search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goondas act"

    அரியலூரியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் குடும்பத்துடன் 7.9.18 அன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்மநபர்கள் ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி, மகள்களை தாக்கி விட்டு 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயங்கொண்டம் பெரிய வளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (48), திருவாரூர் மனக்கரையை சேர்ந்த பெரியபாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ராமசந்திரன் வீட்டில் 6 பவுன் கொள்ளையடித்ததும், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் அரியலூர் மாவட்ட எஸ்.பி அபினவ்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்
    தொடர்ந்து செல்வம், பெரிய பாண்டி ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர். 
    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
    கடையம்:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குட்டி என்ற கவுளிகுமார் (வயது 35). இவருக்கு மேலகுத்தப்பாஞ்சான் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் மனைவியின் ஊரில் வசித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு மற்றும் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.  

    இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார்  பரிந்துரையில், மாவட்ட கலெக்டர்  ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் பாளை சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு அருகே பெரியார் சிலைகளை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.க. மண்டல தலைவர் பிரகலாதன் தலைமை தாங்கினார்.

    பெரியார் சிலைகளை அவமதிப்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்ய வேண்டும். கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மேலும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், தி.க. மண்டல அமைப்பு செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    கஞ்சா வழக்கு உள்பட 18 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார். அதன் படி மாவட்டம் முழுவதும் தொடர் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    மாவட்டத்தில் கடந்த 9 மாதத்தில் இதுவரை 51 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

    சுசீந்திரம் தேரூர் புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றனி(43) இவர் மீது கஞ்சா வழக்கு உள்பட 18 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. தற்போது கோட்டார் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கில் அவரை கைது செய்து இருந்தனர்.

    எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு பரிந்துரை செய்தார். அவர் ஆன்றனியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஆன்றனியை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசேரி கண்ணுவிளை பகுதியைச் சேர்ந்த ரூபன் (வயது30), நாகர்கோவில் தட்டான்விளை பகுதியைச் சேர்ந்த கவுதம்(31) ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    வடலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் போலீசார் வடலூரில் தனியார் பேக்கரி கடை எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வடலூர், அன்னை சத்யா தெருவை சேர்ந்த அருள்பாண்டி என்கிற அருள்(வயது 29) என்பவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரம்அடைந்த அருள்பாண்டி தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவை வெட்ட முயன்றார். அப்போது அங்கே நின்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பத்மா கொடுத்த புகாரின் பேரில் அருள்பாண்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் மீது வடலூர், மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி ஆகிய 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதையடுத்து அருள்பாண்டியின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்(பொறுப்பு) கலெக்டர் அன்புசெல்வனுக்கு பரிந்துரை செய்தார்.

    இதை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில் அருள்பாண்டியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜெகதீசன் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். #PeriyarStatue #Jagadeesan #GoondasAct
    சென்னை:

    தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழாவையொட்டி திங்கள்கிழமை சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு வந்திருந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் (35) திடீரென பெரியார் சிலை மீது காலணி வீசினார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.



    இந்நிலையில் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜெகதீசன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். #PeriyarStatue #Jagadeesan #GoondasAct
    தேனாம்பேட்டையை சேர்ந்த சி.டி. மணி, 17 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவருடம் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
    சென்னை:

    சென்னை நகரில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    ரவுடிகளும், வழிப்பறி செய்பவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. ரவுடிகள் கைது வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

    தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி சி.டி.மணி. போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது 8 கொலை வழக்கு உள்பட 31 வழக்குகள் உள்ளன. இவருடைய கூட்டாளிகள், அரி, அரிகரன் ஆகியோர் கானத்தூர் சாலையில் போலீசாரிடம் சிக்கினார்கள்.

    திருவான்மியூரில் தனசேகரன், பாரதி, செந்தமிழ்செல்வன், ராஜா ஆகிய 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

    இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவருடம் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் ஒரே நாளில் 18 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. #GoondasAct

    கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார், சிங்காரப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்குட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாலையோரம் ஒருவர் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தார்.

    இதைப் பார்த்த போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அதில் 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

    இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிச்சாண்டி (வயது 43) என்பதும், ரேஷன் அரிசிகளை கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் பிச்சாண்டி தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று பிச்சாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பிச்சாண்டி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
    துறையூரில் போலீசார் எச்சரிக்கையை மீறி அனுமதியின்றி மதுபானம் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    துறையூர்

    துறைமயூர் மதுவிலக்கு அமல் படுத்தும் பிரிவுசரகத்தில் உள்ள முசிறி வட்டம் திண்ணகோனத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 29). இவர் மீது அனுமதியின்றி மதுபானம் விற்றதாக பல வழக்குகள் உள்ளன. 

    தொடர்ந்து போலீசார் எச்சரிக்கை விடுத்தும் மதுபானம் விற்பனையை தொடர்ந்து செய்து வந்ததால் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் மதுவிலக்கு அமல்படுத்தும் பிரிவு மாவட்ட கூடுதல் துனை கண்காணிப்பாளர் சீனிவாசன், துணை கண்காணிப்பாளர்கோடிலிங்கம் ஆகியோர் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர் ராசாமணி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

    அதன் படி துறையூர் மது விலக்கு இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வேல்ருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
    நெல்லிக்குப்பம் அருகே டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி அந்த கட்சி நிர்வாகிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு டாஸ்மாக்கடைக்குள் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் தயாநிதி (வயது 36) தலைமையில் நிர்வாகிகள் தெய்வீகன், பாலசந்தர், சிரஞ்சீவி, விஜயபாரதி, மணிமாறன் ஆகியோர் புகுந்தனர். அங்கிருந்த ரூ.2 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    மேலும் டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தயாநிதி உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய தயாநிதி மீது நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் தயாநிதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார். இதையடுத்து தயாநிதியை நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.

    சுரண்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    சுரண்டை:

    புளியங்குடி முத்துராமலிங்கம் 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (எ) முஸ்தபா இவர் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சுரண்டையில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற போது பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது புளியங்குடி, சொக்கம்பட்டி, திசையன்விளை, வீ.கே புதூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஷில்பா, முஸ்தபாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து சுரண்டை போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    தேவனாம்பட்டினத்தில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் கடலில் மீன்பிடித்தது தொடர்பாக கடந்த 15-ந்தேதி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பயங்கர ஆயுதங்களுடன் தேவனாம்பட்டினம் மீனவர்கள் சோனாங்குப்பத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

    இதில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேவனாம் பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் சதீஷ் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் தண்டபாணி உத்தரவின்பேரில் ஆறுமுகம், சதீஷ் மற்றொரு ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    ×