search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fever"

    • கடந்த மாதம் பெய்த மழையின்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
    • ஈக்கள் மூலம் 600 வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன.

    சென்னை:

    சென்னையில் கடந்த மாதம் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென்று பலத்த மழையும் பெய்தது. இந்த திடீர் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் சென்னையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

    பலருக்கு காய்ச்சலுடன் தொண்டைவலி, சளி, இருமல் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் மர்ம காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து வருகிறது.

    இது பெரும்பாலும் சாதாரண பாதிப்புகள் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பலவித உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    மேலும் கடந்த மாதம் பெய்த மழையின்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

    மேலும் சென்னையில் ஈக்களின் பெருக்கமும் அதிகரித்து விட்டது. ஈக்கள் அதிக அளவில் பெருகியதால் அதன்மூலம் வாந்தி, பேதி, காலரா, டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பழங்கள், மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஈக்கள் மொய்ப்பதால், அந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஈக்கள் மூலம் 600 வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த தொற்றுக்களே வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.

    சென்னையில் அதிகரித்து வரும் மர்ம காய்ச்சலால் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெறவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஈக்கள் மூலமே அதிக நோய் பரவுகிறது.

    எனவே மீன் மற்றும் இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்றாக அலசியபின் சாப்பிடலாம். ஈக்கள் மொய்க்கும் இடங்களில் உணவுப்பொருட்களை வைக்கக் கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் கொசு மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் மழைநீர் வடிகால் தொட்டி, வடிகால், நீர்நிலைகள், குப்பை தொட்டிகள் இருக்கும் பகுதிகளில் மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு புகையும் அடிக்கப்படுகிறது. பொதுமக்களும் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்" என்றனர்.

    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    உடுமலை  : 

    கேரளாவில் டெங்கு, எலி காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லைகளில் தகுந்த பரிசோதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலி காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சைக்காக செல்கின்றனர். இதில் எலி காய்ச்சல், டெங்கு ஆகியவற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தற்போது கேரளாவில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே உடுமலை, ஆனைகட்டி உட்பட தமிழக, கேரள எல்லையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் நபர்களை உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்து அனுமதிக்க வேண்டும்.

    எல்லைகளில் மருத்துவ முகாம்களை அமைத்து 24 மணி நேரமும் சுகாதாரத்துறை ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
    • பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூரில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் துவக்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியும் நடைபெற்றது. இதில் சுகாதார மேற்பார்வை யாளர் தமிழ்ச்செல்வி, வார்டு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் சுகாதாரப் பணியா ளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • மருந்து மற்றும் மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் ஆணையாளர் வெங்கடேஷ்வரன் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி காங்கயம் நகராட்சி மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று காலை காங்கயம் நகரம், அண்ணா நகர் பகுதியில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்குண்டான மருந்து மற்றும் மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. இந்த முகாமில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வட்டார சுகாதார ஆய்வாளர் ரகுபதி, நகராட்சி கவுன்சிலர் சிலம்பரசன், டாக்டர்கள் மோகன், கிருத்திகா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் நகர பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பாண்டமங்கலம் பேருராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை மற்றும் கடைவீதி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 119 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பாண்டமங்கலம் பேருராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை மற்றும் கடைவீதி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் அருண் தலைமையில் சுகாதார செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட நடமாடும் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். இதில் 119 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு உள்ள 2 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    முகாமினை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவனேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், வினோத் பாபு, ஆங்கல்ஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    மேலும் இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக் கப்பட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி பகுதியில் 21 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இன்று 73 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத் தில் நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக் கப்பட்டு காய்ச்சல் அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி பகுதியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் 21 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மற்றும் மக்கள் அதிகம் கொண்ட தெருக்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் முகாம் நடந்தது.

    இதனை கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நடமாடும் முகாம்கள் மூலம் அதிகம் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதி களில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பள்ளிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை, மாலை என இரண்டு வேளைகளாக பிரிக்கப்பட்டு மருத்துவ முகாம் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதி களில் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு முகாம்களிலேயே தேவை யான மருந்து, மாத்திரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல் சளி பரிசோதனை செய்ய வும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இது தவிர சுகாதார பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர், ஓ.ஆர்.எஸ். குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    • பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • மொபைல் குழு மூலம் மருத்துவக் ஆலோசனை வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், 52 இடங்களில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 52 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

