search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcohol sold"

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயதேவி, பரந்தாமன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை பி.ஆண்டிகுப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது ஏழுமலை (வயது55) என்பவர் தனது வீட்டின் அருகே மது விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஏழுமலையிடம் இருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    அதுபோல் மாளிகைப்பட்டில் பத்மநாபன் மனைவி ரேகா (26) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.934 கோடியே 1 லட்சத்து 8 ஆயிரத்து 104-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    நாள் ஒன்றுக்கு 2½ கோடி முதல் 2¾ கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வருகின்றன. பண்டிகை காலங்களில் மதுபானங்களின் விற்பனை அளவு அதிகமாக இருக்கும். புத்தாண்டையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.9 கோடியே 89 லட்சத்து 645-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளன.

    2018-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஓராண்டில் ரூ.934 கோடியே 1 லட்சத்து 8 ஆயிரத்து 104-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது. டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.83 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரத்து 885-க்கு மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன.

    பிப்ரவரி மாதத்தில் குறைந்தபட்சமாக ரூ.71 கோடியே 58 லட்சத்து 23 ஆயிரத்து 915-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது. ஜனவரி மாதத்தில் ரூ.76 கோடியே 17 லட்சத்து 30 ஆயிரத்து 745-க்கு, மார்ச் மாதத்தில் ரூ.77 கோடியே 90 லட்சத்து 31 ஆயிரத்து 644-க்கும், ஏப்ரல் மாதத்தில் ரூ.81 கோடியே 52 லட்சத்து 67 ஆயிரத்து 355-க்கும் மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது.

    மே மாதத்தில் ரூ.79 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரத்து 825-க்கும், ஜூன் மாதத்தில் ரூ.78 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 590-க்கும், ஜூலை மாதத்தில் ரூ.79 கோடியே 30 லட்சத்து 55 ஆயிரத்து 625-க்கும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.76கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 960-க்கும் மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது.

    செப்டம்பர் மாதத்தில் ரூ.79 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரத்து 355-க்கும், அக்டோபர் மாதத்தில் ரூ.76 கோடியே 11 லட்சத்து 19 ஆயிரத்து 970-க்கும், நவம்பர் மாதத்தில் ரூ.74 கோடியே 99 லட்சத்து 5 ஆயிரத்து 205-க்கும் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அனுமதியின்றி சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியில் சாராயம் விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூயிசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார் இன்று காலை தண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரேமா (வயது38) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருந்தி வாழப்போவதாக உறுதிமொழி கொடுத்து விட்டு மதுபாட்டில் பதுக்கி விற்ற வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் தாங்கல் பி.பி. தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (38). இவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் அவர் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிப்ரியாவை சந்தித்து தான் திருந்தி வாழ்வதாகவும், தன்னை மன்னிக்கும்படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து ராஜன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர் சிறிது காலம் திருந்தி வாழ்ந்தார். இந்த நிலையில் ராஜன் மீண்டும் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்ய தொடங்கினார்.

    இதை அறிந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், ராஜனை கைது செய்து வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிபிரியா முன்பு ஆஜர்படுத்தினார். அப்போது பிரமாண பத்திரத்தை மீறிய சட்டப்படி ராஜனுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து துணை கமி‌ஷனர் ரவளி பிரியா தனக்கு உள்ள அதிகாரத்தின்படி உத்தரவிட்டார்.

    காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இருக்கும் இந்த அதிகாரத்தை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. முதல் முறையாக வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிபிரியா பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    துறையூரில் போலீசார் எச்சரிக்கையை மீறி அனுமதியின்றி மதுபானம் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    துறையூர்

    துறைமயூர் மதுவிலக்கு அமல் படுத்தும் பிரிவுசரகத்தில் உள்ள முசிறி வட்டம் திண்ணகோனத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 29). இவர் மீது அனுமதியின்றி மதுபானம் விற்றதாக பல வழக்குகள் உள்ளன. 

    தொடர்ந்து போலீசார் எச்சரிக்கை விடுத்தும் மதுபானம் விற்பனையை தொடர்ந்து செய்து வந்ததால் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் மதுவிலக்கு அமல்படுத்தும் பிரிவு மாவட்ட கூடுதல் துனை கண்காணிப்பாளர் சீனிவாசன், துணை கண்காணிப்பாளர்கோடிலிங்கம் ஆகியோர் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர் ராசாமணி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

    அதன் படி துறையூர் மது விலக்கு இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வேல்ருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
    டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் ரூ.26,995 கோடியிலிருந்து ரூ.26,794 கோடியாக குறைந்துள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் தங்கமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுக்கடைகளில் திருட்டு நடப்பதை தடுக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 மதுக்கடைகளில் எச்சரிக்கை ஒலி சாதனத்தை நிறுவி உள்ளோம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் 1250 கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்களும், 7 பீர் தயாரிப்பு நிறுவனங்களும், ஒரு ஒயின் தயாரிக்கும் நிறுவனமும் இயங்கி வருகிறது.

    தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பீர் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த ஆண்டில் 10,08,625 பீர் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.161.69 லட்சம் ஏற்றுமதி கட்டணமாக பெறப்பட்டுள்ளது.

    மது விற்பனை மூலம் அரசுக்கு கடந்த 2016-17ம் ஆண்டு ரூ.26,995 கோடியே 25 லட்சம் வருமானம் கிடைத்து இருந்தது. 2017-18ம் ஆண்டில் ரூ.26,794 கோடியே 11 லட்சம் வருமானம் வந்துள்ளது.

    இதில் ஆயத்தீர்வை வருவாய் 2016-17ல் ரூ.6,248 கோடியே 17 லட்சம் வந்தது. 2017-18ல் 6,009 கோடியே 25 லட்சம்தான் கிடைத்துள்ளது. ஆயத்தீர்வை வருவாய் குறைவாகவும், மதிப்பு கூட்டு வரி அதிகமாகவும் இருப்பது, வரி விதிப்பு முறைகளில் செய்யப்பட்ட சில மாற்றங்களால் ஆகும்.

    இந்த தொகை அரசிடம் இருந்து திரும்ப பெறப்பட்ட டாஸ்மாக் நிறுவனத்தால் 2012-13ம் ஆண்டில் மிகையாக செலுத்தப்பட்ட சிறப்புரிமை கட்டணம், விற்பனை கட்டணம் ரூ.193 கோடியே 96 லட்சத்தை கழிப்பதற்கு முன்னதாக உள்ள தொகையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பழுதான 1,66,000 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆந்திராவில் இருந்து 1,000 டிரான்ஸ்பார்மர் கைமாற்றாக வாங்கி இருக்கிறோம். இப்போது டிரான்ஸ்பார்மர் இல்லாத பகுதிகளுக்கு கொடுத்து வருகிறோம்.

    தட்கல் முறையில் வருடத்துக்கு 10,000 மின் இணைப்புகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். பதிவு செய்தவர்களுக்கு கொடுத்து விட்டோம். ஆண்டுக்கு 10,000 மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மின் ஊழியர்கள் பாதுகாப்பு கவசம் இல்லாமல் கம்பங்களில் ஏறுவதாக உறுப்பினர் தெரிவித்தார். மின்வாரியம் பாதுகாப்பு கவசங்களை ஊழியர்களுக்கு கொடுத்து உள்ளது. அவர்கள் அதை கொண்டு வராமல் இருந்து இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly
    ×