search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harassment"

    • நிர்பயா சம்பவத்தை போல மற்றொரு நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
    • இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

    புதுடெல்லி :

    டெல்லியை சேர்ந்த நிர்பயா என்ற இளம்பெண் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழித்து, சித்ரவதை செய்யப்பட்டு பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

    ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 நாட்களுக்குப்பின் சிங்கப்பூரில் உயிரிழந்தார். நெஞ்சை உலுக்கிய இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இதைப்போல மற்றொரு சம்பவம் தற்போது டெல்லி அருகே நடந்து உள்ளது. டெல்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 5 பேர் கும்பலால் சீரழிக்கப்பட்டு பலவித சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

    நந்த் நகரியை சேர்ந்த அந்த பெண்ணுக்கும், வேறு சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

    இந்த நிலையில் அந்த பெண் தனது சகோதரரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த 17-ந்தேதி குருகிராம் சென்றுள்ளார். அது முடித்து திரும்பியவரை 5 பேர் கும்பல் தங்கள் காரில் கடத்தி சென்றுள்ளது.

    டெல்லியின் எல்லைப்பகுதியான காசியாபாத்துக்கு கொண்டு சென்ற அந்த கும்பல், பின்னர் மாறி மாறி அவரை கொடூரமாக கற்பழித்து இருக்கிறது. அத்துடன் பலவிதமான சித்ரவதைகளையும் அந்த பெண்ணுக்கு அளித்து உள்ளனர்.

    பின்னர் பெண்ணின் கை மற்றும் கால்களை கட்டி, ஒரு சாக்கு மூட்டையில் கட்டி நேற்று அதிகாலையில் சாலையோரம் வீசியுள்ளனர்.

    வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்த அப்பகுதியினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு காசியாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறியுள்ள டாக்டர்கள், முக்கியமான உள்ளுறுப்புகள் எதுவும் சேதமடையவில்லை என்றும் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே இந்த கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் குறித்து பெண் அளித்த தகவல்களின் பேரில் உடனடியாக போலீசார் விசாரணை நடத்தினர். அத்துடன் அவர்களை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இதன் பயனாக அந்த கும்பலை சேர்ந்த 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறின் பேரில் இந்த கொடூரத்தை அரங்கேற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நிர்பயா சம்பவத்தை போல மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியிருப்பது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது.

    இது தொடர்பாக காசியாபாத் போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முதல் தகவல் அறிக்கையின் நகல் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த சம்பவம் பயங்கரமாகவும், மனதை தொந்தரவு செய்யும் வகையிலும் இருப்பதாக கூறியுள்ள அவர், இது நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்துவதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.

    • தானே ரெயில் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர், மாணவியை மானபங்கம் செய்தார்.
    • போலீசார் தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.

    தானே :

    தானே ரெயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை 6.45 மணியளவில் 21 வயது கல்லூரி மாணவி சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், மாணவியை மானபங்கம் செய்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி உதவி கேட்டு சத்தம் போட்டார். அப்போது அருகில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார்.

    எனினும் மாணவி டிரைவரின் சட்டை காலரை பிடித்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் மாணவியை தர, தர வென இழுத்து கொண்டு ஆட்டோவுக்கு சென்றார். ஆனாலும் மாணவி டிரைவரை விடவில்லை.

    இதையடுத்து அவர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து, மாணவியை இழுத்து கொண்டே சிறிது தூரம் ஓட்டினார். ஒரு கட்டத்தில் அவர் மாணவியை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். இந்தநிலையில் அந்த பகுதியில் சென்றவர்கள் ஓடிச்சென்று மாணவிக்கு உதவினர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்து, ஆட்டோவில் இழுத்து சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து மாணவியை மானபங்கம் செய்து ஆட்டோவில் இழுத்து சென்ற டிரைவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

    • கொல்லப்பட்ட 2 சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை நடந்தது.
    • இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லக்னோ :

    உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டம் நிகாசன் பகுதியில், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட 2 சிறுமிகளும் உடன் பிறந்தவர்கள். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

    அவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவன் சோட்டு. அவன், 2 சிறுமிகளையும் தன்னுடைய நண்பர்களான ஜுனைத், சுஹைல், ஹபிசுரமான் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

    அந்த பழக்கத்தின் அடிப்படையில், நேற்று முன்தினம் அந்த சகோதரிகளை சந்திப்பதற்காக ஜுனைத், சுஹைல், ஹபிசுரமான் ஆகியோர் சென்றனர். பின்னர், மோட்டார் சைக்கிளில் சவாரி செய்யலாம் என்று 2 சிறுமிகளையும் அழைத்து சென்றனர்.

    அங்குள்ள ஒரு கரும்பு தோட்டத்துக்கு 2 சிறுமிகளையும் கூட்டிச் சென்றனர். அங்கு வைத்து 2 பேரையும் அவர்களது விருப்பத்துக்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பின்னர், தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு 2 சிறுமிகளும் வற்புறுத்தினர். அவர்கள் மீண்டும் மீண்டும் நிர்பந்தம் செய்ததால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் துண்டால் கழுத்தை நெரித்து 2 சிறுமிகளையும் கொலை செய்தனர்.

