search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance meeting"

    • மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • மேயர் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமை தாங்கி பொதுமக்க ளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி, பெயர் மாற்றம் வேண்டி 8 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 4 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 7 மனுக்களும், புதிய குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 5 மனுக்களும், சொத்துவரி, ஆக்கிரமிப்பு மற்றும் சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட இதர கோரிக்கைகள் வேண்டி 30 மனுக்களும் என மொத்தம் 54 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இம்முகாமில் துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலை வர் சரவண புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகரில், 26-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்குகிறார். இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ராமநாதபுரத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ெபறப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு தலைமையேற்று பொதுமக்களிடம் இருந்து 257 மனுக்கள் பெற்றார். அந்த மனுக்கள் மீது மனுதாரர்கள் முன்னிலையில் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வீட்டுமனைபட்டா, முதியோர்உதவித்தொகை, பட்டாபெயர்மாற்றம் உள்ளிட்டகோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் ெபறப்பட்டன. இதில் கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (பொது) சேக் மன்சூர், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) மாரிச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 16-ந் தேதி நடக்கிறது
    • மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக் கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் திருவண்ணா மலை உதவி கலெக்டர் தலைமையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக் கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தெரிவித்துள்ளார்.

    • சென்னை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது விநியோக திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொது விநியோக திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட சென்னை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்த மாதத்திற்கான பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது.

    எனவே பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    • உதவி இயக்குனர் தலைமையில் நடந்தது
    • அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    போளூர்,

    போளூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா தலைமையில் நடைபெற்றது.

    போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு, சமூக நலத்துறை தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல துணை தாசில்தார் சுசிலா வரவற்றார். மாவட்ட விநியோக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

    இதில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    • தொண்டி பேரூராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாகவும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து மதத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் பொது மக்களின் தேவைகளும், கோரிக்கை களும் அதிகம் உள்ளது.

    இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற மக்கள் குறை தீர்க்கும் வகையில் மாதத் தின் முதல் வாரம் செவ்வாய் கிழமையும், மாதத்தின் இறுதிவாரம் செவ்வாய் கிழமையும் காலை 11 மணி முதல் மாலை 2 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாளாக அறிவிக்கப்படுகிறது. அப்போது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 26-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான இரண்டாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவரது குடும்பத்தைச் சார்ந்தோர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் முத்துகுட்டிக்கு உத்தரவிட்டார்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் முத்துகுட்டிக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். கோடைகாலம் நடைபெற்று வருவதால் கோடை காலத்தில் ஏற்படும் திடீர் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மாலை 6 மணிக்கு மேல் மின் நுகர்வு அதிகம் இருக்கும் காரணத்தால் அனைத்து அதிகாரிகளும் தொடர் கண்காணிப்பில் இருக்கவும் தங்கு தடையின்றி மின் வினியோகம் வழங்கவும் உத்தரவிட்டார்.

    • தஞ்சையில் நாளை மாலை 4 மணிக்கு முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
    • முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை ) மாலை 4 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம்.

    இரண்டு பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி கூறினார்
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேலூர் சரகடி.ஐ.ஜி.முத்துசாமி, ராணிப்பேட்டைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக் கள் மற்றும் திருப்தியின்மை காரணமாக மறு விசாரணைக்கு அழைக்கப்பட்ட 8 மனுக்கள் என மொத்தமாக 16 மனுக்கள் பெறப்பட்டன.

    மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி. தெரிவித்தார். கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×