    அதன்படி மாநகராட்சியின் நான்கு மண்டலத்திலும் தலா ஒரு இடம் வீதம், நான்கு இடங்களில் முகாம் உட்பட, 52 இடங்களில் இந்த முகம் காலை முதல் நடைபெற்று. இது தவிர, நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் வட்டாரத்துக்கு ஐந்து பள்ளிகளில் முதல்கட்டமாக காய்ச்சல் முகாம், மொபைல் குழு மூலம் ஆலோசனை வழங்கினர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:- காய்ச்சல் கண்டறியும் முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், தொடர் காய்ச்சல் பாதிப்பில் இருப்பவர் உடல் நலம் குறித்து அறியப்படும். ஒரு பகுதியில் அதிக காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர் இருந்தால், அப்பகுதியில் மாஸ்கிளினீங், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும். ஏதேனும் உடல்நலக்குறைவு இருந்தால், தங்கள் பகுதியில் நடக்கும் காய்ச்சல் முகாமில் மக்கள் பங்கேற்று, பயன் அடையலாம் என்றார்.

    • திருச்சியில் தயார் நிலையில் உள்ள சிறப்பு வார்டு
    • நோய் அறிகுறிகள் குறித்து மருத்துவக்கல்லூரி டீன் நேரு விளக்கம்

    திருச்சி, 

    சமீபத்திய பருவநிலை மாற்றங்களால் பொதுமக் கள் அதிகம் வைரஸ் காய்ச் சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி மாவட் டத்தை பொருத்தமட்டில் பொழுது சாய்ந்தால் பனிப் பொழிவும், பகலில் சுட் டெரிக்கும் வெயிலும் மக் களை பாடாய்ப்படுத்தி வருகிறது.வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோயின் தாக் கத்தை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மருத் துவக்கல்லூரி டீன் நேரு கூறுகையில், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு தினமும் ஐந் தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக மட்டும் 1,400 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வைரஸ் காய்ச்சல் என்பது தட்பவெப்ப நிலை மாற்றத்தினால் வரக்கூடியது. திருச்சி மாவட்டத்தில் பெரிய அளவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற் போதைய நிலையில் அந்த வார்டில் நோயாளிகள் யாரும் இல்லை.வைரஸ் காய்ச்சலின் நோய் அறிகுறி என்பது உடலை முறிக்கும் அளவுக்கு உடல் வலி, தொண்டை வலி, கண்கள் மற்றும் மூக்கிலிருந்து தண்ணீர் வடிதல், வயிற்றுப்போக்கு, நுரையீரல் சளி ஆகியவையாகும். மேற்கண்ட நோய் அறிகுறிகள் கலந்திருந்தால் வைரஸ் காய்ச்சல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இந்த அறிகுறி இருப்பவர்களுக்கு 3 நாட்கள் காய்ச்சலின் தாக்கம் இருக் கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள், இணை வியாதிகள் இல்லாதவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் 3 நாட்களில் தானாகவே சரியாகிவிடும்.அதற்கு மேலும் மேற் கண்ட நோய் அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத் துவமனைகளில் உள்நோயாளிகளாக சேர்ந்து விடவேண்டும். டாக்டர்கள் சளி மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுள் ளதா? என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பார்கள்.பொதுமக்கள் வைரஸ் காய்ச்சல் குறித்து எந்தவித அச்சமும் உள்ள தேவையில்லை. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது. 24 மணி நேரமும் சிறப்பு வார்டில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டு உள் ளார்கள் என்றார்.

    • நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் 32 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது.
    • காய்ச்சல் இருந்தால் மக்களே தானாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    வேலூர்:

    வேலூரில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பதிவாகவில்லை.

    வேலூர் மாநகர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 197 பேருக்கும், பிப்ரவரி மாதம் 142 பேருக்கும், மார்ச் மாதம் தற்போது வரை 17 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் 32 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. இதில் 10 பேர் மட்டுமே வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்ற 22 பேரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

    மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகள், 46 ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்து மாத்திரைகள், படுக்கை வசதிகள் போதுமானதாக உள்ளது.

    காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுவோருக்கு இன்புளூயன்சா உள்ளதா என தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். நேற்று மட்டும் மாநகர பகுதிகளில் 81 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளோம்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடத்தில் தூய்மை பணி, கண்காணிப்பு செய்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சலால் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் விவரங்களை தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    காய்ச்சல் இருந்தால் மக்களே தானாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    சளி, தொண்டை வலி, மூக்கில் நீர் வழிதல், உடல் வலி உள்ளிட்டவை இன்புளூயன்சாவுக்கான அறிகுறியாக பார்க்கப்பட்டாலும், இவை சாதாரண காய்ச்சலுக்கும் பொருந்தும் என்பதால் பரிசோதனை மூலமே தெரியவரும். கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சூடான தண்ணீரை குடித்தல், சூடான உணவை உண்ணுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தால் போன்றவை மூலம் காய்ச்சல் பரவலை தடுக்க முடிக்க முடியும்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் அஞ்ச வேண்டாம் அவை சாதாரண காய்ச்சலாக இருக்கலாம் அதிகமாக காய்ச்சல் இருக்கும் சமயத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். என்று சுகாதார குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் உள்ள 30 வைரஸ் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள் மூலம் சோதனை மேற்கொண்டது.
    • காய்ச்சலுக்கு காரணம் ‘எச்3என்2’ வைரஸ் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    காய்ச்சலும் குணமாகி விட்டது. இருமலும் கொஞ்சம் பரவாயில்லை.