    பின்னர், தங்கள் நண்பர்களான கரீமுதின், ஆரிப் ஆகியோரை செல்போனில் பேசி வரவழைத்தனர். அவர்களின் உதவியுடன் 2 சிறுமிகளின் உடல்களை அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டனர். பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்குவதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமிகளின் குடும்பத்தினரும், கிராம மக்களும் போராட்டத்தில் குதித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் சுமன் சம்பவ இடத்துக்கு வந்தார். குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தார்.

    சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின்பேரில், சோட்டு உள்பட 6 பேர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம், போக்சோ ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஜுனைத்தும், மற்றொருவனும் தலைமறைவாக இருந்தனர்.

    இந்தநிலையில், நேற்று அவர்கள் போலீசாரின் கண்ணில் பட்டனர். போலீசார் லேசான துப்பாக்கி சூடு நடத்தி 2 பேரையும் கைது செய்தனர். இதில், ஜுனைத்தின் காலில் குண்டு காயம் ஏற்பட்டது.

    இவ்வழக்கில், ஜுனைத், சுஹைல், ஹபிசுரமான், ஆரிப், கரீமுதின், சோட்டு ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கொல்லப்பட்ட 2 சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை நடந்தது. அக்காட்சி, வீடியோ படமாக எடுக்கப்பட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு, ஒரு சிறுமியின் உடல், நிகாசன் போலீஸ் நிலையத்துக்கு உள்ளே ஒரு மரத்தில் தொங்கியபடி கிடந்தது. அந்த சம்பவத்தை நினைவுபடுத்துவதுபோல், தலித் சிறுமிகள் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் அமைந்து இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் சுமன் தெரிவித்தார்.

    • கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பின்றி உள்ளோம்.

    நாகப்பட்டினம்:

    நாகை திருக்கண்ணப்புரம் அருகே விசலுார் ராராத்திமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்.

    இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் உமா மற்றும் அவரின் குழந்தைகளுக்கு எந்தவித பொருளாதார உதவியும் செய்யாமல், அந்த பெண் வீட்டிலேயே ரமேஷ் வசித்து வந்துள்ளார்.

    மேலும் அடித்து துன்புறுத்துகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது உமாவை தாக்கி உள்ளார்.

    இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா புகார் அளித்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக உமா தனது பிள்ளைகளுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பு இன்றி உள்ளோம்.

    எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிறுமிக்கு 13 வயதில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
    • கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அம்பத்தூர்:

    ஆலந்தூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டிய ராஜ்(50). இவர் சென்னை மாநகர காவல்துறையில் வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்து மகளுடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் அடிக்கடி இளம்பெண்ணை சந்தித்து வந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த காதலியின் மகள் மீதும் அவருக்கு ஆசை ஏற்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிறுமிக்கு 13 வயதில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

    இதனை வெளியில் சொல்ல முடியாமல் இளம்பெண்ணும், அவரது மகளும் தவித்து வந்தனர். தற்போது அந்த சிறுமி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஆனாலும் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜின் ஆசை மேலும் அதிகரித்தது. அவர், கல்லூரி மாணவிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

    இதனைப் பொறுக்க முடியாத மாணவின் தாய், சப்-இன்ஸ்பெக்டர் மீது வில்லிவாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ், கணவரை பிரிந்த இளம்பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்தது தெரிந்தது.

    மேலும் இளம்பெண்ணின் மகளான கல்லூரி மாணவிக்கு, சிறுமியாக இருந்த காலகட்டத்தில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கூலி வேலை செய்துவரும் கணேஷ் (30) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
    • வலுக்கட்டாயமாக மாணவியின் ஆடையை கழற்றி அவமானப்படுத்தினார்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி மண்ணடியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மாணவி நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கூலி வேலை செய்துவரும் கணேஷ் (30) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். வலுக்கட்டாயமாக மாணவியின் ஆடையை கழற்றி அவமானப்படுத்தினார்.

    மாணவி அங்கிருந்து தப்பி வந்து தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி இந்த வழக்கை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றினார்.

    விசாரணை நடத்தி மகளிர் போலீசார் கணேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்தவரை தந்தை, நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமே ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.
    • 94 சதவீதம் மாணவிகள் எங்கெங்கு தொடுவது தவறானது. எங்கெங்கு தொட்டால் பிரச்சினை இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் பள்ளி மாணவிகளில் 10 பேரில் ஒருவர் பாலியல் தொல்லையை அனுபவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அரசு பள்ளிகளில் மாணவிகள் எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றி சென்னை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் குழுவினர் ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.

