஸ்திரேலியா பகல் டெஸ்டாக நடத்த ஒத்துக் கொண்டது.  இந்திய வீரர்கள் பிங்க் பால் டெஸ்டிற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இந்திய அணி ஏன் பிங்க் பால் டெஸ்டில் விளையாட மறுக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

  இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘இந்தியா ஏன் டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. இதை நாம் கண்டிப்பாக முயற்சி செய்தாக வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.
  Next Story
  ×