search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandhi Jayanti"

    • அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை. இது காந்திய மண் எனச் சூளுரைப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபி ஆகிய தினத்தை முன்னிட்டு அக்டோபா் 2, 9 -ந் தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபா் 2, 9 -ந் தேதிகளில் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், உணவு விடுதிகளுடன் கூடிய அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மேற்கண்ட நாள்களில் மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மாநகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தியன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மீறி செயல்படும் கடைகளில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்துவிதமான ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யவும் கூடாது. மேற்கண்ட கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்கள் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அரசு ஆணையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சிலையை காந்தி ஜெயந்தி தினத்தில் வைக்க முயன்றதால் 4 பேர் கைது செய்யப்பட்டனர். #GandhiJayanti #MahatmaGandhi
    அலகாபாத்:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் உருவ சிலையை வைக்க முயற்சி நடந்தது.

    உத்தரபிரதேச மாநிலம் சித்ரா கூட் மாவட்டத்தில் சக்வாரா என்ற கிராமத்தில் ராஷ்டீரிய சனாதன் தள் அமைப்பினர் கோட்சே சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ராஷ்ட்டீரிய சனாத்தன் தள் அமைப்பின் சித்ரகூட் மண்டல தலைவர் ராமேந்திராவுக்கு சொந்தமான இடத்தில் அந்த சிலை நிறுவப்பட இருந்தது.

    அதை அறிந்த கிராம மக்கள் உஷாராயினர். இது குறித்து சித்ரகூட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமாரிடம் புகார் செய்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கோட்சே சிலையை நிறுவ விடாமல் தடுத்து நிறுத்தினர். சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அது தொடர்பாக ராஷ்ட்டீரிய சனாதன் தள் அமைப்பின் நிறுவன உறுப்பினர் மற்றும் இணை அமைப்பாளர் பிரிஜேஷ் பாண்டே உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களில் 2 பேர் சித்ராகூட் பகுதியை சேர்ந்தவர்கள் ஒருவர் புஷார் பகுதியையும், மற்றொருவர் பாண்டா மாவட்டத்தையும் சேர்ந்தவர் ஆவார். கோட்சே சிலை நிறுவ இருந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #GandhiJayanti #MahatmaGandhi
    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான நேற்று காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. #GandhiJayanti #BurjKhalifa
    இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களுள் முக்கியமானவர் மகாத்மா காந்தி. வன்முறையில் ஈடுபடாமல், சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டதால், மகாத்மா என்று அழைக்கப்பட்டார். இவரது பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம் நாடு முழுவதும் நேற்று (அக். 2) கொண்டாடப்பட்டது. காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினார்கள். நாடு முழுவதும், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 


    இந்த நிலையில் காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, துபாயில் உள்ள உலகின் உயர்ந்த கட்டிமான புர்ஜ் கலிஃபா நேற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கலிஃபா கோபுரத்தில் இந்திய மூவர்ண கொடி மற்றும் காந்தியின் புகைப்படம் மற்றும் வாசகங்களும் அதில் இடம்பெற்றிருந்தது. #GandhiJayanti #BurjKhalifa

    மகாத்மா காந்தி அடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். #GandhiJayanti
    தேசத் தந்தையான மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் அவரது சிலைக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள். காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி அடிகளின் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
    சென்னை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று கலெக்டர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #GandhiJayanti
    சென்னை:

    சென்னை கலெக்டர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2-ந் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப்புகள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

    மீறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GandhiJayanti
    ×