    தொண்டை கரகரப்புதான் குறையமாட்டேங்குது என்ற உரையாடல் பெரும்பாலான இடங்களில் கேட்கிறது.

    இந்த கரகரப்பு சத்தம் நம்மூரில் மட்டுமல்ல நாடு முழுவதும் கேட்கிறது.

    இதற்கு காரணம் புதிதாக அவதாரம் எடுத்துள்ள 'எச்-3 என்2' என்ற வைரஸ் தான் என்பதை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். தொடர்ந்து ஏராளமானவர்கள் காய்ச்சல், இருமல் என்று ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுக்கிறார்கள்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் உள்ள 30 வைரஸ் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள் மூலம் சோதனை மேற்கொண்டது.

    அப்போது தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் 'எச்3என்2' வைரஸ் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

    இன்புளூயன்சா காய்ச்சலை உருவாக்கும் மற்றவகை வைரசைவிட இந்த வைரஸ் தாக்கினால் ஆஸ்பத்திரிக்கு செல்ல வைத்துவிடுகிறது.

    இந்த வைரஸ் தாக்கும் நோயாளிகளில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சல், 86 சதவீதம் பேருக்கு இருமல், 27 சதவீதம் பேருக்கு சுவாசப் பிரச்சினை, 16 சதவீதம் பேருக்கு வீசிங் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானர்வர்கள் மூச்சுக்குழாய் 'இன்பெக்ஷன்' காரணமாக தொண்டை வலி மற்றும் கரகரப்புக்கு ஆளாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    • பொக்லைன் எந்திரம் மூலமாக கால்வாய் ஓடைகள் தூர்வாரும் பணி நடைபெற்றது.
    • குடி தண்ணீரின் தரம் குறித்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி டவுன் மண்டலத்துக்கு உட்பட்ட 26- வது வார்டு பகுதியான டவுன் தென்பத்து பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் படி கவுன்சிலர் பிரபா சங்கரி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை வைத்தார்.

    அதன்படி கமிஷனரின் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலமாக அப் பகுதியில் உள்ள கால்வாய் ஓடைகள் தூர்வாரும் பணி நடைபெற்றது.

    சமீபத்தில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் சுகாதாரத் துறையினர் உடனான கூட்டம் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் மாநகரப் பகுதியில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக தடுக்கும் விதமாக ஓடைகள் தூர்வாருதல், சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடப்பதை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வைத்துள்ள குடி தண்ணீரில் தரம் உள்ளிட்டவை வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் பிளிச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது.
    கொசுக்களில் இருந்து பரவும் டெங்கு காய்ச்சல் உடல் ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தக்கூடியது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண்களையொட்டிய பகுதியில் வலி, எலும்பு பகுதிகளில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சலுடன் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை பெறுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும்.

    ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயிலிருந்தும் மீள்வது எளிது. எனினும் டெங்கு காய்ச்சல் காரணமாக, உடலில் உள்ள பிளேட்லெட் எனப்படும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். மேலும் ரத்த அணுக்களை நிறமற்றதாக மாற்றுவதால் ரத்த உறைவு பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும். அப்படி பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். அப்போது சில பக்க விளைவுகள் ஏற்படலாம். எனினும் டெங்குவால் நீண்டகால பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    டெங்கு காய்ச்சல் உடலை பலவீனப்படுத்தி தசை மற்றும் மூட்டுகளில் வலிகளை ஏற்படுத்தும். எழுந்து நடமாட முடியாத நிலையையும் சிலர் எதிர்கொள்ள நேரிடும். நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகும். ஒருமுறை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானால் நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில மாதங்களாகும். அதற்குள் இரண்டாவது முறையாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்பு கடுமையாக இருக்கும்.

    அதனால் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தொய்வு ஏற்படக்கூடாது. நீர், இளநீர், பப்பாளி சாறு போன்ற திரவங்களை உட்கொள்வது டெங்கு நோயில் இருந்து விரைவில் மீள்வதற்கு உதவும்.
    ×