search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Washermanpet police assistant commissioner"

    திருந்தி வாழப்போவதாக உறுதிமொழி கொடுத்து விட்டு மதுபாட்டில் பதுக்கி விற்ற வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் தாங்கல் பி.பி. தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (38). இவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் அவர் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிப்ரியாவை சந்தித்து தான் திருந்தி வாழ்வதாகவும், தன்னை மன்னிக்கும்படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து ராஜன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர் சிறிது காலம் திருந்தி வாழ்ந்தார். இந்த நிலையில் ராஜன் மீண்டும் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்ய தொடங்கினார்.

    இதை அறிந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், ராஜனை கைது செய்து வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிபிரியா முன்பு ஆஜர்படுத்தினார். அப்போது பிரமாண பத்திரத்தை மீறிய சட்டப்படி ராஜனுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து துணை கமி‌ஷனர் ரவளி பிரியா தனக்கு உள்ள அதிகாரத்தின்படி உத்தரவிட்டார்.

    காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இருக்கும் இந்த அதிகாரத்தை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. முதல் முறையாக வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவளிபிரியா பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×