என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
கேரளாவில் வேகமாக பரவும் காய்ச்சல் தமிழக எல்லைகளில் பரிசோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா?
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உடுமலை :
கேரளாவில் டெங்கு, எலி காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லைகளில் தகுந்த பரிசோதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலி காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சைக்காக செல்கின்றனர். இதில் எலி காய்ச்சல், டெங்கு ஆகியவற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது கேரளாவில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே உடுமலை, ஆனைகட்டி உட்பட தமிழக, கேரள எல்லையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் நபர்களை உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்து அனுமதிக்க வேண்டும்.
எல்லைகளில் மருத்துவ முகாம்களை அமைத்து 24 மணி நேரமும் சுகாதாரத்துறை ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