    9, 10 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் 300 மாணவிகளிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக மருத்துவர்கள் கேட்க விரும்பிய கேள்விகளை தயாரித்து அதற்கான பதிலையும் நிரப்பி தரும் வகையில் வினாத்தாள்களை தயாரித்து கொடுத்திருக்கிறார்கள். அதற்கான பதில்களை நன்கு யோசித்து எழுதும் வகையில் கால அவகாசம் கொடுத்து அதன் பிறகுதான் அந்த வினாத்தாள்களை சேகரித்து இருக்கிறார்கள். அதில் தான் 10-ல் ஒரு மாணவி பாலியல் தொல்லைகளை அனுபவிப்பது தெரியவந்துள்ளது.

    பொதுவாக பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக 13 சதவீத மாணவிகள் தெரிவித்து உள்ளார்கள். அவர்களில் 72 சதவீதம் பேர் உடல் ரீதியாகவும், 44 சதவீதம் பேர் பாலியல் ரீதியாகவும் தொல்லைகளை அனுபவிப்பதாக தெரிவித்து உள்ளார்கள்.

    18 சதவீத மாணவிகள் உடல் ரீதியாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாவதாக தெரிவித்து உள்ளார்.

    உடல் ரீதியான துன்புறுத்தலை சந்தித்ததில் 82 சதவீதம் பேர் கன்னத்தில் அடி வாங்கியதாகவும், 32 சதவீதம் பேர் காலால் மிதிக்கப்பட்டதாகவும், 14 சதவீதம் பேர் கீழே தள்ளி விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

    7 சதவீதம் பேர் சூடு வைக்கப்பட்டதாகவும் 7 சதவீதம் பேர் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்து உள்ளார்கள். 4 சதவீதம் பேர் கட்டி வைத்து அடிக்கப்பட்டுள்ளார்கள்.

    இந்த மாதிரி துன்புறுத்தல்களை ஒரே ஒரு முறை அனுபவித்தவர்கள் 42 சதவீதம் பேர், எப்போதாவது அனுபவித்தவர்கள் 28 சதவீதம் பேர். மாதம் ஒரு முறை அனுபவித்தவர்கள் 25 சதவீதம் பேர். 18 சதவீதம் பேர் பல முறை அனுபவித்து இருக்கிறார்கள்.

    பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்தவரை தந்தை, நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமே ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

    94 சதவீதம் மாணவிகள் எங்கெங்கு தொடுவது தவறானது. எங்கெங்கு தொட்டால் பிரச்சினை இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறார்கள்.

    இந்த மாதிரி பாலியல் கொடுமைக்கு ஆளாகுபவர்கள் தனது தாய் அல்லது நண்பர்களிடம் தான் சொல்கிறார்கள்.

    மாணவிகளை துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டி உள்ளார்கள்.

    • படித்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இது பற்றி சக ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்தனர்.
    • 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஆசிரியரை போலீசார் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பாட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்சலாம்(வயது57).

    அப்துல்சலாம் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது வகுப்பில் படித்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இது பற்றி சக ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்தனர்.

    அப்போது ஆசிரியர் அப்துல்சலாம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக மாணவி கூறினார்.

    இது பற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரித்தனர். பின்னர் இது குறித்து நிலம்பூர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் அப்துல்சலாம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
    குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பாகுபாடு, அதிகார வன்முறை, கருச்சிதைவு, பால்ய விவாகம் என பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுக்கும் முயற்சியாகக் கொண்டு வரப்பட்டதே ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்’. இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

    பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது மற்றும் கண்டிப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    நாட்டின் முன்னேற்றம், தனிப்பட்ட குடும்பத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தின் முன்னேற்றம், அதில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தில் அடங்கியுள்ளது. இதை உணர்ந்து, வருங்கால தலைமுறைக்குப் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை புரியவைத்து வளர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு நல்லவற்றை போதித்து வளர்ப்பதில் பெரும்பங்கு தாயைச் சார்ந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்ப்பது, பெண்களை மதித்து நடப்பது போன்றவற்றை, ஆண் குழந்தைகளுக்கு பெண்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாற்றத்துக்கான செயல்பாடு நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்.
    போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி சந்தைப்பேட்டைத் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் குருமணி (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார்.

    பின்னர் அவரை திருமணம் செய்வதாக கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் குருமணியின் நண்பரான மாரியப்பன் மகன் ரமேஷ் (வயது 21) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளனர்.

    சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்படவே அவரது பெற்றோர் விசாரித்த போது நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குருமணி மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    விருதுநகர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பட்டாசு ஆலை ஊழியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூரில் உள்ள பட்டாசு ஆலையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் கோபால் (வயது 52).

    இந்த பட்டாசு ஆலை ஊழியர் ஒருவர் வேலைக்கு வரவில்லை. இதனால் கோபால் அந்த ஊழியர் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டார். அதன் பின்னரும் அவர் வேலைக்கு வரவில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கோபால் மீண்டும் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது 17 வயது பிளஸ்-2 படிக்கும் மகள் தனியாக இருந்தார்.

    அப்போது அவர் அந்த மாணவியிடம் ரூ.500 கொடுத்து தீபாவளிக்கு இனாமாக வைத்துக் கொள் எனக்கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த மாணவியின் தாயார் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    ×